Advertisment

மதம் மாறிய பட்டியலின மக்களுக்கு எஸ்.சி அந்தஸ்து: முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பு

பூர்வீகமாக பட்டியலினத்தைச் சேர்ந்து பிற மதங்களுக்கு மாறியவர்களுக்கும் எஸ்.சி அந்தஸ்து வழங்கவதற்கான கோரிக்கை குறித்து ஆலோசிக்க முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
மதம் மாறிய பட்டியலின மக்களுக்கு எஸ்.சி அந்தஸ்து: முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பு

Former CJI KG Balakrishnan. (File)

பூர்வீகமாக பட்டியலினத்தைச் சேர்ந்து பிற மதங்களுக்கு மாறியவர்களுக்கும், (குறிப்பாக இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதங்களுக்கு மாறியவர்களுக்கு) எஸ்.சி அந்தஸ்து வழங்கவதற்கான கோரிக்கை குறித்து ஆலோசிக்க முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது.

Advertisment

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி,

இந்த ஆணையத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் ரவீந்தர் குமார் ஜெயின் மற்றும் யுஜிசி உறுப்பினர் பேராசிரியர் டாக்டர். சுஷ்மா யாதவ் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கோரிக்கை குறித்து ஆலோசித்து ஆணையம் 2 ஆண்டுகளுக்குள் அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையை ஆராய மத்திய அரசு ஆணையம் ஒன்றைய அமைக்க முடிவு செய்தது. இதுகுறித்து செப்டம்பர் 19-இல் இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்து வெளியானது.

1950ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் (பட்டியியல் சமூகம்) ஆணையின்படி, இந்து, சீக்கியம் மற்றும்

பௌத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே எஸ்.பி அந்தஸ்து வழங்க அனுமதிக்கிறது. முதலில் பட்டியலின இந்துகளுக்கு மட்டுமே எஸ்.பி அந்தஸ்து வழங்கப்பட்ட நிலையில், பின்னர் அதில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டு சீக்கியம் மற்றும் பௌத்தம் சேர்க்கப்பட்டது.

பிற மதத்தினருக்கும் எஸ்.பி அந்தஸ்து வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. 2020ஆம் ஆண்டு இதே கோரிக்கையை வலியுறுத்தி தேசிய தலித் கிறிஸ்தவர்கள் கவுன்சில்(என்சிடிசி) தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த நேரத்தில் மத்திய அரசு புதிய ஆணையம் அமைத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் இதுகுறித்தான விசாரணையின் போது, இப்பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் நிலைப்பாட்டை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்ற விசாரணையின் போது, தலித் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து பாகுபாடுகளை எதிர்கொள்கின்றன எனத் தெரிவித்தது. மேலும் இந்த அமைப்புகள் மத்திய அரசு ஆணையம் அமைத்த நடவடிக்கையை எதிர்த்து விமர்சனம் செய்தனர்.

மத்திய அரசு நியமித்த ஆணையம், தற்போதுள்ள கோரிக்கை ஏற்கனவே உள்ள எஸ்.சி சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?, பழக்கவழக்கங்கள், மரபுகள், சமூக மற்றும் பிற பாகுபாடுகள் அடிப்படையில்

மற்ற மதங்களுக்கு மாறுவதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் ஆணையம் ஆய்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கை குறித்து பேசிய என்சிடிசி தலைவர் விஜய் ஜார்ஜ், "இது வழக்கை தாமதப்படுத்தும் அரசின் தந்திர நடவடிக்கை. இந்த வழக்கில் முடிவு காண அரசு விரும்பவில்லை. இந்த விவகாரம் குறித்து கடந்த காலங்களில் பல ஆணையங்கள், கமிட்டிகள் அமைக்கப்பட்டு அரசிடம் அறிக்கை சமர்பித்துள்ளது. ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் உள்பட இப்பிரச்னையில் ஆதரவாக அறிக்கை சமர்பித்தது. இவ்வாறு இருந்தபோதிலும் தற்போது மற்றொரு ஆணையம் எதற்கு? பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு எஸ்.சி அந்தஸ்து வழங்கப்பட்டபோது இதுபோன்று ஆணையம் அமைக்கப்படவில்லை. இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது. சாதி, மதம் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுகிறது" என்று தெரிவித்தார்.

அகில இந்திய பாஸ்மாண்டா இஸ்லாம் மஹாஸ் நிறுவனரும், பீகார் முன்னாள் ராஜ்யசபா எம்.பியுமான அலி அன்வர் அன்சாரி கூறுகையில், 2024 தேர்தலை எதிர்கொள்ள அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது வழக்கை தாமதப்படுத்தும் செயல் என விமர்சித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment