Advertisment

விவசாயிகள் தற்கொலை 4 ஆண்டுகளில் 10% குறைவு: கவலை தரும் மாநிலங்கள் எவை?

farm sector suicides Decline : தினக்கூலி தொழிலாளர்களின் தற்கொலை எண்ணிக்கை 15 விழுக்காடாகவும்  குறைந்துள்ளன

author-image
WebDesk
New Update
விவசாயிகள் தற்கொலை 4 ஆண்டுகளில் 10% குறைவு: கவலை தரும் மாநிலங்கள் எவை?

கடந்த 4 ஆண்டுகளில் விவசாயத் துறையில் தற்கொலை எண்ணிக்கை  குறைந்து காணப்படுவதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

Advertisment

என்.சி.ஆர்.பி. வெளியிட்டுள்ள விபத்தின் காரணமாக இறப்புகள் மற்றும் தற்கொலைகள்' பற்றிய தரவுகளில், 2016 ல் 11,379 ஆக இருந்த விவசாய தற்கொலை எண்ணிக்கை 2019 ல் 10,281 ஆக குறைந்து பதிவாகியுள்ளது. ஒப்பிட்டளவில் 10 விழுக்காடாக குறைந்துள்ளது.

விவசாயிகள், விவசாய தினக்கூலி தொழிலாளர்கள் எனத் தனித்தனியாக எடுத்துக் கொள்ளப்படும்போது, தினக்கூலி தொழிலாளர்களின் தற்கொலை விழுக்காடு சற்று குறைவாக உள்ளது. தரவுகளின்படி, சாகுபடியாளர்களின்   (நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைக்கு பயிரிடுவோர்) தற்கொலை எண்ணிக்கை 5 விழுக்காடாகவும்,  தினக்கூலி தொழிலாளர்களின் தற்கொலை எண்ணிக்கை 15 விழுக்காடாகவும்  குறைந்துள்ளன.

2016ல் சாகுபடியாளர்களின் தற்கொலை விகிதம் 2015 தரவுகளை ஒப்பிடுகையில் 21 விழுக்காடு குறைவாக இருந்தன என்பதையும் இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆண்டில், விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 10% அதிகரித்திருந்தாலும், ஒட்டு மொத்த விவசாய தற்கொலை எண்ணிக்கை  2015 ஐ விட குறைந்து காணப்பட்டன.

 

தொடர்ச்சியாக இரண்டு முறை ஏற்பட்ட வறட்சி காரணமாக, 2015ம் ஆண்டில் விவசாயிகள் தற்கொலை விகிதம் மிகவும் அதிகரித்தது. அவ்வாண்டில் மட்டும் 8,000 க்கும் மேற்பட்ட விவசாய தற்கொலைகள் பதிவாகின. இது, 2014 ஐ விட கிட்டத்தட்ட 40 விழுக்காடு அதிகமாகும்.

மிக முக்கியமாக 2017, 2018,  2019 ஆகிய ஆண்டுகளுக்கான தரவுகளை ஒன்றாக என்.சி.ஆர்.பி  தற்போது வெளியிட்டுள்ளது. 2017, 2018 ஆண்டிற்கான  விவசாய தற்கொலை குறித்த தரவுகள் பல்வேறு காரணங்களால் தாமதப்படுத்தப்பட்டது.

விவாசய தற்கொலை தொடர்பான  கடைசி 2016 வருட என்.சி.ஆர்.பி அறிக்கையும், நவம்பர் 2019-ல் வெளியிடப்பட்டது.  "பயிர் தோல்வி" "கடன்கள்" போன்ற விவசாய தற்கொலைக்கான காரணங்கள் என்.சி.ஆர்.பி- ன் கடைசி அறிக்கையில் இடம்பெறவில்லை என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நவம்பர் 9, 2019 அன்று  செய்தி வெளியிட்டது.

2017, 2018 ஆண்டிற்கான என்.சி.ஆர்.பி  அறிக்கையில், மாநிலம்  வாரியாக விவசாயிகளின் தற்கொலை குறித்த விரிவான தகவல்கள் எதுவும் இல்லை. உண்மையில், 2018 வருட என்.சி.ஆர்.பி அறிக்கையில், 2008ம் ஆண்டு மாநிலங்களின் விவசாய தற்கொலை தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா 3,900 க்கும் மேற்பட்ட பண்ணைத் துறை தற்கொலைகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது என்பதை

2019ம் ஆண்டில், மாநிலம் வாரியாக விவசாயிகள் தற்கொலை தொடர்பான  பட்டியலில் மகாராஷ்டிரா முன்னிலை வகுக்கிறது.  2,680 சாகுபடியாளர்கள், 1220 தினக்கூலிகள் என மொத்தம்  3,900 விவசாயிகள் தற்கொலை முடிவை எடுத்தனர். இதைத் தொடர்ந்து கர்நாடகா (1,992), ஆந்திரா (1,029), மத்தியப் பிரதேசம் (541), தெலுங்கானா (499), பஞ்சாப் (302) போன்ற மாநிலங்கள் உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Farmer Suicide
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment