Advertisment

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; தலைவர்கள் இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருவமான ஜஸ்வந்த் சிங் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 82.

author-image
WebDesk
New Update
jaswant singh passes away, former minister jaswant singh dead, ஜஸ்வந்த் சிங் மரணம், முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங், பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் மரணம், bjp senior leader jaswant singh nomore, jaswant singh, bjp, pm modi condolence, rajnath condolence, mk stalin condolence

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 82.

Advertisment

முன்னாள் நிதி அமைச்சர், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் காலமானார். அவருடய மறைவுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜஸ்வந்த் சிங் முதலில் ஒரு ராணுவ வீரராகவும், பின்னர் அரசியலிலும் சோர்வடையாமல் நம் தேசத்துக்காக பணியாற்றினார். அடல் பிகாரி வாஜ்பாய் அவர் முக்கியமான இலாகாக்களை நிர்வகித்தார். நிதித்துறை பாதுகாப்புத்துறை மற்றும் வெளி விவகாரத் துறைகளில் ஒரு வலுவான அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார். அவரது மறைவால் வருத்தமடைந்துள்ளேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்னாள் மத்திய அமைச்சர், “ அரசியல் மற்றும் சமூக விஷயங்களில் அவரது தனித்துவமான பார்வைக்காக நினைவுகூரப்படுவார்” என்று பிரதமர் மோடி கூறிப்பிட்டுள்ளார். “பாஜகவை வலுப்படுத்தவும் அவர் பங்களித்தார். எங்களுக்கு இடையேயான தொடர்புகளை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி” என்று பிரதமர் மோடி இரங்கள் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அதே போல, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் காலமானதால் ஆழ்ந்த வேதனையடந்தேன். அவர் பாதுகாப்பு அமைச்சர் உட்பட பல துறைகளில் தேசத்திற்காக சேவை செய்தார். அவர் ஒரு திறமையான அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற வாதி என்று தன்னை நிறுவிக்கொண்டார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment