பாஜகவின் குற்றச்சாட்டு தவறென நிரூபிக்க ஆதாரங்களை திரட்டும் 102 வயது தியாகி!

பி.எஸ். எடியூரப்பாவிற்கு இவரை நன்றாகவே தெரியும். இந்த விசயத்தில் அவர் மௌனம் காப்பது மேலும் அதிர்ச்சியாக உள்ளது - குஹா.

By: Updated: March 9, 2020, 01:12:01 PM

Amrita Dutta

Freedom Fighter H S Doreswamy readies CV : பாஜக தலைவர்களால் ”பொய்யான சுதந்திர தியாகி” என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள எச்.எஸ். குமாரசாமி தன்னுடைய வீட்டின் தரைதளத்தில் அமர்ந்து தன்னுடைய வாழ்க்கை துவங்கியதில் இருந்து, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றது, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றது, வினோபாவின் பூதன் இயக்கத்தில் பங்கேற்றது, சமீபத்தில் பெங்களூருவில் இருக்கும் ஏரிகளை தூய்மைப்படுத்துதல் தொடர்பாக போராடியது வரை அனைத்து குறித்தும் அவர் பேசினார். இதில் இந்த நாட்டுக்கு எதிராக நீங்கள் எதாவது பார்த்தீர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கர்நாடகாவில் பல ஆண்டுகளாக தெரிந்த ஒருவர் துரைசாமி. பாஜகவின் பிஜாபூர் எம்.எல்.ஏ பாசன்கவுடா பட்டீல் யத்னல் அவரை ”பொய்யான சுதந்திரப் போராட்டவீரர்” என்று குறிப்பிட்டார். மேலும் அவரை பாகிஸ்தானின் கையாள் என்றும் அவர் அழைத்தார். இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதற்கான ஆதாரத்தையும் வழங்குமாறு அவர் கூறியது கர்நாடகா அரசியல் வட்டத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பட்டீலின் இந்த சர்ச்சைக் கருத்தை பாஜகவினர் பலர் ஆதரித்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : 6 மாதத்தில் ரூ.18,000 கோடி ”வித்ட்ரா”… யெஸ் வங்கி விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன?

கடந்த செவ்வாய் கிழமையன்று, பாஜகவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி 1971ம் ஆண்டு பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் சீனியர் சுப்பிரின்டெண்ட்டால் கையெழுத்திடப்பட்ட அறிக்கையை வெளியிட்டது. அதில் 25 வயது மிக்க, திருமணமாகாத, துரைசாமி, டிசம்பர் 18, 1942ம் ஆண்டு முதல் டிசம்பர் 8 1943 வரை சிறையில் இருந்தது குறிப்பிடப்பட்டிருந்தது.  பிப்ரவரி 20ம் தேதி சி.ஏ.ஏவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற அமுல்யா லியோனா நோரோன்ஹா பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார். அவருடைய இல்லத்தில் துரைசாமி இருந்த புகைப்படத்தை அடிப்படையாக கொண்டு இது போன்ற சர்ச்சைக் கருத்துகளை பரப்பி வருகிறது பா.ஜ.க.

To read this article in English

இவர் எங்கள் மாநிலத்தின் மனசாட்சி என்று கூறுகிறார் வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா. மேலும் பாஜகவினர் வைத்திருக்கும் குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மரியாதை மற்றும் நேர்மையின் அடையாளமாக இருக்கும் மனிதர் பல்வேறு சமூக, சுற்றுச்சூழல் போராட்டங்களில் பங்கேற்றவர், நிலமற்றவர்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் குரல் கொடுத்தவர். அவர் காங்கிரஸ் ஆட்சியையும் விமர்சனம் செய்துள்ளார். விவசாயிகளின் பெயரை வைத்து பதவி ஏற்றுக் கொண்ட பி.எஸ். எடியூரப்பாவிற்கு இவரை நன்றாகவே தெரியும். இந்த விசயத்தில் அவர் மௌனம் காப்பது மேலும் அதிர்ச்சியாக உள்ளது என்றும் ராமச்சந்திர குஹா அறிவித்தார்.

60 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் இருக்கின்றேன். சித்தாந்தங்கள் வேறாக இருந்த போதிலும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக நண்பர்களும் எனக்கு உண்டு. ஆனால் ஒட்டுமொத்த பாஜகவும் எனக்கு எதிராக பேசும் என்று நான் நினைக்கவில்லை. நரேந்திர மோடியை விமர்சிக்கும் ஒருவராக இருப்பதையும் ஒப்புக் கொண்ட அவர், நான் ஒவ்வொரு அரசையும் விமர்சனம் செய்கின்றேன். ஒரு குடிமகனாக எனக்கு அளிக்கப்பட்ட உரிமை அது. இந்திரா காந்தியையும் நாம் விமர்சனம் செய்தேன். நீங்கள் ஆண்டு கொண்டிருப்பது ஒரு ஜனநாயக நாட்டினை. ஆனால் நீங்கள் ஒரு சர்வாதிகரியாய் நடந்து கொள்கின்றீர்கள். இந்நிலை நீடித்தால் நான் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று நீங்கள் ஒரு சர்வாதிகாரி என்று கூறுவேன் என்று கடிதம் எழுதினார். இதற்காக 4 மாதங்கள் சிறையில் அடிக்கப்பட்ட அவருக்கு மாஜிஸ்திரேட் “பிரதம மந்திரியை விமர்சனம் செய்ய அவருக்கு முழு உரிமையும் உண்டு” என்று கூறி விடுதலை செய்தார்.

Freedom Fighter H S Doreswamy readies CV Freedom Fighter H S Doreswamy readies CV

இயற்பியல் பாட ஆசிரியராக பணியாற்றிய அவர் மகாத்மாவின் அழைப்பால் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். ஒவ்வொரு அரசு அலுவலகத்திற்கு பக்கத்திலும் ஒரு ”டைம் பாம்” வைப்போம். யாரையும் கொல்வதற்காக அல்ல. அரசின் செயல்பாடுகளை, அலுவலகங்களின் செயல்பாடுகளை நிறுத்த. சில நேரங்களில் எலியின் வாலில் வெடிகுண்டினை கட்டி ரெக்கார்ட் ரூம்களில் எரிந்துவிடும். இதன் பின்னர் 6 மாதங்களில் தீயெரிப்பு சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்டு 1943ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டதை அவர் நினைவு கூறுகிறார்.

வடக்கு கர்நாடகாவில் கைகா அணுமின் நிலையம் அமைத்த போது நிலமற்ற விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க போராடியவர் அவர். காந்தி போன்று இருக்கும் அவரை பாகிஸ்தானின் கையாள் என்று அழைப்பதும், வன்முறையை தூண்டும் வகையில் நடந்து கொள்கிறார் என்று கூறுவதும் சிரிப்பினை தான் வரவழைக்கிறது என்று ஊழலுக்கு எதிராக போராடும் செயற்பாட்டாளர் எஸ்.ஆர். ஹிரேமத் கூறுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

நக்சல்கள் பலரையும் தங்களின் ஆயுதங்களை விட்டுவிட்டு ஜனநாயக முறையில் வாழ்வதற்கு மறைந்த ஊடகவியலாளர் கௌரி லங்கேஷூடன் இணைந்து போராடியவர் அவர். நக்சல்கள் இயல்பான வாழ்வினை வாழ வேண்டும் என்று விரும்பினேன். தற்போது இவர்கள் என்னை நக்சல்கள் என்று அழைக்கின்றனர்.

200க்கும் மேற்பட்ட பழங்குடியினரின் வீடுகள் இடிக்கப்பட்டன. அவர்களை பார்ப்பதற்காக ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு அங்கே சென்றேன். அவர்களில் யாரோ எங்களை வீட்டுக்கு இரவில் உணவருந்த அழைத்தனர். அப்போது அமுல்யா ஐந்தாம் வகுப்போ, ஆறாம் வகுப்போ படித்தார். இல்லை அவர் பிறந்த போதே நக்சலாக பிறந்தாரா என்ன என்று கேள்வி எழுப்புகிறார் துரைசாமி.

ஆர்.எஸ்.எஸ் எப்படி ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியும் இல்லாமல் பலனற்று கிடந்தது என்று கூறும் அவர், தொடர்ந்து வந்த அரசுகளின் தோல்வியே பாஜகவின் வளர்ச்சிக்கு காரணம் என்று கூறுகிறார் அவர். ஆர்.எஸ்.எஸ் எவ்வாறு இளைஞர்களை இஸ்லாமிற்கு எதிராக மாற்றுகின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். மூன்று மாதங்களுக்கு முன்பு தன் மனைவியை இழந்து வாடும் அவர் தற்போது தன்னுடைய மகள் வீட்டில் வசித்து வருகிறார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Freedom fighter h s doreswamy readies cv as bjp puts him to freedom fighter test

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X