அமெரிக்கா, கனடாவில் இருந்து வரும் தமிழக பயணிகள் – டெல்லியில் ‘செக்’

வந்தே பாரத் மிஷன் மூலம், சிறப்பு விமானங்களில் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து சென்னை செல்லும் பயணிகளின் ‘கனெக்டிங் ஃபிளைட்’ ஏறுவதற்கு முன்பு டெல்லியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருக்க வேண்டும். ஏர் இந்தியா இந்த நாடுகளில் இருந்து வெளியாகும் அனைத்து விமானங்களையும் டெல்லிக்கு இயக்கவுள்ளது.  ஜூன்…

By: Updated: June 15, 2020, 12:46:28 PM

வந்தே பாரத் மிஷன் மூலம், சிறப்பு விமானங்களில் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து சென்னை செல்லும் பயணிகளின் ‘கனெக்டிங் ஃபிளைட்’ ஏறுவதற்கு முன்பு டெல்லியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருக்க வேண்டும். ஏர் இந்தியா இந்த நாடுகளில் இருந்து வெளியாகும் அனைத்து விமானங்களையும் டெல்லிக்கு இயக்கவுள்ளது.


ஜூன் 11 ம் தேதி அறிவிக்கப்பட்ட ஒரு தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவால், இப்போது டெல்லிக்கு அப்பால் பயணிக்க விரும்பும் சர்வதேச பயணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தனிமைப்படுத்தப்படும் உத்தரவின் படி, சர்வதேச பயணிகளை உள்நாட்டு பயணிகளுடன் சேர்ந்து செல்ல அனுமதிக்க முடியாது என்பதால் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும், மேலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்த பின்னரே உள்நாட்டு விமானங்களில் செல்ல முடியும்.

எல்லையோர துப்பாக்கிச் சூடு: நேபாளத்திடம் பேசிய இந்தியா

டெல்லி வழியாக சென்னைக்குச் செல்லும் பயணிகளிடையே இது ஒரு கவலையை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் அவர்களில் பலர் நகரத்தில் தங்கவும் 14 நாட்களுக்கு அறைகளுக்கு பணம் செலவழிக்கவும் விரும்பவில்லை.

விமான பயணிகள் சங்கம் (ஏபிஏஐ) பயணிகளிடமிருந்து புகார்களைப் பெற்று வருகிறது. ” ‘கனெக்டிங் பிளைட்ஸ்’ பற்றாக்குறை பலரை டெல்லியில் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த கட்டாயப்படுத்துகிறது, உண்மையில், அவர்களின் வீடு வேறு எங்கேயோ இருக்கிறது. இது லாஜிக்காக சரியா என்று தெரியவில்லை. அவர்கள் போக்குவரத்து பயணிகளாக கருதப்பட வேண்டும்” என்று APAI இன் தேசியத் தலைவர் டி சுதாகர ரெட்டி கூறியுள்ளார்.

ஹப்-அண்ட் ஸ்போக் மாடல் பின்பற்றப்படவில்லை என்றும், எனவே டொராண்டோ, வான்கூவர் மற்றும் சிகாகோவிலிருந்து வரும் பயணிகள் பெங்களூரு, சென்னை அல்லது ஹைதராபாத் ஆகிய மாநிலங்களுக்கு செல்ல வேண்டுபவராக  இருந்தாலும், டெல்லியில் தரையிறக்கப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

”கொரோனா தேவியின் நாமம் வாழ்க” – தினம் தோறும் பூஜை நடத்தும் கேரள மனிதர்!

முன்னாள் விமான அதிகாரியாக இருந்த சந்திர மௌலி கூறுகையில், “மார்ச் 24 க்கு முன்பு அட்டவணை பயணிகளுக்கு ஏதுவாக இருந்தது. பயணிகள் டெல்லியில் ஒன்றுகூடி பின்னர் மாலை 5 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு புறப்படுவார்கள். இப்போது அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து வரும் மக்கள் இரண்டு டிக்கெட்டுகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.  அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கு வர ஒரு கட்டணமும், பின்னர் மீண்டும் டெல்லியில் இருந்து சென்னைக்கும் பயணம் செய்யதனி கட்டணமும் செலுத்த வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட விதி இப்போது அறிவிக்கப்பட்டதால், பலர் ஏற்கனவேடெல்லி – சென்னை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர். இது அவர்களுக்கு ஒரு இழப்பாகும்”. என்று TOI-யிடம் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் “டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு செலவும் அதிகரித்து, மீண்டும் சென்னை போகும் போது, அங்கும் தமிழக அரசின் உத்தரவின் படி அவர்கள் தனிமைப்படுத்தப்படுவது என்பது அதிக துயரத்தை ஏற்படுத்தும்” என்று அவர் குறிப்பிடுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Flyers from canada us to chennai to be stuck in delhi covid 19 india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X