FinCEN Files : பணமோசடி விவகாரம் … அடிபடும் ஐபிஎல் அணியின் ஸ்பான்சர் பெயர்!

பொய்யான அதிகாரிகள் பெயரும், ஸ்விஃப்ட் மெசேஜ்களையும், பொய்யான ஐ.பி. முகவரிகளில் இருந்து மின்னஞ்சல்கள் அனுப்பியாதாகவும் குற்றம் சுமத்தினார்.

By: Updated: September 21, 2020, 02:21:14 PM

Jay Mazoomdaar

FinCEN Files : அமெரிக்க நிதி கட்டுப்பாட்டாளர் ரேடாரில் ஐபிஎல், அதில் நடைபெறும் வீரர்களுக்கான ஏலம், மிக முக்கியமான ஸ்பான்சர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. இணைய பணப்பரிவர்த்தனையில் அமெரிக்க வங்கி, குறைவாக தெரிந்த இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம், கொல்கத்தாவை தலைமையகமாக கொண்ட ஐ.பி.எல் அணியின் ஸ்பான்சர் ஆகியோரின் பெயர்கள் பண மோசடி குற்றச்சாட்டுகளில் இடம் பெற்றுள்ளது. சந்தேகத்தின் அடிப்படையிலான அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான கூறுகளாக இவற்றை அமெரிக்காவின் பொருளாதார குற்றவியல் அமலாக்கத்துறை நெட்வொர்க் (US Financial Crimes Enforcement Network (FinCEN)) அறிவித்துள்ளதை இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணையின் மூலம் கண்டறிந்துள்ளது.

2013ம் ஆண்டில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வழிநடத்தும் கே.பி.எச். ட்ரீம் கிரிக்கெட் நிறுவனம் அணியின் ஸ்பான்சரான என்.வி.டி. சோலார் இண்டெர்நேசனல் லிமிட்டட் நிறுவனம், 3 மில்லியன் ஸ்பான்சர்ஷிப் ஃபீசை ஏமாற்றிவிட்டது என்று நீதிமன்றத்திற்கு சென்றது. இந்த எஸ்.ஏ.ஆர். சான்ஃபிரான்சிஸ்கோவை தலைமையகமாக கொண்டு செயல்படும் வெல்ஸ் ஃபார்கோ வங்கி தாக்கல் செய்தது. எங்கே என்ன தவறு நடந்தது என்பதை அறிவதாற்கான குறிப்பு ஒன்றையும் வழங்கியுள்ளது.

 இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

2013ம் ஆண்டு, லண்டனில் செயல்பட்டு வரும் டெயூட்ஷ்சே வங்கியில் இருந்து இந்த வங்கிக்கு டாலர் 2,975,460க்கான ஸ்டேண்ட்பை லெட்டர் ஆஃப் கிரெடிட் கிடைக்கப்பெற்றது. அதில் பெறுநராக கே.பி.எச். ட்ரீம் கிரிக்கெட் பெயர் போடப்பட்டிருந்தது. 3 மில்லியன் அமெரிக்க டாலருக்கான எஸ்.பி.எல்.சி (Standby Letter of Credit), ஏர் ட்யூப்களை தயாரிக்கும் ஏரோகாம் யு.கே. லிமிட்டட் நிறுவனம் கோரியது. இந்த நிறுவனத்திற்கு கிரிக்கெட் அணியினருடனோ ஸ்பான்சருடனோ நேரடியாக எந்த தொடர்பும் இல்லை. அந்த எஸ்.பி.எல்.சி.யில், பணம் செலுத்த தவறினால், டாக்காவில் செயல்பட்டு வரும், என்.வி.டி. சோலார் நிறுவனம், ஒப்பந்தத்தின் படி நிதியை திருப்பி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. எப்படியாகினும் வெல்ஸ் ஃபார்கோ மூலம் எஸ்.ஏ. ஆர். பதிவு செய்யப்பட்டது. அதில் எஸ்.பி.எல்.சி. மோசடி இல்லை என்றும் மறுக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

To read this article in English

வங்கியின் வாடிக்கையாளர்கள் பட்டியலில் விண்ணப்பதாரர் ஏரோகாம் யு.கே., பெறுநர் கே.பி.எச். ட்ரீம் கிரிக்கெட், வாரண்ட்டர் என்.வி.டி. சோலார் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை என்று வெல்ஸ் ஃபோர்கோவின் எஸ்.பி.எல்.சி. யூனிட் கண்டறிந்துள்ளது. எஸ்.ஏ.ஆரின் படி, “வெல்ஸ் பார்கோ எலக்ட்ரானிக் மெசேஜிங் சிஸ்டத்தின் தேடல் இந்த பரிவர்த்தனைக்கான ரசீதைக் காட்டாததால், அந்த எஸ்.பி.எல்.சி. போலியானது. வெல்ஸ் ஃபோர்கோவின் வர்த்தக நிதி விசாரணைக்குழு நடத்திய விசாரணையில், எலக்ட்ரானிக் எஸ்.பி.எல்.சியில் இடம் பெற்றிருந்த அலுவலர் ஒருவரின் கையொப்பம் போலியானது என்று தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க : Fincen Files : தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கிய தாவூத் இப்ராஹிமின் ஃபைனான்சியர்!

வெல்ஸ் பார்கோ ஊழியரின் உள் முகவரியைப் பயன்படுத்தி வங்கியின் சர்வதேச மொத்த வங்கி பிரிவுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் போலியானது என்றும், கோரிக்கையை உறுதிப்படுத்த எந்த வணிக நோக்கமும் நிறுவப்பட முடியாது என்றும் அது கண்டறிந்துள்ளது. ஏரோகாம் நிறுவனத்தின் தலைவர் ஜான் ஹூகேஸ், என்.வி.டி. சோலார் நிறுவனத்திற்கும் அவருக்கும் இடையேயான உறவு குறித்து எழுதப்பட்ட மின்னஞ்சல்களுக்கும், போன்கால்களுக்கும் பதில் ஏதும் தரவில்லை. ஏரோகாம் என்பது ஒரு நியூமேடிக் எஞ்சினியரிங் நிறுவனமாகும். இந்நிறுவனம் ஏர் ட்யூப்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. 2013ம் ஆண்டு இந்நிறுவனத்தின் ஜிபிபி 0.6 மில்லியனை நிகர சொத்து என்று அறிவித்தது.

FinCEN Files , FinCEN Files leaked

மேலும் படிக்க : ஃபின்சென் ரகசிய ஆவணங்கள் என்றால் என்ன?

இது தொடர்பாக என்.வி.டி. சோலார் நிறுவனத்திற்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்ட போதும் பதில்கள் ஏதும் தரவில்லை. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கல்கத்தா உயர் நீதிமன்றம், இந்நிறுவனம் சார்ந்த வழக்கு ஒன்றில் என்.வி.டி. சோலார் நிறுவனத்தில் இயக்குநர்கள் கண்டுபிடிக்கவே படமாட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தது. 2003ம் ஆண்டு கொல்கத்தாவில் நிறூவப்பட்டாலும், 2012ம் ஆண்டு என்.டி.வி. சோலார் லிமிட்டர் தன்னுடைய செயல்பாடுகளை வங்கதேசத்தில் துவங்கியது. 2015ம் ஆண்டு, செபி ஒழுங்குமுறை, என்.வி.டி. நிறுவனம் மக்களிடம் இருந்து சட்டத்திற்கு புறம்பாக பெற்ற ரூ. 594 கோடியை திருப்பி தர என்விடி சோலாரின் வங்கிக் கணக்குகளில் இருக்கும் ரூ .1000 கோடியை மீட்க உத்தரவிட்டது. நிறுவனம் தற்போது கலைக்கப்படும் நிலையில் உள்ளது. கே.பி.எச். டீரிம் நிறுவனம் கருத்து கூற மறுத்துவிட்டது. ஆனால் அந்நிறுவனத்தின் வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம், என்.வி.டி. சோலார் நிறுவனத்தில் இருந்து இன்னும் நிலுவை தொகை வசூலிக்கப்படவில்லை என்று கூறினர்.

மேலும் படிக்க : Breaking: ஃபின்சென் ஆவணங்கள்- கிழியும் முகத்திரை, அம்பலமாகும் மோசடி நிறுவனங்கள்

பி.டி.ஐ. செய்தியின் படி, அக்டோஅர் 2013ம் ஆண்டு, கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா, ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தில் இருந்து ரூ 42 லட்சத்தை மட்டுமே ரூ. 14.3 கோடியில் இருந்து அணி பெற்றதாக கூறியுள்ளார், மேலும் என்.வி.டி. சோலார் நிறுவனம் லண்டன் டியூட்ஸ்சே வங்கி, வெல்ஸ் ஃபார்கோ வங்கி நியூயார்க், காமன் சுய்ச்சே வங்கிகளில் போலியான கணக்குகளை கொடுத்தது என்று குற்றம் சுமத்தினார். மேலும் பொய்யான அதிகாரிகள் பெயரும், ஸ்விஃப்ட் மெசேஜ்களையும், பொய்யான ஐ.பி. முகவரிகளில் இருந்து மின்னஞ்சல்கள் அனுப்பியாதாகவும் குற்றம் சுமத்தினார்.

வெல்ஸ் பார்கோவின் செய்தித் தொடர்பாளர் ஒருவரை தொடர்பு கொண்டபோது, “வெல்ஸ் பார்கோவில் பண மோசடி தடுப்பு கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் உள்ளன, மேலும் பொருந்தக்கூடிய அனைத்து நிதிக் குற்றங்கள் தொடர்பான சட்டங்களையும் விதிகளையும் நாங்கள் பின்பற்றுகிறோம். இதற்கு மேல் அதிக கருத்தை எங்களால் வழங்க முடியாது” என்று அறிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Fincen files bank reported fraud uk link of an ipl team sponsor

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X