Advertisment

ஆக்ஸிஜன் இல்லாமல் போனதால் இவர்களின் நிலை?

For lack of oxygen these people lost their life "ஏப்ரல் 22 அன்று நாங்கள் அவருடன் வீடியோ அழைப்பில் பேசினோம். அன்று அவருடைய பிறந்த நாள். அப்போது, ஆக்ஸிஜன் மாஸ்க் கொண்டு சைகைகள் மூலம் பேசினார்"

author-image
WebDesk
New Update
For lack of oxygen these people lost their life Tamil News

For lack of oxygen these people lost their life Tamil News

புலம்பெயர்ந்தோர் தங்களின் வீட்டிற்குத் திரும்ப முடியாமல் தவித்தது முதல் கோவிட் அலையின் நீடித்த வேதனை என்றால், ஆக்ஸிஜன் சிலிண்டர் இரண்டாவது அலையின் சோகம்

Advertisment

ஒரே இரவில், தினசரி மருத்துவ ஆக்ஸிஜன் தேவை 1,000 மெட்ரிக் டன்னிலிருந்து கிட்டத்தட்ட 10,000 வரை அதிகரித்தது. கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து கடந்த மாதம் புதுதில்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மற்றும் பாத்ரா வரை, நாசிக் முதல் சாம்ராஜ்நகர் வரையிலான நகரங்கள் முழுவதும் SOS-கள் 24 மணிநேரமும் தயார் நிலையிலிருந்தன. உயர் நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும், அரசாங்கங்களை விரைவாக செயல்படத் தூண்டிய நேரத்தில், பலருக்கு இது மிகவும் தாமதமானது.

பிறந்தநாளுக்கு ஒரு நாள் கழித்துக் காலமான தாய், ஒரு இளம் தந்தை என அடுத்தடுத்து மரணங்கள். சண்டே எக்ஸ்பிரஸ், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இழந்த உயிர்களையும் தப்பிப்பிழைத்தவர்களின் மனநிலையும் பதிவு செய்திருக்கின்றது.

குர்தீப் சிங், 37

ஏசி பராமரிப்பு கான்டராக்டராக இருந்த இவர், கடந்த ஏப்ரல் 27 அன்று கோட்டாவின் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மரணமடைந்தார்.

இவருக்கு மனைவி மற்றும் 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. “நான் ஒரு செவிலியர், ஆனால் என் கணவருக்கு, நான் ஒரு அரசியல்வாதி மூலம் ரெம்டெசிவிர் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. அவர் இறக்க விரும்பவில்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தார்… என் கணவர் நல்ல உயரமானவர், நல்லவர். நாங்கள் சீக்கியர்கள். நாங்கள் நன்றாக சாப்பிட்டோம். ஆனாலும், அவர் கடுமையாகப் போராடினார்…. இருந்தும் பயனில்லை. மரணமடைந்துவிட்டார். அவருக்கு அருகிலுள்ள படுக்கைகளில் இருப்பவர்களும் இறப்பதை நான் பார்த்தேன்” என்று குர்திப்பின் மனைவி மனிந்தர் கவுர் கூறுகிறார்.

publive-image

நிஷா கோயல், 59

தொழிலதிபரான இவர் ஏப்ரல் 24-ம் தேதி டெல்லியின் ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் காலமானார்

இவருக்கு மகள் சோனாலி கோயல் (36) மற்றும் மகன் துருவ் கோயல் (32) ஆகியோர் உள்ளனர். “அவர் இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு நான் அவரை பார்த்தேன். நாங்கள் அரை மணி நேரம் உரையாடினோம்… அப்போது அவர் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார்… அவருக்கு 59 வயது ஆகிறது ஆனால், பார்க்க 40 போல்தான் இருப்பார்.." என்கிறார் சோனாலி.

publive-image

சரப்ஜீத் கவுர், 58

இல்லத்தரசியான இவர் ஏப்ரல் 24-ம் தேதி டெல்லியின் ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் காலமானார்.

இவருக்கு கணவன் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். “அன்று இரவு 10.30 மணியளவில், டாக்டர்கள் என் அம்மாவைக் காட்டினார்கள். அப்போது அவர் நன்றாக இருப்பதாகக் கூறினார்கள். மறுநாள் அதிகாலை 3 மணியளவில், அவர் மரணமடைந்துவிட்டார்" என்று மகன் ஜக்ஜ்யோத் சிங் கூறுகிறார்.

publive-image

ஜெய்சங்கர், 37

பொறியாளராக இருந்த இவர், மே 2 அன்று சாமராஜநகர் மாவட்ட மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். "அவர் எங்கள் குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே உறுப்பினர். என் குடும்பத்தை பராமரிக்க அரசு எனக்கு ஒரு வேலை கொடுக்க வேண்டும்” என்கிறார் மனைவி சித்தரஜம்மா.

publive-image

சீமா அவஸ்தி, 56

பள்ளி முதல்வரான இவர், ஏப்ரல் 24 அன்று டெல்லியின் ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் காலமானார்

இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். "ஏப்ரல் 23 அன்று, மாலை 4.30 மணிக்கு நான் அம்மாவைச் சந்தித்தேன். அப்போது, அவள் நலமோடு இருப்பதாக கூறினார். நாங்கள் அரை மணி நேரம் நன்கு உரையாடினோம். அடுத்த நாள் காலையில், அம்மா இல்லை” என்கிறார் மகள் நவ்யா.

publive-image

ஹரன்ஜித் கெரா, 49

ஆட்டோரிக்ஷா டிரைவராக இருந்த இவர், ஏப்ரல் 24 அன்று டெல்லியின் ஜெய்ப்பூர் கோல்டன் நகரில் இறந்தார்

இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். “ஆக்ஸிஜன் குறைவு என்று மருத்துவமனையில் யாரும் எங்களிடம் கூறவில்லை. இது மிகப் பெரிய குற்றம்… அதே நேரத்தில், ஐ.சி.யூ படுக்கையைப் பெற முடியாத என் அம்மாவும் இறந்தார்” என்கிறார் மகன் கவுரவ்.

publive-image

இந்தர் மோகன் சிங், 54

தொழிலதிபரான இவர் ஏப்ரல் 24 அன்று டெல்லியின் ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் காலமானார்

இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். “நான் அவரை ஏப்ரல் 23 அன்று சந்தித்தேன். இரவு 8.30 மணியளவில், அவர் ஒரு சிறிதளவு கஸ்டர்டை சாப்பிட்டு, என் மகனுடன் தொலைபேசியில் உரையாடினார். நான் மருத்துவமனையிலிருந்து வெளியேறியபோது, ​​அவர் நலமாக இருந்தார்” என்கிறார் அவருடைய மகன்.

publive-image

டெல்பின் மாஸ்ஸி, 60,

கஇல்லத்தரசியான இவர் ஏப்ரல் 24 அன்று டெல்லியின் ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் காலமானார்

இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். "ஏப்ரல் 22 அன்று நாங்கள் அவருடன் வீடியோ அழைப்பில் பேசினோம். அன்று அவருடைய பிறந்த நாள். அப்போது, ஆக்ஸிஜன் மாஸ்க் கொண்டு சைகைகள் மூலம் பேசினார். ஒரு நாள் கழித்து, அவர் இறந்துவிட்டார்” என்கிறார் மகன் எரிக்.

publive-image

மனோஜ் குமார், 45

கணக்காளராக இருந்த இவர், ஏப்ரல் 24 அன்று டெல்லியின் ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் காலமானார்

இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். “ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து மருத்துவமனை எங்களுக்கு தெரிவிக்கவில்லை. கடைசியாக நாங்கள் அவரைப் பார்த்தபோது, ​​அவருடைய ஆக்ஸிஜன் அளவு 98-ஆக இருந்தது” என்கிறார் மனோஜின் உறவினர் ரஜ்னிஷ் குமார்.

publive-image

தினேஷ் கட்டாரியா, 41

டெல்லி விமான நிலையத்தில் சரக்கு பரிசோதனையாளரான இவர், ஏப்ரல் 24 அன்று டெல்லியின் ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் காலமானார்

இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். "அவருடைய மரணத்திற்கு மருத்துவமனை தான் காரணம். ஆக்ஸிஜன் நெருக்கடி பற்றி அவர்கள் எங்களுக்குத் தெரிவித்திருக்க வேண்டும்” என்கிறார் மனைவி ஷாலு.

publive-image

மித்லேஷ் கார்க், 66

இல்லத்தரசியாக இவர், ஏப்ரல் 24 அன்று டெல்லியின் ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

இவருக்கு கணவன், இரண்டு மகன்கள் உள்ளனர். “ஆக்ஸிஜனைக் குறைப்பதாக மருத்துவமனை நிர்வாகம் எங்களிடம் சொல்லியிருக்க வேண்டும். நான் PMO மற்றும் தில்லி முதல்வரிடம் புகார் அளித்துள்ளேன்” என்கிறார் மகன் அங்கித்.

publive-image

ஆல்விட்டோ அலெமிடா, 75

ஆசிரியரான இவர், கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மே 10 அன்று மரணமடைந்தார்.

இவருக்கு மனைவி பிலோமினா அல்மேடா (70) மட்டுமே இருக்கிறார். “என் சகோதரி (ஒரு கோவிட் நோயாளியும்கூட) GMCH-ன் தரையில் விழுந்து அழுவதைக் கண்டேன். இந்நிலை யாருக்கும் வரக்கூடாது” என்கிறார் உறவினர் மார்கஸ் டி க்ரூஸ்.

publive-image

திவாகர் விதுர்கர், 51

ஹோட்டல் ஊழியரான இவர், கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், மே 13 அன்று இறந்தார்

இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். “மருத்துவமனையில் பொறுப்பு இருக்க வேண்டும். வேறு எந்த நோயாளியும் என் பாவ்ஜி கடந்து சென்றதை அனுபவிக்கக்கூடாது. நான் உள்ளே நொறுங்கியுள்ளேன்” என்கிறார் உறவினர் ஹேமந்த்.

publive-image

லூசியா வாஸ், 54

ஆசிரியரான இவர் கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மே 10 அன்று மரணமடைந்தார்

இவருக்கு கணவன் மற்றும் மகள் (22) உள்ளனர். “மருத்துவ ஊழியர்களால் அரசாங்கம் விதிமுறைகளை ஆணையிட அனுமதிக்க முடியாது. தொழில்நுட்ப சிக்கல்கள் மக்கள் இறப்பிற்கு வழிவகுக்கக்கூடாது”என்று அவருடைய மருமகள் சியோலா வாஸ் கூறுகிறார்.

publive-image

மரியா, 61 & ஜோவாகிம் பெர்னாண்டஸ், 67

இவர்கள் இருவரும் ரன் டாக்ஸி சேவை கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மே 12-13 அன்று இறந்தனர்.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். “மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மருத்துவ ஊழியர்களை நம்ப வேண்டாம். எங்கள் பெற்றோரை நாங்கள் திரும்பப் பெற முடியாது” என்று மகள் கிரெஸி கூறுகிறார்.

சுகந்த தோரத், 65

இல்லத்தரசியான இவர், ஏப்ரல் 21 அன்று நாசிக் நகராட்சி மருத்துவமனையில் காலமானார்

இவருக்கு ஒரு மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர். “என் பாட்டியைக் காப்பாற்றுவதற்கான உள்கட்டமைப்பு மருத்துவமனையில் இல்லை. நம் தலைவர்கள் இதற்கு பொறுப்பேற்கவேண்டும்” என்கிறார் பேரன் விக்கி ஜாதவ்.

publive-image

கீதா வக்கூர், 50

இல்லத்தரசியான இவர், ஏப்ரல் 21 அன்று நாசிக் நகராட்சி மருத்துவமனையில் இறந்தார்

இவருக்கு, கணவன் மற்றும் மகன் உள்ளனர். “என் அம்மா குணமடைந்து கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு ஆக்ஸிஜன் கிடைக்காததால் மட்டுமே இறந்தார். பேக்கப் எதுவும் இல்லை. மருத்துவமனை ஊழியர்கள் உதவியற்றவர்களாக இருந்தனர்” என்கிறார் அவரது மகன் மனோஜ்.

publive-image

உதய் குமார் ஜெய்ஸ்வால், 38

வியாபாரியான இவர் எம்.பி.ஷாஹ்தோல் மருத்துவக் கல்லூரியில் ஏப்ரல் 18 அன்று இறந்தார்

இவருக்கு மனைவி, மகன் (8), வயதான பெற்றோர் உள்ளனர். “லாக்டவுனில் அவர் தனது வாழ்வாதாரத்தை இழந்தார். அவர்தான் வீட்டில் ஒரே சம்பாதிக்கும் உறுப்பினராக இருந்தார். அவருடைய மரணம் குறித்து விசாரணை இருக்க வேண்டும்” என்கிறார் சகோதரர் ரவி.

publive-image

பவன் கெவ்லானி, 31

ஒரு கடையில் பணிபுரிந்தவர் எம்.பி., ஷாஹ்தோல் மருத்துவக் கல்லூரியில் ஏப்ரல் 18 அன்று இறந்தார்

அவருக்கு அம்மா, தம்பி உள்ளனர். "வீட்டின் ஒரே ஊதியம் பெறுபவர் உயிரிழந்தால், அக்காள் குடும்பத்துக்கு ரூ.5,000 ஓய்வூதியத்தை முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால், என் மகனைப் போன்ற என் சகோதரனை இழந்தேன். எங்களுக்கு என்ன கிடைக்கும்?" என்கிறார் சகோதரர் பிரேம்.

publive-image

சஞ்சய் சேத், 57

வங்கி ஊழியரான இவர், டெல்லியின் பாத்ரா மருத்துவமனையில் மே 1 அன்று காலமானார்

இவருக்கு தாய், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். “ஆக்ஸிஜன் தீர்ந்துவிட்டால் மருத்துவமனைகள் குடும்பத்திற்கு தெரிவிக்க வேண்டும். நாங்கள் உதவியிருக்க முடியும். அவர்களின் அலட்சியம் காரணமாகவே இறந்தார்” என்கிறார் உறவினர் சஞ்சய்.

publive-image

கன்வால்ஜீத் கவுர், 64

இல்லத்தரசியான இவர், மே 1-ம் தேதி டெல்லியின் பாத்ரா மருத்துவமனையில் மரணமடைந்தார்

அவருக்கு கணவன், இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். “அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, நன்றாக இருந்தார். நாங்கள் அவருக்கு கிச்சடி உணவளித்தோம். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கக்கூடாது” என்கிறார் மருமகன் ரஞ்சீத்.

publive-image

கே ரமணா சாரி, 40

ஆந்திராவின் திருப்பதி, ஸ்ரீ வெங்கடேஸ்வர ராம்நாரைன் ருயா மருத்துவமனையில் மே 10 அன்று இந்த தினசரி கூலி தொழிலாளி இறந்தார்

இவருக்கு கர்ப்பிணி மனைவி, தாய் இருக்கின்றனர். “எனக்கு இப்போது யாரும் இல்லை. நான் எப்படி பிழைப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை. அரசாங்கத்திலிருந்து யாரும் எங்களை அணுகவில்லை” என்று அவருடைய மனைவி கூறுகிறார்.

publive-image

புஷ்பா மிஸ்ரா, 50

உ.பி.யின் லக்னோவில் உள்ள சர்வ வல்லமை வாய்ந்த மருத்துவமனையில் இல்லத்தரசியான இவர், ஏப்ரல் 21 அன்று காலமானார்

அவருக்கு கணவன் மற்றும் மகள் இருக்கின்றனர். "ஆக்ஸிஜன் இல்லை என்று மருத்துவமனை மறுக்கிறது, ஆனால், ஊழியர்கள் ஒப்புக்கொண்டனர். நாங்கள் சிகிச்சைக்காக ரூ.7 லட்சம் செலவழித்தோம். இதற்க்கான பதில்கள் தேவை” என்கிறார் மகள் பிராச்சி.

publive-image

ஷிப்ரா நகர், 37

இல்லத்தரசியான இவர், ஏப்ரல் 20 அன்று கோட்டா அரசு மருத்துவக் கல்லூரியில் மரணமடைந்தார்

இவருக்கு கணவன், இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். “'ஆக்ஸிஜன் நிறுத்தப்படவில்லை, ஆனால் அழுத்தம் குறைந்துவிட்டது' என்று மருத்துவமனை கூறுகிறது. இது மிகுந்த அலட்சியம்” என்று கணவர் விமல் கூறுகையில்.

publive-image

தனுஜா வித்யார்த்தி, 53

பள்ளி ஆசிரியரான இவர், ஏப்ரல் 24 அன்று டெல்லியின் ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் காலமானார்

அவருக்கு கணவன் மற்றும் மகள் உள்ளனர். “மற்ற எல்லா மருந்துகளுக்கும் நாங்கள் ஏற்பாடு செய்யும்போது, ​​மருத்துவமனை ஏன் சிலிண்டரைக் கேட்கவில்லை? இது கிரிமினல் அலட்சியம் அல்லவா?” என்று கணவர் அனுராக் கேட்கிறார்.

publive-image

குர்ப்ரீத் சிங், 29

விவசாயியான இவர், ஏப்ரல் 23 அன்று அமிர்தசரஸ் நீல்காந்த் மருத்துவமனையில் இறந்தார்

இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். "ஆக்ஸிஜன் பற்றாக்குறை பற்றி எங்களுக்கு மிகவும் தாமதமாக கூறப்பட்டது. நாங்கள் ஏற்கனவே 3 சிலிண்டர்களை வாங்கியிருந்தோம். இதற்க்கான விசாரணை மற்றும் இழப்பீடு வேண்டும்” என்று உறவினர் ஹர்பீந்தர் சிங் கூறுகிறார்.

publive-image

குல்வந்த் சிங், 58

ஏப்ரல் 23-ம் தேதி அமிர்தசரஸ் நீல்காந்த் மருத்துவமனையில் தையல்காரரான இவர் இறந்தார்

இவருக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர். "அவர் சாப்பிட ஆரம்பித்தார் மற்றும் குணமடைந்து கொண்டிருந்தார். விரைவில் வெளியேற்றப்படுவார் என்றும், வீட்டிற்கு சிலிண்டர்களைப் பெற வேண்டும் என்றும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது” என்கிறார் அவரது மகன்.

publive-image

தேவேந்திர குராரி, 57

எம்.பி., ஜபல்பூரில் உள்ள கேலக்ஸி மருத்துவமனையில் கால்நடை மருத்துவரான இவர், ஏப்ரல் 23 அன்று காலமானார்

அவருக்கு, மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவருடைய சிகிச்சைக்காக நாங்கள் ரூ.1.5 லட்சம் செலுத்தினோம். ஆனால், ஆக்ஸிஜன் விநியோகத்தை சரிசெய்ய மருத்துவமனையில் ஊழியர்கள் இல்லை. அவருடைய மரணத்திற்கு யார் காரணம்?” என்கிறார் அவரது மைத்துனர்.

publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Lack Of Oxygen Supply
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment