5 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்தது மோடி அரசு!! சொன்னதை செய்ததா?

இரவு பழைய ரூபாய் நோட்டுக்கள் எல்லாம் செல்லாது.

மத்தியில் ஆட்சி அமைத்துள்ள மோடி அரசு இன்றுடன்(26.5.18) தனது 4 ஆண்டுக்கால ஆட்சியை நிறைவு செய்து, 5 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியில் அமர்வதற்கு மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் ஆட்சியில் பல ஏமாற்றங்களை சந்தித்த பொதுமக்கள் பாஜகவுக்கு கைக்கொடுத்தனர். தாமரை மலர்ந்தது. பாஜக சார்பில் பிரதமர் பதவிக்கு நிறுத்தப்பட்ட மோடி அமோகமாக வெற்றி பெற்றார்.

ஆனால், பாஜக வெற்றி பெற்றத்திற்கு அவர்கள் அளித்த வாக்குறுதிகள் மிக முக்கியம காரணமாக அமைந்தது. குறிப்பாக 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, சுய தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கான வங்கி அரசுக் கடன், பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு,இந்தியாவின் ஜீவ நதிகள் நதிகள் இணைப்பு, வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம், கிராமப்புறங்களில் கம்பியில்லா இணையதள சேவை, அனைவருக்குன் சொந்த வீடு திட்டம், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் என வண்ண வண்ண வாக்குகுறுதிகள் பொதுமக்களிஅ வெகுவாக கவர்ந்தன.

அப்போது பிஜேபி வெற்றி பெறுவதற்கு இந்த வாக்குறுதிகள் பெரிதளவில் உதவின. இந்நிலையில் மோடி அரசு ஆட்சி அமைத்து இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 4 ஆண்டுகளில் மோடி அரசு நமக்கு கொடுத்ததையும், பறித்ததையும் சின்ன ரீக்கேப் போல் பார்த்து விடலாம்.

1. 2017ல் ஜிஎஸ்டி வரி விதிப்பை மோடி அரசு அமல்படுத்தியது.

2. The Economic Offenders Bill சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதாவது ரூ.100 கோடிக்கும் மேற்பட்ட நிதி மோசடியில் ஈடுபட்டு தப்பிச் செல்வோரின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யலாம்.

3. பெண்குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு நீதி கிடைக்கும் வகையில் தூக்குத்தண்டனை சட்டம் (12 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள்)

இவையெல்லாம் அமலுக்கு வந்தவை. ஆனால் இதையும் தாண்டி மோடி அரசு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக பாஜக தலைவர்கள் அமித்ஷா மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் நீண்ட பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்,

அவற்றில் இடம்பெற்றுள்ளவை,

1. 2014ம் ஆண்டில் 38 சதவீத அளவில் இருந்த சுகாதார வசதிகள், தற்போது 83 சதவீதமாக அதிகரித்துள்ளது.7 கோடிக்கும் மேற்பட்ட புதிய கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

2. 50 கோடி கிராமங்களை உள்ளடக்கிய சுகாதாரக் காப்பீடு திட்டம், ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயிற்சி, அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு, கிராமப்புறப் பெண்களுக்கு எரிவாயு இணைப்பு போன்றவை சாதனை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. 31.52 கோடிக்கும் மேற்பட்ட ஜன் தன் வங்கி கணக்குகளால், 5.22 கோடி குடும்பங்கள், ஆண்டிற்கு ரூ. 330 என்ற வீதத்தில் குடும்பம் முழுவதிற்குமான ஆயுள் காப்பீட்டு வசதிகள்.

4. இரண்டு லட்சம் கோடி ரூபாய் செலவில் 100 ஸ்மார்ட் நகரங்கள் மேம்படுத்தப்படுவதாகவும்,கடந்த 4 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 69 ஆயிரம் கிலோமீட்டர் ஊரக சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் பயிர்க் காப்பீடு, குறைந்தபட்ச உற்பத்தி விலை அதிகரிப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.மேலும், 4ம் ஆண்டின் நிறைவையொட்டி, கட்சி ” தூய்மையான எண்ணங்கள், சரியான வளர்ச்சி ” எனும் புதிய தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்டு செயல்பட உள்ளதாக அமித்ஷா கூறியுள்ளார்.

இவை எல்லாவற்றையும் தாண்டி பாஜக அரசின் ஆட்சிக் காலத்தில் மக்களால் மறக்க முடியாத சம்பவம் எதுவென்றால் அது பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான். நாட்டில் உள்ள கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்று ஒரே நாள் இரவு பழைய ரூபாய் நோட்டுக்கள் எல்லாம் செல்லாது என்று மோடி அரசு அறிவித்தது இன்று வரை பலருக்கும் மறக்க முடியாத அறிவிப்புகளில் ஒன்று தான்.

×Close
×Close