Advertisment

பிஎம்சி வங்கி முறைகேடு : கடந்த 24 மணி நேரத்தில் 3 வாடிக்கையாளர்கள் மரணம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PMC bank Depositor ,PMC bank depositor Ex jet Airway Staffer Dies :

PMC bank Depositor ,PMC bank depositor Ex jet Airway Staffer Dies :

பல்வேறு முறைகேடுகளுக்காக இந்தியா ரிசர்வ் வங்கி பி.எம்.சி கூட்டுறவு வங்கியின் மீது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . பி.எம்.சி வங்கியில் அதன் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எடுக்க கடந்த மூன்று வாரங்களில் பெரும் கட்டுப்பாட்டையும் விதித்திருந்தது. இதன் காரணமாக , கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் அவ்வங்கியின் வாடிக்கையாளர்கள், மன அழுத்தம் காரணமாக  மூன்று பேர் மரணம் அடைந்துள்ளனர்.

Advertisment

இந்த மூவரில், இரண்டு பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர் என்று அவர்களது குடும்ப சொந்தங்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள ஒருவர் மன அழுத்தம், பயம் போன்ற காரணிகளால் தற்கொலை செய்து கொண்டதாக போலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.

முன்னாள் ஜெட் ஏர்வேஸின் மூத்த தொழில்நுட்ப வல்லுநரான சஞ்சய் குலாட்டி ( ஜெட் ஏர்வேஸ் நஷ்டத்தால் கடந்த வருடம் இவருக்கு வேலை பரிபோனது என்பது குறிப்பிடத்தக்கது )  திங்கள்கிழமை ஓஷிவாராவில் உள்ள தனது வீட்டில் இரவு  உணவை முடித்த பிறகு  மாரடைப்பால் இறந்திருக்கிறார்.

59 வயதான ஃபத்தோமால் பஞ்சாபி  செவ்வாய்க்கிழமை நண்பகல் முலுண்டின் சிந்தி காலனியில் உள்ள தனது மின்னணு கடையில் பணி செய்து கொண்டிருக்கும் போது உயிரை பறிக் கொடுத்துள்ளார்.

39 வயதான யோகிதா பிஜ்லானி என்ற பெண் மருத்துவர் ,  கடந்த ஆண்டு அமெரிக்காவிலிருந்து மும்பைக்கு வந்து வாழ்கையைத் தொடங்கிய இவர், மன அழுத்தம் தாளாமல்  தூக்க மாத்திரியை பயன்படுத்தி உயிரை விடித்துள்ளார்.

சஞ்சய் குலாட்டி

மரணம் அடைந்த நாளன்று, பி.எம்.சி வாங்கிக்கு எதிராக போரட்டத்தில் சஞ்சய் குலாட்டி நேரடியாக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவரின் தந்தை தெரிவிக்கையயில் , "என் மகனுக்கு வேறு எந்த வங்கியிலும் கணக்கு கிடையாது. சம்பாதித்த ஒட்டு மொத்த பணத்தையும் இந்த வங்கியில் தான் சேமித்து வந்தார். அன்று  போராட்டம் முடிந்து வீட்டிற்கு பசியோடு என் மகன் வந்தான், சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே சரிந்து விட்டான்.... என் மகன் மிகவும் ஆரோக்கியமானவன், இது வரை உடல்நலக் கோளாரால் அவதிப்பட்டதில்லை, என்று 80 வயதான சஞ்சய் குலாட்டின் தந்தை கண்ணீரோடு தெரிவித்தார்.

அன்ஹாத் காந்த் என்ற இன்னொரு பி.எம்.சி வங்கி வாடிக்கையாளர் இது குறித்து தெரிவிக்கையில், "அன்று சஞ்சய் குலாட்டி மிகவும் ஆக்ரோஷாமாக வங்கிக்கு எதிராக வாசகங்களை எழுப்பினார். எல்லோரும் கலைந்து சென்ற பிறகும், குலாட்டி போராட்ட இடத்தை விட்டு நகரவே இல்லை. தற்போது, அவர் மரணமடைந்த செய்தி என்னால் நம்பமுடியவில்ல. கூட்டத்தில் கத்தும்போது இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் இந்த மனிதர் இறந்து விடுவார் என்று நான் நினைக்கவே இல்லை" என்று மனம் உருகினார்.

ஃபத்தோமால் பஞ்சாபி

நண்பர்கள் ஃபத்தோமால் பஞ்சாபின்  இழப்பு குறித்து தெரிவிக்கையில்,  'ஏற்கனவே, வியாபார ரீதியான தோல்வி ஏற்கனவே அவர் மனதை தாக்கியிருந்தது, மேலும்  இந்த ஆண்டு தொடக்கத்தில் அவரின் மனைவியிம், மருமகனும் இறந்த செய்தி, அவரை மேலும் வாழ்க்கையின் விளிம்பில் கொண்டு சென்றது. பி. எம்.சி வங்கி முறைகேடு  ஃபத்தோமால் பஞ்சாபின் வாழக்கையை முற்றுப் புள்ளி வைத்து முடித்துவிட்டது " என்றனர்.

 

யோகிதா பிஜ்லானி

பிஜ்லானி என்ற பெண் தனது கணவருடன் கொலம்பியாவில் (தென் கரோலினா) கடந்த ஆண்டு வரை வசித்து வந்தார். ஆனால், தற்போது தனது பெற்றோர் மற்றும் ஒரு வயது மகனுடன் அந்தேரி வெஸ்டில் வசித்து வந்திருக்கிறார். தூக்கமாத்திரையை அளவுக்கு அதிகமாக எடுத்து உயிர் துறந்த  பிஜ்லானி பற்றி காவல் துறையினர் தெரிவிக்கையில், "மரண வாக்குமூலம் எதையும் எழுதவில்லை, பி.எம்.சி வங்கி கணக்கில் 90 லட்சம் வரை பூட்டு வைத்திருக்கிறார், சமிப காலமாகவே மன அழுத்தத்தில் வாழ்ந்து வந்திருக்கிறார், கொலம்பியாவிலும் ஒரு முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட செய்தியும் எங்களுக்கு வந்திருக்கிறது" என்று தெரிவித்தனர்.

Reserve Bank Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment