Advertisment

ஸ்டான் சுவாமி மரணம்; காவலில் எடுக்காமல், ஜாமீனும் வழங்காமல் சிறையில் அடைத்த என்ஐஏ

Stan Swamy dead: NIA didn’t seek custody but kept him behind bars, opposed his plea: அக்டோபர் 8 ஆம் தேதி ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டு மறுநாள் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் என்ஐஏ விசாரணைக்காக அவரை காவலில் எடுக்கவில்லை.

author-image
WebDesk
New Update
ஸ்டான் சுவாமி மரணம்; காவலில் எடுக்காமல், ஜாமீனும் வழங்காமல் சிறையில் அடைத்த என்ஐஏ

கடந்த ஆண்டு அக்டோபரில் தேசிய புலனாய்வு அமைப்பு, 83 வயது சமூக ஆர்வலரான பாதிரியார் ஸ்டான் சுவாமியை மும்பை அலுவலகத்திற்கு வரவழைத்தது. ​​எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக அவரிடம் மேலும் விசாரிக்கப்பட உள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisment

அக்டோபர் 8 ஆம் தேதி ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டு மறுநாள் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் என்ஐஏ விசாரணைக்காக அவரை காவலில் எடுக்கவில்லை. அடுத்த நாள், அக்டோபர் 9 அன்று ஸ்டான் சுவாமி என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க தலோஜா மத்திய சிறைக்கு அனுப்பியது. அங்கு அவர் மே 28 அன்று ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வரை இருந்தார். ஜூலை 5 திங்களன்று ஸ்டான் சுவாமி தனியார் மருத்துவமனையில் இறந்தார்.

"விசாரணைக்காக ஒரு நாள் காவல் கூட கோரப்படாத நிலையில் அவர் கைது செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன?" என்று சுவாமியின் மரணம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, சுவாமியின் வழக்கறிஞர் மிஹிர் தேசாயை பம்பாய் உயர் நீதிமன்றத்தில் திங்களன்று கேட்டார். இது குறித்து விசாரணைக்கு அழைப்பு விடுத்த வழக்கறிஞர் தேசாய், நீதிமன்றம் அல்லது மருத்துவமனைக்கு எதிராக தனக்கு எந்தவிதமான புகாரும் இல்லை என்றாலும், என்ஐஏ மற்றும் சிறை அதிகாரிகளைப் பற்றி அப்படி சொல்ல முடியாது என்று கூறினார்.

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் புனே காவல்துறையினர் ராஞ்சியில் உள்ள ஸ்டான் சுவாமியின் வீட்டில் தேடியபோது எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக முதலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 2020 ஜனவரியில் என்ஐஏ இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட பிறகு, ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட 15 மணி நேரம் விசாரிக்கப்பட்டது . கடந்த ஆண்டு அக்டோபரில் என்ஐஏ அதன் மும்பை அலுவலகத்திற்கு ஸ்டான் சுவாமியை மீண்டும் அழைத்தது.

publive-image

ஸ்டான் சுவாமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அக்டோபர் 9 ஆம் தேதி, அவர் மற்றும் ஏழு பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது, அவர்கள் தடைசெய்யப்பட்ட அமைப்பான சிபிஐ (மாவோயிஸ்ட்) உறுப்பினர்களாக இருப்பதாகவும், அதன் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதற்காக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

எவ்வாறாயினும், மேலதிக விசாரணைக்கு என்ஐஏ ஸ்டான் சுவாமியின் காவலை நாடவில்லை, ஆனால் அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. கைது செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள், சுவாமி தனது வயது மற்றும் இதய நிலை மற்றும் பார்கின்சன் நோய் உள்ளிட்ட பிரச்சனைகள் மற்றும் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிட்டால் அந்த இணை நோய்களால் ஏற்படும் பாதிப்புகளை முன்வைத்து இடைக்கால ஜாமீன் கோரினார். ​​ஆனால் என்ஐஏ, 83 வயதான ஸ்டான் சுவாமி தொற்றுநோயை தனக்கு சாதகமாக எடுத்துக்கொள்வதாகவும், அவரது மருத்துவ நிலை குறித்து மன்றாடுவது இடைக்கால ஜாமீன் பெறுவதற்கான "வெறும் முரட்டுத்தனம்" என்று தெரிவித்தது.

அக்டோபர் 22 ம் தேதி ஸ்டான் சுவாமி விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

ஸ்டான் சுவாமி பின்னர் நவம்பரில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டு அடிப்படையில் மீண்டும் ஜாமீன் கோரினார். அவரது 31 பக்க ஜாமீன் மனுவில், சுவாமியின் சார்பாக "83 வயதான ஒருவரை சிறையில் அடைத்து வைத்திருக்க" எந்த நோக்கமும் வழங்கப்படவில்லை என்று சமர்ப்பிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் இரண்டு ஆண்டுகளாக கைது செய்யப்படவில்லை என்பதும், அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வார் என்று கருதப்படவில்லை அல்லது ஆதாரங்களை கலைக்க முற்படுவார் என்று காட்டப்படவில்லை என்பதும் சமர்ப்பிக்கப்பட்டது.

publive-image

சிபிஐ (மாவோயிஸ்ட்) உடன் அவர் தொடர்பு கொண்டதற்கான 'சான்றுகள்' என, சுவாமிக்கும் மற்ற சக குற்றவாளிகளுக்கும் இடையில் மின்னஞ்சல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக என்ஐஏ நீதிமன்றத்தில் கூறியதுடன், எல்கர் பரிஷத் வழக்கில் மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதிற்கு எதிராக 2019 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் நடந்த ஒரு கூட்டத்தில் சுவாமி கலந்து கொண்டதாகக் கூறியது.

அட்விசாஸிஸ் மற்றும் மூல்வஸிஸ்க்கு வேலை செய்யும் ராஞ்சியை தளமாகக் கொண்ட பாகைச்சாவின் நிறுவனர் ஸ்டான் சுவாமி, மாவோயிஸ்டுகள் என்று குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக என் மீன் குறி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். அவர் ஒருபோதும் பீமா கோரேகானுக்கு விஜயம் செய்யவில்லை என்றும், அவரது மடிக்கணினியில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆவணங்கள் ஒரு வடிவத்தில் இருந்தன, அவை "பாதுகாப்பற்ற டிஜிட்டல் சாதனத்தில் எளிதில் கையாளப்பட்டு மாற்றப்படலாம்" என்றும் கூறினார். கைது செய்யப்படுவதற்கு முன்பே, சுவாமி அவர்கள் என்ஐஏவிடம் ஆவணங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியிருந்தார், அவர்கள் அனுப்புநர் மற்றும் பெறுநரின் விவரங்களைக் காட்டவில்லை என்றும், தேதி அல்லது கையொப்பம் இல்லை என்றும், இதனால் எளிதில் மாற்றப்படலாம் என்றும் கூறினார்.

publive-image

இந்த ஆண்டு மார்ச் மாதம் சுவாமியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தபோது, ​​அவரது முதுமை மற்றும் நோய் உட்பட ஜாமீன் கோருவதற்கான காரணங்கள் “சமூகத்தின் கூட்டு நலனைக் காட்டிலும் அதிகமாக உள்ளன” என்று கூறியிருந்தது.

சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு எதிராக சுவாமி சார்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகள் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அவர் இறக்கும் வரை மருத்துவ காரணங்கள் உட்பட அவரது ஜாமீனை என்ஐஏ எதிர்த்தது.

கைது செய்யப்படுவதற்கு முன்னர் சுவாமி பதிவுசெய்த வீடியோவில், தனது முதுமை, பல்வேறு வியாதிகள் மற்றும் நடந்துகொண்டிருக்கும் கொரோனா தொற்றுநோய் காரணமாக ராஞ்சியில் இருந்து மும்பைக்கு பயணிக்க தயங்குவதாகக் கூறினார். “இப்போது, ​​அவர்கள் (என்ஐஏ) என்னை மேலும் விசாரணைக்கு மும்பைக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார்கள், எனது வயது காரணமாக நான் செல்ல மறுக்கிறேன். எனக்கு சில வியாதிகள் உள்ளன, நாட்டில் ஒரு தொற்றுநோய் உள்ளது, மேலும் முதியவர்கள் பயணம் செய்யவோ அல்லது பொதுவில் தோன்றவோ கூடாது என்று ஜார்க்கண்ட் அரசு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இவற்றைக் கொண்டு, என்னை நானே பணயம் வைக்க விரும்பவில்லை. மறுபுறம், என்ஐஏ விரும்பும் விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன், ஆனால் வீடியோ கான்ஃபிரஸிங் மூலம், ”என்று அவர் அப்போது கூறினார். "சில மனித உணர்வு மேலோங்கும்" என்று தான் நம்புவதாகவும். "இல்லையென்றால், அடுத்ததை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்" என்றும் அவர் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nia Stan Swamy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment