Advertisment

விவசாயிகள், மீனவர்கள் தெருவோர வியாபாரிகள்... நிர்மலா சீதாராமன் சலுகைகள் ஹைலைட்ஸ்

FM Nirmala Sitharaman Speech HIGHLIGHTS: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய புதிய அறிவிப்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தெருவோர விற்பனையாளர்கள், சிறு வணிகர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சிறு விவசாயிகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nirmala sitharaman, Nirmala Sitharaman Speech Highlights, nirmala sitharaman speech, nirmala sitharaman speech live, nirmala sitharaman press conference, nirmala sitharaman press meet, FM Nirmala Sitharaman Speech Highlights, covid-19 economic package, migrant workers, farmers, traders, street vendors, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடுத்த 2 மாதங்களுக்கு இலவச உணவு தானியங்கள், நிர்மலா சீதாராமன் பொருளாதார திட்டங்கள் அறிவிப்பு, nirmala sitharaman economic package, nirmala sitharaman 20 lack crores, நிர்மலா சீதாராமன், நிர்மலா சீதாராமன் பிரஸ்மீட், நிர்மலா சீதாராமன் பேட்டி, நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்புகள், nirmala sitharaman farmers announcements, nirmala sitharaman migrent workers relief, nirmala sitharaman news in tamil,

FM Nirmala Sitharaman Speech HIGHLIGHTS: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தனது இரண்டாவது செய்தியாளர்கள் சந்திப்பில், சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவின் தன்னம்பிக்கை பிரச்சாரத்திற்கு உதவும் வகையில் ரூ .20 லட்சம் கோடி பொருளாதார திட்டங்களின் தொகுப்பு பற்றிய விவரங்களை வெளியிட்டார். இன்று புதிய அறிவிப்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தெருவோர விற்பனையாளர்கள், சிறு வணிகர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சிறு விவசாயிகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

Advertisment

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வரும் பொருளாதாரத் திட்டங்களை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை தனது 5வது உரையின்போது அறிவித்தார்.

முன்னதாக நேற்று புதன்கிழமை நிதியமைச்சர் நிரமலா சீதாராமன், நெருக்கடியில் இருக்கிற 11 கோடி மக்கள் பணிபுரிகிற சிறு,குறு, நடுத்தர தொழில்துறைக்கு (எம்.எஸ்.எம்.இ) உதவும் திட்டங்களை அறிவித்தார்.

நிதியமைச்சரின் அறிவிப்புகள் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்.பி.எஃப்.சி), ரியல் எஸ்டேட், மின் விநியோகத் துறை, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (ஈ.பி.எஃப்.ஓ) பங்களிப்பு மீதான தளர்வு வரை நீண்டது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் செய்தியாளர்கள் சந்திப்பு நிதி அமைச்சகத்தின் சமூக ஊடக சேனல்கள், ட்விட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பின் முக்கிய சிறப்பம்சங்கள்:

நான் இன்று மொத்தம் 9 திட்டங்களை அறிவிப்பேன். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், சிறு வணிகர்கள், சிறு விவசாயிகள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் மீது கவனம் செலுத்தப்படும் என்று கூறினார்.

# மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 வரை ரூ.86,600 மதிப்புள்ள விவசாயிகளின் 63 லட்சம் கடன்கள் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. கிராமப்புற மேம்பாட்டுக்காக 2020 மார்ச் மாதத்தில் மாநிலங்களுக்கு கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் கீழ் ரூ.4,200 கோடி உதவி வழங்கப்பட்டுள்ளது.

# கடந்த 2 மாதங்களில் புலம்பெயர்ந்தோர் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது. பொதுமுடக்க காலத்தில் நகர்ப்புறத்தில் வீடற்றவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு வழங்கப்பட்டுள்ளது.

# புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக மாநிலங்களுக்கு ரூ.11,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.

# கிட்டத்தட்ட 12,000 சுயஉதவிக் குழுக்கள் கோவிட்-19 காலகட்டத்தில் 3 கோடிக்கும் அதிகமான முகக்கவசங்கள் மற்றும் 1.2 லட்சம் லிட்டர் சானிடைசர்களை உற்பத்தி செய்துள்ளன. பொதுமுடக்க காலத்தில் கிட்டத்தட்ட 7,200 புதிய சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

# மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.10,000 கோடி வெறும் 43 நாட்களில் செலவிடப்பட்டுள்ளது. மே 13 வரை மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இதுவரை 14.62 நபர்களுக்கு தினமும் வேலை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் சராசரி ஊதிய விகிதம் ரூ.182-ல் இருந்து ரூ.202 ஆக உயர்ந்துள்ளது.

# இதில் வேலை தேவைப்படும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் போதுமான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் விதிகளின்படி மாநிலங்களையு மற்றும் யூனியன் பிரதேசங்களையும் அவர்களுக்கு வேலை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

# நாங்கள் மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரு நல்ல வரையறையை கொண்டிருக்க விரும்புகிறோம். அவர்களுக்கு நன்மைகள் சிறப்பாக சென்றடைய அடைய வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஊழியர்களின் அரசு காப்பீடு மூலம் பான் இந்தியாவை உருவாக்குவது ஆகியவை நாங்கள் பணிபுரியும் மற்ற அம்சங்களாகும்.

# புலம்பெயர்ந்த குடும்பங்கள் பிற மாநிலங்களில் உணவு பெற முடியவில்லை. அதற்காக ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் செயல்படுத்தப்படும். இது 23 மாநிலங்களில் 67 கோடி மக்களுக்கு பயனளிக்கும், மேலும் பொது விநியோகத் திட்ட மக்கள்தொகையில் சுமார் 83% ஆகஸ்ட் 2020 இல் உள்ளடக்கி இருக்கும்.

# அடுத்த 2 மாதங்களுக்கு அனைத்து புலம்பெயர்ந்தவர்களுக்கும் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. அட்டை இல்லாதவர்களுக்கு, வரவிருக்கும் 2 மாதங்களுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ கோதுமை / அரிசி மற்றும் ஒரு குடும்பத்திற்கு 1 கிலோ சன்னா வழங்கப்படும். கிட்டத்தட்ட 8 கோடி புலம்பெயர்ந்தவர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். மேலும் இதற்காக ரூ.3,500 கோடி செலவிடப்படும்.

# அரசாங்கம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு மலிவு விலையில் வாடகை வீட்டுவசதி வழங்கும் திட்டத்தை நகரங்களில் அரசு நிதியளிக்கும் வீடுகளாக மாற்றுவதன் மூலம் வாழ்வதற்கு கட்டுப்படியாகக்கூடிய வாடகை வீடமைப்பு வளாகங்கள் மூலம் எளிதான திட்டத்தை வழங்கும்.

# தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.5,000 கோடி சிறப்பு கடன் வசதி வழங்கப்படும். இந்த திட்டம் ஒரு மாதத்திற்குள் தொடங்கப்படும். இந்த திட்டம் கிட்டத்தட்ட 50 லட்சம் தெருவோர வியாபாரிகளை ஆதரிக்கும்.

# பழங்குடியினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க காடு வளர்ப்பு மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் (காம்பா) நிதியின் கீழ் ரூ.6,000 கோடி மதிப்புள்ள திட்டங்கள் விரைவில் அனுமதி அளிக்கப்படும்.

# சிறு, குறு விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம் ரூ.30,000 கோடிக்கு கூடுதல் அவசர மூலதன நிதி வழங்கப்படும்.

# கிசான் கிரெடிட் கார்டுகள் மூலம் 2.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன் சலுகை வழங்கப்படும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Nirmala Sitharaman Economy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment