Advertisment

பாரத் ஜோடோ யாத்திரையில் இணைந்த முன்னாள் RAW அதிகாரி.. ராகுலுக்கு பாராட்டு

டெல்லியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் உளவுத்துறை அமைப்பான ரா அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலாத் கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டார்.

author-image
WebDesk
New Update
பாரத் ஜோடோ யாத்திரையில் இணைந்த முன்னாள் RAW அதிகாரி.. ராகுலுக்கு பாராட்டு

டெல்லியில் நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு அமைப்பின் (R&AW) முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலத் கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டார். இதற்கு முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் யாத்திரையில் கலந்து கொண்டார். இரு மூத்த அதிகாரிகள் ராகுலின் யாத்திரையில் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகவும், தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

துலாத்தின் நடவடிக்கையை பா.ஜ.க கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ராஜன் போலவே துலாத்தையும் யாத்திரையில் பங்கேற்ற கோரி ராகுலிடமிருந்து தனிப்பட்ட முறையில் அழைப்பு பெற்றுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் பல முக்கிய பிரமுகர்களுக்கு தனிப்பட்ட கடிதங்களை எழுதினார். அதில் நாட்டின் பாரம்பரியத்தை மீட்கவும், நாட்டில் நிலவும் சமத்துவமின்மை, வன்முறை சர்வாதிகாரம் ஆகியவற்றிக்கு எதிராக நடைபெறும் அணிவகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

1965 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான துலத், புலனாய்வுப் பிரிவில் (IB) சிறப்பு இயக்குநராகப் பணியாற்றினார். காஷ்மீர் தொடர்பான பிரச்சனைகளில் முன்னணி நிபுணராக கருதப்படுகிறார். 1980களில் ஸ்ரீநகரில் IB அதிகாரியாகப் பணியாற்றினார். ராகுல் காந்தி ஜனவரி 30ஆம் தேதி ஸ்ரீநகரில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து யாத்திரையை நிறைவு செய்கிறார்.

1999 முதல் 2004 வரை அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமர் அலுவலகத்தின் போது துலத்தின் பதவிக்காலம் குறித்து பாஜக கேள்வி எழுப்பிய போதிலும், அவர் காஷ்மீர் குறித்த அதன் ஆலோசகராக இருந்துள்ளார். அந்தக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு ‘காஷ்மீர்: தி வாஜ்பாய் ஆண்டுகள்’ என்ற புத்தகத்தையும் துலத் எழுதியுள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய துலத், யாத்திரரையில் பங்கேற்றது ஒரு அற்புதமான அனுபவம். அருமையானது மற்றும் விதிவிலக்கானது. துலாத் 1 மணி நேரம் ராகுலுடன் யாத்திரையில் பங்கேற்று நடந்தார்.

துலாத் மேலும் கூறுகையில், எனது நண்பர் சுதீந்திர குல்கர்னி ஹரியானாவில் ராகுலுடன் இணைந்து நடந்தார். அப்போது அங்கு எடுத்த சில புகைப்படங்களை எனக்கு அனுப்பியிருந்தார். அது என்னை யாத்திரையில் பங்கேற்க ஊக்கப்படுத்தியது. இறுதியில், எனக்கும் அழைப்பு வந்தது நானும் பங்கேற்றேன் என்றார்.

நான் அரசியல்வாதி அல்ல. ஆனால் ஓய்வு பெற்ற ஒருவர் இவ்வாறான நிகழ்ச்சியில் பங்கேற்பது தவறா? ஓய்வு பெற்ற ஒருவ அற்புதமான ஒன்று, நம்பமுடியாத ஒன்று ராகுலைக் கூறினார். யாத்திரையின் உண்மையான முயற்சி என்னை அதிகம் ஈர்த்தது என்று அவர் கூறினார். ராகுலின் இத்ததைய முயற்சியை இனி வேறு யாரும் செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. யாரும் அதைச் செய்யவில்லை. இது போன்று இனி யாரும் நீண்ட தூரம் நடக்கப் போகிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. இந்தியாவின் எண்ணத்தை ஊக்குவிக்கிறார்கள் என்றார்.

இந்த நடவடிக்கையின் மூலம் துலாத் காங்கிரஸில் இணைகிறாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் சிரித்தார், தொடர்ந்து, "30 வருடங்கள் மேல் கடந்து விட்டன. அரசியலுக்கு வருவதற்கு எனக்கு வயதில்லை. நான் காங்கிரஸில் சேருகிறேன் என்று யாரேனும் கூறுகிறார்கள் என்றால். இல்லை, இல்லை… காங்கிரஸ் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து, நாங்கள் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றியுள்ளோம். பா.ஜ.கவில் உள்ளவர்களை விட பல காங்கிரஸ்காரர்களை எனக்கு தெரியும். நான் அடலுடனும் பணியாற்றி உள்ளேன். அவர் ஒரு அற்புதமான மனிதர்" என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment