மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள்; பெரும்பான்மை இடங்களைப் பிடித்த பாஜக
Haryana, Maharashtra Election Opinion Poll Results: மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் சட்மன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பிறகான எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. இதில் பாஜக பெரும்பாண்மையான இடத்தில் வெற்றி பெறும் என்று ஊடகங்கள் தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளனர்.
By: WebDesk
Updated: October 23, 2019, 06:33:48 PM
Exit poll, Opinion poll, Haryana, maharashtra election, election in maharashtra, haryana election, exit poll 2019 election maharashtra, exit poll of haryana 2019, haryana news, மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல், மகாராஷ்டிரா ஹரியானா தேர்தல் எக்ஸிட் போல், மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் 2019, exit poll maharashtra 2019, election in haryana, haryana election opinion poll, exit poll 2019, maharashtra election exit poll
Maharashtra, Haryana Election 2019 Exit Poll: மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் சட்மன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பிறகான எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. இதில் பாஜக பெரும்பாண்மையான இடத்தில் வெற்றி பெறும் என்று ஊடகங்கள் தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று (அக்டோபர் 21) தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களித்தனர். ஹரியானா மாநிலத்தில் மாலை 6 மணி வரை 65 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வருகிற 24 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.
மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து வாக்குப்பதிவுக்கு பிறகான எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அதன்படி, டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பில், மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி 230 தொகுதிகளிலும் காங்கிரஸ் – தேசிவாத காங்கிரஸ் கூட்டணி 48 தொகுதிகளிலும் மற்றவை 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிவி 9 மராத்தி சிசேரோ வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பில், மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி 197 தொகுதிகளிலும் காங்கிரஸ் – தேசிவாத காங்கிரஸ் கூட்டணி 75 தொகுதிகளிலும் மற்றவை 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.என்.என் நியூஸ் 18 ஐபிஎஸ்ஓஎஸ் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பில் மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி 243 தொகுதிகளிலும் காங்கிரஸ் – தேசிவாத காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளிலும் மற்றவை 4தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே – ஆக்ஸிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி 166 – 194 தொகுதிகளிலும் காங்கிரஸ் – தேசிவாத காங்கிரஸ் கூட்டணி 72 – 90 தொகுதிகளிலும் மற்றவை 22 – 34 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா டுடே – ஆக்ஸிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் முடிவில் பாஜக – 109-124 தொகுதிகளிலும், சிவசேனா – 57-70 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32-40 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் 40-50 தொகுதிகளிலும் மற்றவைகள் 22-32 தொகுதிகளிலும் விபிஏ – 0 – 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, ஹரியானா மாநிலத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, ஹரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக – 71 தொகுதிகளிலும் காங்கிரஸ் 11 தொகுதிகளிலும் இந்திய தேசிய லோக் தளம் அகாலி – 0 ஏதும் இல்லை என்றும் மற்றவைகள் 8 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா நியூஸ் – போல்ஸ்ட்ராட் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகளின்படி ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் பாஜக – 75 – 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் 9 – 12 தொகுதிகளிலும் இந்திய தேசிய லோக் தளம் அகாலி – 0 – 1 தொகுதியிலும் மற்றவைகள் 1 – 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் எக்ஸ் – போல்ஸ்ட்ராட் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகளின்படி ஹரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக – 75 – 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் 9 – 12 தொகுதிகளிலும் இந்திய தேசிய லோக் தளம் அகாலி – 0 – 1 தொகுதியிலும் மற்றவைகள் 1 – 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.