Advertisment

பெட்ரொல் விலை 7 பைசாவும்; டீசல் விலை 5 பைசாவும் குறைப்பு!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
petrol price

petrol price

பெட்ரோல் விலை நேற்று 1 பைசா மட்டும் குறைக்கப்பட்ட நிலையில், இன்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 7 காசுகளும், டீசல் 5 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 16ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நள் அதிகரித்து வந்தது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 3.80 காசுகளும், டீசல் ரூ.3.38 காசுகளும் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று பெட்ரோல் 60 காசுகளும், டீசல் 56 காசுகளும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியானதில் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இணையதளத்தில் வெளியான தகவல் உண்மையில்லை என்றும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 1 காசு மட்டுமே குறைக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், இன்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 7 பைசா குறைந்துள்ளது என்றும், டீசல் 5 பைசா குறைந்துள்ளது என்று விலை நிலவரம் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 3 டாலர்கள் வரை குறைந்துள்ள போதிலும், பெட்ரோல், டீசல் விலை மிக சொற்பமான அளவில் குறைப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ioc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment