Advertisment

மாநிலங்களவை உறுப்பினரானார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டிருப்பதால் இம்மாநிலமே பெருமையடைகிறது - அசோக் கெலாத்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Former PM Manmohan Singh elected unopposed

Former PM Manmohan Singh elected unopposed

Former PM Manmohan Singh elected unopposed : ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் மன்மோகன் சிங். பாஜக மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் லால் ஷைனி கடந்த ஜூன் மாதம் காலமானார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து காலியாக இருக்கும் ஒரு இடத்தினை நிரப்ப தேர்தல் வைக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் மன்மோகன் சிங் நிறுத்தப்பட்டார். ஆனால் பாஜக சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் நிறுத்தப்படமாட்டார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மன்மோகன் சிங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் வாழ்த்துகளை பதிவு செய்துள்ளனர்.

வாழ்த்துகள் தெரிவித்த ராஜஸ்தான் முதல்வர்

ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மன்மோகன் சிங்கிற்கு வாழ்த்து செய்திகளை பதிவு செய்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு நீங்கள் தேர்வு செய்யப்பட்டதால் இந்த மாநிலமே பெருமையுறுகிற்து என்று கூறியுள்ளார் அவர்.

மன்மோகன் சிங்கிற்கு இந்த வாய்ப்பை வழங்கிய காங்கிரஸ் கட்சிக்கும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத்திற்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் நன்றிகளை கூறியுள்ளார். மேலும் இங்கு ஒரு துயர் சம்பவம் நிகழ்ந்த காரணாத்தாலே இவ்வெற்றிடம் உருவாகியுள்ளது. ஷைனியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார். ராஜஸ்தானில் மொத்தம் இருக்கும் 10 மாநிலங்களவை உறுப்பினர்களில் 9 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : காஷ்மீர் விவகாரத்தில் முதல்வர்கள் மட்டும் கைது செய்யப்படவில்லை… முழுமையான பட்டியல் இதோ

Former Pm Manmohan Singh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment