Advertisment

வாட்ஸ் அப்-ல் பிறந்தது முத்தலாக்கின் முதல் வழக்கு!

Triple Talaq: எங்களுக்கு இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான்.  இருந்தாலும், வாழ்க்கைத் தொடர்ந்த முதல் நாளிலிருந்தே நான் வேதனைக்கு உள்ளாக்கப்பட்டேன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
triple talaq case,triple talaq case study, முத்தலாக், முஸ்லீம் பெண்

triple talaq case,triple talaq case study, முத்தலாக், முஸ்லீம் பெண்

TRIPLE TALAQ FIRST CASE:  வாட்ஸ்அப் மூலம் தனது மனைவியை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்ததாக 35 வயதுடைய ஒரு நபர் மீது புதிதாக நிறைவேற்றப்பட்ட  சட்டத்தின் கீழ் மும்ப்ரா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாராளுமன்றத்தால் புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 இன் கீழ் மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.

Advertisment

MBA பட்டதாரியான அந்த இஸ்லாம் பெண் தனது வாக்குமூலத்தில், "எங்களுக்கு செப்டெம்பர் 7,2015 அன்று நிக்கா நடந்தது. எங்களுக்கு இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான்.  இருந்தாலும், வாழ்க்கைத் தொடர்ந்த முதல் நாளிலிருந்தே நான் வேதனைக்கு உள்ளாக்கப்பட்டேன். அவரும் அவரது வீட்டாளரும் என்னைக் காயப்படுத்தத் தொடங்கிவிட்டனர்" என்றார் .

சம்பந்தப்பட்ட அதிகாரி இதை பற்றி தெரிவிக்கையில் " விசாரித்ததில் இதன் மூலக் காரணம் வரதட்சணையாக இருக்கலாம். பெண்ணின் தந்தை கடன் வாங்கி அவருக்கு ஒரு பைக் கொடுத்திருக்கிற செய்தியையும் நாங்கள் கடந்து வந்தோம் . செப்டம்பர் 2017 புகார் அளித்த பெண்ணிற்கு தனது கணவன் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. அந்நேரத்தில் இந்த பெண் தனது தாய்வீட்டில் கர்ப்பிணியாக இருந்தாள்" என்ற தகவலையும் சொன்னார்.

அதற்குப் பின் இவர்கள் இருவருக்கும் போனிலும், வாட்ஸ் அப்பிலும் அடிக்கடி சண்டை போட ஆரம்பித்தனர். நவம்பர் 30, 2018-ல் அவர் தனது வாட்ஸ்அப் பில் "தலாக்" "தலாக்" "தலாக்" என்று மூன்று முறை அந்த பெண்ணிற்கு குறுந்தகவலை அனுப்பியுள்ளார். மேலும் போன் செய்து முத்தலாக்கை சொல்லியுள்ளார்.

அதற்கு பின் அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை. ஆனால், கடந்த புதன்கிழமை(ஜூலை 31) முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 நடைமுறைப்படுத்தப்பட்டதால் தனது கணவருக்கு எதிராக இந்த புதிய சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர வேண்டும் என்று கோரி தானே கமிஷனர் அலுவலகத்தில் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்திருக்கிறார்.

விண்ணப்பம் மும்ப்ரா போலீசாருக்கு மாற்றப்பட்டு புதிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழுள்ள வரதட்சணை மற்றும் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டின் பேரில் அவரின் தாய் மற்றும் சகோதரி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்ப்ரா போலீஸின் துணைஆய்வாளர் யோகேஷ் பாட்டீல் இதை பற்றி தெரிவிக்கையில்,"இது சம்பந்தமாக இதுவரையில் நாங்கள் அந்த நபரை கைது செய்யவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் அபுதாபியில் விற்பனை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார் என்றறிந்தோம். ஆனால், அவர் இப்போது தனது புதிய மனைவியுடன் விக்ரோலியில் தங்கியிருப்பதாக இந்த பெண் சொல்கிறாள். அவரைக் கண்டுபிடிக்க நாங்கள் முயற்சிக்கிறோம். நவம்பர் 2018-ல் அனுப்பிய அந்த முத்தலாக் ஸ்க்ரீன் ஷாட் எங்களிடம் உள்ளது. அதை நாங்கள் ஆதாரமாகப் பயன்படுத்துவோம்" என்றார்.

Parliament Muslim Womenright Triple Talaq
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment