Advertisment

அவகாசம் நீட்டிப்பு: தனிநபர் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி இதுதான்

இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு்ளளது.

author-image
WebDesk
New Update
அவகாசம் நீட்டிப்பு: தனிநபர் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி இதுதான்

இந்தியாவில்  வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தியாவில், 2019-2020 (FY20) நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ​​தனிநபர்கள் வருமானவரி தாக்கல் செய்ய ஜனவரி 10 ந் தேதி வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. 2019-20 மதிப்பீட்டு ஆண்டிற்கான ஐ.டி.ஆர் தாக்கல் செய்வதற்கான ஜூலை 31, 2020 கடைசி நாளான அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்றுபாதிப்பு தீவிரமடைந்ததால நவம்பர் 30 வரை நீடிக்கப்பட்டது.

அதன்பிறகும் கொரோனா கட்டுக்குள் வராத நிலையில், டிசம்பர் 31, 2020 வரை நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது கடைசி தேதியாக 2021 ஜனவரி 10 வரை நீட்டித்துள்ளது. மேலும் பெரிய நிறுவனங்கள் தங்களது பங்குதார்ர்களுடன் ஐடிஆர்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி  பிப்ரவரி 15, 2021 ஆக நீடிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் அல்லாத, தணிக்கை செய்யப்படாத வரி செலுத்துவோர் ஐ.டி.ஆர்களைத் தாக்கல் செய்வதற்கும், கடைசி தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், நேரத்தில் கடைசி நிமிட ஐடிஆர் தாக்கல் செய்பவர்களுக்கு மட்டுமே  கூடுதல் நேரம் வழங்கப்படுகிறது, ”என்று நங்கியா அண்ட் கோ எல்எல்பியின் பங்குதாரர் ஷைலேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவின்படி ஐடிஆர் தாக்கல் செய்ய காத்திருக்கும் வரி செலுத்துவோர் கூடுதல் 1 மாத வட்டியை செலுத்த வேண்டியிருக்கும். எனவே கால நீடிப்புக்கு காத்திருக்காமல் அனைவரும் முன்கூட்டியே வரி செலுத்த முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், வரி தணிக்கை அறிக்கை, மற்றும் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை 44 ஏபி பிரிவின் கீழ் பிப்ரவரி 28 வரை நீட்டிக்குமாறு நேரடி வரி வல்லுநர்கள் சங்கம் (டிடிபிஏ) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா தொற்றுநோய் பாதிப்பில் இருந்து இன்னும் இயல்புநிலைக்கு திரும்பாததால், 2020-21 மதிப்பீட்டு ஆண்டின் வருமான வரி தாக்கல் செய்வதை மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் தொழில் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நீடிப்பு, தேவையான தகவல்களைத் தொகுத்து, வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரியை நீட்டிக்கப்பட்ட தேதிக்குள் தாக்கல் செய்வதற்கும் தாமதமானால் அபராதம் செலுத்த வேண்டி வருவதால், இந்த அபராத்த்தை தவிர்க்கவே கூடுதல் நாட்கள் வழங்குகிறது ”என்று டெலாய்ட்டின் பங்குதார்ர் ஆர்த்தி ரோட்டே தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Itr Filling Income Tax Returns
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment