கர்நாடக முன்னாள் முதல்வரிடமே மோசடி செய்த சைபர் குற்றவாளிகள்; ரூ.3 லட்சத்தை இழந்த சதானந்த கவுடா

நடிகர், இயக்குனர் உபேந்திரா மற்றும் அவரது மனைவி பிரியங்கா உபேந்திரா ஆகியோரின் மொபைல் ஃபோன்கள் ஹேக் செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் வெளிவந்துள்ளது.

நடிகர், இயக்குனர் உபேந்திரா மற்றும் அவரது மனைவி பிரியங்கா உபேந்திரா ஆகியோரின் மொபைல் ஃபோன்கள் ஹேக் செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் வெளிவந்துள்ளது.

author-image
WebDesk
New Update
sadananda gowda 2

கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா சைபர் குற்றவாளிகளிடம் ரூ.3 லட்சத்தை இழந்தார்.

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் டி.வி. சதானந்த கவுடா, தனது வங்கிக் கணக்குகளை ஹேக் செய்த சைபர் குற்றவாளிகளால் ரூ.3 லட்சம் இழந்தார். இந்த மோசடி, செவ்வாய்க்கிழமை இரவு ஃபோன் மெசேஜ்களை சரிபார்க்கும்போது தெரியவந்தது என புதன்கிழமை அன்று சதானந்த கவுடா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

“வங்கிகளிலிருந்து பணம் எடுக்கப்பட்ட மெசேஜ்கள் வந்தபோதுதான் இது எனக்குத் தெரியவந்தது. ஹெச்.டி.எஃப்.சி, எஸ்.பி.ஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி கணக்குகளிலிருந்து தலா 1 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நான் காவல்துறையில் புகார் அளித்துள்ளேன்” என்று அவர் மேலும் கூறினார்.

சதானந்த கவுடாவின் மொபைல் ஃபோன் எப்படி ஹேக் செய்யப்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று, வழக்கை பதிவு செய்த பெங்களூரு வடக்கு சைபர் க்ரைம் பொருளாதார குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (சி.இ.என்) காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் ஏதேனும் இணைப்புகளை கிளிக் செய்தாரா என்பதை காவல்துறையினர் சரிபார்த்து வருகின்றனர்.

இந்த சம்பவம், நடிகர் - இயக்குனர் உபேந்திரா மற்றும் அவரது நடிகை மனைவி பிரியங்கா உபேந்திரா ஆகியோரின் மொபைல் ஃபோன்கள் ஹேக் செய்யப்பட்ட 2 நாட்களுக்குப் பிறகு வெளிவந்துள்ளது. மோசடி செய்தவர்கள் அவர்களின் தகவல்களைப் பயன்படுத்தி, அவர்களது நண்பர்களிடமிருந்து சுமார் ரூ.2 லட்சம் திருடியுள்ளனர்.

Advertisment
Advertisements

பிரியங்கா கூறுகையில், “தான் ஆர்டர் செய்திருந்த துபாயை தளமாகக் கொண்ட ஒரு ஆன்லைன் தளத்தின் பிரதிநிதி என கூறி ஒருவர் காலை 10 மணியளவில் அழைத்தார். அந்த அழைப்பாளர், ஆர்டர் செய்த பொருளை வழங்குவதற்கு முகவரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறினார்.”

அழைப்பாளரின் அறிவுறுத்தலின் பேரில், பிரியங்கா ஒரு குறியீட்டைத் தட்டச்சு செய்தார், உடனடியாக தனது மொபைல் ஃபோனில் ஏதோ தவறு நடந்திருப்பதை உணர்ந்தார். பின்னர் அவர் அந்த இணைப்பை உபேந்திராவின் ஃபோனுக்கு ஃபார்வர்டு செய்து, அதைக் கிளிக் செய்ததால், அவரது ஃபோனும் வேலை செய்வதை நிறுத்தியது.

சைபர் மோசடி செய்தவர்கள், பின்னர் பிரியங்காவின் கணக்கிலிருந்து அவரது நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்பி, அவசர நிதி உதவி கோரினர். அவர்களில் சிலர் அந்த கணக்கிற்கு பணத்தை மாற்றினர்.

இந்த ஆண்டு, கர்நாடகாவில் 7,500 க்கும் மேற்பட்ட சைபர் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன, இதில் பெங்களூரு நகரில் மட்டும் 5,500 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

Karnataka

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: