மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உடல்நலக் குறைவால் காலமானார்

சிறுநீரகக் கோளாறு காரணமாக அவதிக்குள்ளான சோம்நாத் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம்

சோம்நாத் சாட்டர்ஜி : 2004 – 2009ம் ஆண்டு வரையான காங்கிரஸ் ஆட்சியின் போது மக்களவை சபாநாயகராக பணியாற்றியவர் சோம்நாத் சாட்டர்ஜி.

அவருக்கு வயது 89 ஆகும். சில மாதங்களாக சிறுநீரகப் பிரச்சனை மற்றும் மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். பல நாட்களாக அவருக்கு டையாலஸிஸ் சிகிச்சை நடைபெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருக்கு நேற்றிரவு (ஆகஸ்ட் 12) மீண்டும் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

அவரை காப்பாற்ற தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் 12 மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

To read this article in English

யாரிந்த சோம்நாத் சாட்டர்ஜி ?

பாராளுமன்றத்தில் இது வரை 10 முறை எம்.பியாக பொறுப்பு வகித்திருக்கிறார். 1968ல் இந்திய பொதுவுடமைக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.

மக்களவையில் அதிக நாட்கள் எம்.பியாக பணியாற்றிய பெருமை அவருக்கு உண்டு. 1971ல் தொடங்கி 2009ம் ஆண்டு (1984 தேர்தலை தவிர) வரை அவர் மக்களவையில் எம்.பியாக செயல்பட்டிருக்கிறார்.

1996ம் ஆண்டு சிறந்த பாராளுமன்ற உறுப்பினருக்கான விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டவர் சோம்நாத் சாட்டர்ஜி. 2004ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை சபாநாயகர் தேர்தலில் வெற்றிபெற்று 14வது மக்களவை சபாநாயகராக பதவியேற்றார்.  அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள

அவரின் மரணத்திற்கு தேசியக் கட்சித் தலைவர்கள் தங்களுடைய இரங்கல் செய்திகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தங்களின் வருத்தத்தினை பதிவு செய்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் இரங்கல் செய்தி

திமுக கட்சி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close