Advertisment

என்.சி.பி 2019-ல் பா.ஜ.க-வை அணுகியது: ஃபட்னாவிஸ் பரபரப்பு பேச்சு

2019 தேர்தல் முடிவுக்குப் பின் என்.சி.பி தான் பா.ஜ.கவை அணுகியது. இது கட்சித் தலைவர் சரத் பவாருக்குத் தெரியும் என்று ஃபட்னாவிஸ் கூறினார். இதையடுத்து ஃபட்னாவிஸ் பொய் சொன்னதாக என்.சி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.

author-image
WebDesk
New Update
என்.சி.பி 2019-ல் பா.ஜ.க-வை அணுகியது: ஃபட்னாவிஸ் பரபரப்பு பேச்சு

மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நேற்று (திங்களன்று) புது சர்ச்சையைக் கிளப்பினார். நவம்பர் 2019-இல் மகாராஷ்டிரா தேர்தல் முடிவுக்குப் பின் என்.சி.பி தான் பா.ஜ.கவை அணுகியது. அஜித் பவார் அப்போது பா,ஜ.கவிடம் வந்தது குறித்து என்.சி.பி தலைவர் சரத் பவாருக்குத் தெரியும் என்று கூறினார். இது மகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நவம்பர் 23, 2019 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான போது ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து சிவசேனா, என்சிபி, மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்தன. இந்நிலையில் ஃபட்னாவிஸைத் தவிர என்.சி.பியின் அஜித்தும் மாநிலத்தையே திகைக்க வைத்தார். அஜித் பவார் பா.ஜ.க பக்கம் சென்றார். ஃபட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் துணை முதல்வராகவும் திட்டமிட்டனர்.

நேற்று மாலை TV9 மராத்தி சேனலின் ‘மகாராஷ்டிரா சா மஹாசங்கல்ப்’ நிகழ்ச்சியில் பேசிய ஃபட்னாவிஸ், சரத் பவார் சென்ற பிறகுதான் அஜித்தும் அவரும் பதவியேற்றதாக கூறினார்.

ஃபட்னாவிஸின் கருத்துக்கு பவார் மறுப்பு தெரிவித்து பதிலடி கொடுத்தார். "பட்னாவிஸ் பண்பு மற்றும் ஒழுக்கம் அறிந்த நபர் என்று நினைத்தேன், ஆனால் அவர் பொய்களை கூறிவருகிறார்" என்று விமர்சித்தார்.

ஃபட்னாவிஸ் கூறுகையில், "உத்தவ் தாக்கரே காங்கிரஸ் மற்றும் என்சிபியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேசமயம் எங்களுக்கு என்சிபியிடம் இருந்து அழைப்பு வந்தது. ஒரு நிலையான அரசாங்கம் அமைய விரும்புவதாகவும், அதற்கு நாம் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் என்சிபி கூறியது. நாங்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தோம். சரத் ​​பவாருடன் பேச்சு வார்த்தை நடந்தது. சரத் பவாருடன் பேசிய பிறகுதான் நாங்கள் ஆட்சி அமைக்க முடிவு செய்தோம். எங்களை அணுகியது என்சிபி தான்" என்று கூறினார்.

2019-ம் தேர்தல் முடிவுக்குப் பின் பாஜகவின் நீண்டகால கூட்டணி கட்சியான சிவசேனா தான் முதலில் முரண்பட்டது. யார் முதல்வர் நாற்காலியைப் பெறுவது என சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், காங்கிரஸ்-என்சிபி கூட்டணியை நோக்கி சேனா திசைதிருப்பியதால், ஃபட்னாவிசும் அஜித்தும் பதவியேற்க திட்டமிட்டனர்.

பாஜகவுடன் கைகோர்க்கும் அஜித்தின் முடிவு தனிப்பட்டது என சரத் பவார் அப்போது அறிவித்தார். அவரது இந்த முடிவை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். மூன்று நாட்களில், அஜித் தான் ஆட்சி அமைக்க தேவையான என்சிபி எம்எல்ஏக்களை பெறத் தவறியதால், ஃபட்னாவிஸ் அரசு கவிழ்ந்தது. விரைவில், அஜித் என்சிபிக்குத் திரும்பினார். மறைமுகமாக அவரது மாமா மற்றும் கட்சி தலைவரான சரத் பவாரால் கண்டிக்கப்பட்டார். 2 நாட்கள் அவர் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. மும்பையில் உள்ள தனது சகோதரரின் வீட்டில் தங்கி இருந்தார். அவர் மொபைல் அப்போது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

பவார், அவரது மகள் சுப்ரியா சுலே மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் அஜித்துடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தி, பா.ஜ.கவுடன் கூட்டணி வேண்டாம் என்று அவரை சமாதானம் செய்தாக என்சிபி கூறியது.

பேட்டியின் போது அஜித்தின் கிளர்ச்சி தோல்வியடைந்ததா என்ற கேள்விக்கு ஃபட்னாவிஸ் பதிலளித்தார்." இது கிளர்ச்சியா? எனக் கூறி தொடர்ந்து அஜித்தைப் புகழ்ந்தார். அவர் நேர்மையானவர். எங்களை ஏமாற்றும் நோக்கத்தில் அவர் அதை செய்யவில்லை என்றார். அதே நேரத்தில், ஃபட்னாவிஸ் எச்சரித்தார். இந்தப் பிரச்சினையில் அஜித் பவார் ஏதாவது சொன்னால், நான் மேலும் வெளிப்படுத்துவேன்" என்றார்.

உத்தவ் சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறுகையில், "எம்.வி.ஏ ( MVA) கூட்டணியில் பிளவை உருவாக்க ஃபட்னாவிஸ் வேண்டுமென்றே கூறியுள்ளார். ஃபட்னாவிஸ் கூறுவது போல் என்சிபி தலைவர் சரத் பவாருக்கு (அஜித் பக்கம் மாறுவது) தெரிந்திருந்தால், அவரும் பா.ஜ.கவுடன் சென்றிருப்பார்" என்றார்.

இதற்கு இன்னொரு பக்கமும் இருப்பதாக ராவுத் சுட்டிக்காட்டினார். "ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பதவியேற்பு நடைபெறாமல் இருந்திருந்தால், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி எடுக்கப்பட்டிருக்காது. மேலும் எம்.வி.ஏ அரசாங்கம் உருவாகியிருக்காது என்று கூறினார். பவாரின் பிரமாண்டமான திட்டம், என்சிபி தலைவர் எப்பொழுதும் மற்றவர்களை விட ஒரு படி மேலே இருப்பதே சிறப்பியல்பு. பவார் சாகேப்பைப் புரிந்து கொள்ள, நூறு பிறவிகள் எடுக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்" என்று ராவத் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Devendra Fadnavis Ncp Maharashtra Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment