Advertisment

76 வயது அபூர்வ மனிதர்; முழுக்க இவரைச் சுற்றி காந்திஜிதான்

Mumbai collector ‘Gandhi is all around him’: கிஷோர் ஜுன்ஜுன்வாலா 76 வயதில் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை தன்னால் முடிந்த அளவு மகாத்மாக காந்தி தொடர்பான விஷயங்களை சேகரிக்கிறார். இதன் விளைவாக, இந்தியாவில் காந்தி பற்றிய சேகரிப்புகளில் மிகப்பெரிய தனியார் சேகரிப்பு அவரிடம் உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
gandhi jayanti, gandhi collectibles, gandhi exhibition, gandhi's objects, gandhi jayanti 2019, gandhi jayanti news, mahatma gandhi jayanti, gandhi at 150, மகாத்மா காந்தி 150வது பிறந்த நாள், மகாத்மா காந்தி, gandhi jayanti 150 anniversary, jhunjhunwala collector of gandhi's objects, jhunjhunwala

gandhi jayanti, gandhi collectibles, gandhi exhibition, gandhi's objects, gandhi jayanti 2019, gandhi jayanti news, mahatma gandhi jayanti, gandhi at 150, மகாத்மா காந்தி 150வது பிறந்த நாள், மகாத்மா காந்தி, gandhi jayanti 150 anniversary, jhunjhunwala collector of gandhi's objects, jhunjhunwala

Mumbai collector ‘Gandhi is all around him’: கிஷோர் ஜுன்ஜுன்வாலா 76 வயதில் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை தன்னால் முடிந்த அளவு மகாத்மாக காந்தி தொடர்பான விஷயங்களை சேகரிக்கிறார். இதன் விளைவாக, இந்தியாவில் காந்தி பற்றிய சேகரிப்புகளில் மிகப்பெரிய தனியார் சேகரிப்பு அவரிடம் உள்ளது. “யாரவது கூறலாம் என்னை பைத்தியம் என்று ஆனால், இது காந்திக்கானது” என்று கூறுகிறார். ஜுன்ஜுன்வாலா இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு அளித்த நேர்காணல் இது.

Advertisment

மும்பையைச் சேர்ந்த இந்த சேகரிப்பாளர் தனது பெரிய அளவிலான காந்தி நினைவுப் பொருட்கள் சேகரிப்பைப் பற்றி பேசிக்கொண்டிருக்கலாம். அவருடைய வீட்டின் ஒரு அறையில் தூண்கள் நிரம்பியுள்ளதைப் பற்றி பேசலாம். அல்லது அவை அவர் தனது வசம் உள்ள மிகவும் வழக்கத்துக்கு மாறான சேகரிப்பான மகாத்மா காந்தியின் சாம்பலைக் குறிப்பதாக இருக்கலாம்.

ஜுன்ஜுன்வாலாவின் வசம் உள்ள சேகரிப்புகளின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. அவரது சொந்த மதிப்பீடுகளின்படி, 10,000 க்கும் மேற்பட்ட பொருட்களை அவர் வைத்திருக்கிறார். அவைகளை நினைவுப்பொருட்கள் மற்றும் சேகரிப்புகள் என்று 100-க்கும் மேற்பட்ட வகைகளில் வகைப்படுத்தலாம். இந்த நேர்காணலின் போது, ஜுன்ஜுன்வாலா, மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்தநாள் விழாவையொட்டி இந்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் மும்பை தேசிய நவீன கலைக்கூடத்தில் ஏற்பாடு செய்துள்ள ஒரு மாத கால கண்காட்சிக்காக தனது சேகரிப்பில் உள்ள ஒவ்வொரு பொருட்களையும் காட்சிப்படுத்த பதிவு செய்வதில் மும்முரமாக இருந்தார்.

கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த கண்காட்சியில் “சந்ததி - மகாத்மா காந்தி: அன்றும் இன்றும் என்றும்” என ஜுன்ஜுன்வாலா தனது தனித்துவமான காந்தி நினைவுப் பொருள் சேகரிப்புகளை காட்சிப்படுத்த கண்காட்சியாளர்களில் ஒருவராக அழைக்கப்பட்டுள்ளார்.

“நான் எப்போதும் பொருட்களை சேகரிப்பவனாக இருந்தேன்”என்று கூறும் ஜுன்ஜுன்வாலா, அவர் முத்திரைகள், குறிப்புகள் மற்றும் நாணயங்களை சேகரித்து வளர்ந்துள்ளார். அது அவருக்கு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மீது ஆழ்ந்த ஆர்வத்தை வளர்த்ததால் அது ஒரு நல்ல பொழுதுபோக்காக இருந்தது.   ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஜுன்ஜுன்வாலா 1969 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி நினைவு முத்திரைகள், குறிப்புகள் மற்றும் நாணயங்களை வாங்கினார். அவை மகாத்மா காந்தியின் 100வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு இந்திய அரசு முதலில் வெளியிட்டவை. மேலும், அவரது சேகரிப்பு பழக்கம் இந்த தலைவரிடம் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்தது. ஜுன்ஜுன்வாலாவைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி இருமடங்கு முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

அவரது காந்தி நினைவு சேகரிப்புகள் பல தசாப்தங்களாக படிப்படியாக வளர்ந்து வருகின்றன. ஜுன்ஜுன்வாலா மேலும் இனி சேகரிப்புகளை வாங்க வேண்டியதில்லை. அவரது சேகரிப்பு வளர்ந்தவுடன், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் வசம் இருந்த காந்தியின் சேகரிப்புகள் மற்றும் நினைவுப்பொருட்கள் குறித்து அவரை அணுகத் தொடங்கினர். “அது அவர்கள் வீடுகளில் உள்ள பொருட்கள். அதை என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியாது. அந்த சேகரிப்புகள் காந்தியைக் கொண்டிருப்பதால், அவர்கள் அதை கவனக்குறைவாக வெளியெ கொடுக்கத் தயங்குகிறார்கள். எனவே அவர்கள் அதை எனக்குக் கொடுக்கிறார்கள்.” என்கிறார் ஜுன்ஜுன்வாலா.

காந்தி தொடர்பான புகைப்படங்கள், கலைப்பொருட்கள் மற்றும் சேகரிப்புகளை வைத்திருக்கும் உலகெங்கிலும் உள்ள மக்கள் எப்படியாவது அவரைக் கண்டுபிடிப்பார்கள் என்று ஜுன்ஜுன்வாலா சிரிப்புடன் கூறுகிறார்.

“நீங்கள் பொருட்களைத் தேடுகிறீர்களானால், அவர்கள் உங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு வழி இருக்கிறது. காந்தி தொடர்பான இதுபோன்ற பல சம்பவங்களை நான் அனுபவித்திருக்கிறேன்” என்கிறார் ஜுன்ஜுன்வாலா. 1913 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் டர்பனில் உள்ள கிரேவில்லே கிரிக்கெட் கிளப்பில் காந்தி எடுத்த புகைப்படம் அடங்கிய ஒரு புத்தகம் அவருக்கு கிடைத்தபோது மிகச் சமீபத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.

கட்டிடம் ஒரு பொருள்

காந்தி மீதான அவரது ஈர்பைப் பற்றிக் கேட்டால், ஜுன்ஜுன்வாலா ஒரு கணம் மௌனமாகிறார். அவரது பதிலைப் பற்றி சிந்திக்கிறார். கடந்த ஐந்து தசாப்தங்களில் ஒவ்வொரு நாளும் காந்தியைப் பற்றி அவர் நினைத்திருக்கலாம். “அது அஹிம்சை. அகிம்சை பாதை காரணமாக இருந்தது” என்று ஜுன்ஜுன்வாலா கூறுகிறார். “அவர் சுதந்திரத்தின் வெற்றியாளர்.” என்கிறார்.

காந்தியின் மேற்கோள்கள் தான் இந்த தலைவரை மிகவும் விரும்புவதற்கு காரணம் என்பதை ஜுன் ஜுன்வாலா ஒப்புக்கொள்கிறார். பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பிலிருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக போராட அவர்கள் வன்முறை பாதையைத் தேர்ந்தெடுத்தனர் என்று ஜுன்ஜுன்வாலா கூறுகிறார். ஆனால், இந்த பெயர்கள் பல வரலாற்றின் ஆண்டுகளில் மறைந்துவிட்டதாகத் தெரிகிறது. வன்முறையின்றி போரில் (பிரிட்டிஷுக்கு எதிராக) வெல்ல முடியும் என்று அவர்கள் நினைக்கவில்லை. இது எனது சிந்தனை. காந்தியின் விழுமியங்கள்தான் அவரை அவரது சமகாலத்தவர்களிடமிருந்து ஒதுக்கி வைத்தன. காந்தி இறந்து 71 ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டு நினைவுகூரப்படுவதற்கும் இதுவும் ஒரு காரணம் என்று ஜுன்ஜுன்வாலா நம்புகிறார்.

காந்தி தனது வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்த இரு நாடுகளான இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து சேகரித்தவைகளை ஒரே நேரத்தில் தொகுப்பாக ஜுன்ஜுன்வாலா உருவாக்கியுள்ளார். மேலும், இதேபோன்ற சேகரிப்பு மற்றும் ஆவணங்களில் ஈடுபட்டுள்ள நாட்டின் பிற சேகரிப்பாளர்களைப் பற்றி தனக்கு தெரியாது. இது போன்ற ஒரு தொகுப்பை செய்வதற்கான பொறுமையும் ஆர்வமும் யாருக்கும் இல்லை என்று அவர் கூறுகிறார். 50 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் இதில் முதலீடு செய்வது எளிதல்ல என்கிறார்.

உலகெங்கிலும் உள்ள சேகரிப்பாளர்கள் சவால்களை எதிர்கொள்கிறார்கள். அங்கே சேகரிப்புகள் போலியானவையாக இருக்கலாம். மேலும், ஜுன்ஜுன்வாலா கூறுகையில், அவர் சேகரிப்புகளை பெறுவதற்கு முன்பு அவர்களுக்கு காசோலைகள் செல்வதை உறுதிசெய்ய முயற்சிக்கிறேன். “இது அனுபவத்திலிருந்து அதன் நம்பகத்தன்மையை அறிய முடிகிறது. நான் பழைய ரூபாய் நோட்டுகளை சேகரிக்கிறேன். அதனால், உண்மையானது எதுவென்று எனக்குத் தெரியும்.” என்று கூறுகிறார். சிலர் காந்தியின் கடிதங்களாக அவருக்கு போலிகளை அனுப்ப முயன்றனர் என்று இரண்டு முறை கூறும் ஜுன்ஜுன்வாலா, “ஆனால், காந்தி உண்மையில் அந்த இடத்தில் இருந்தாரா என்று நான் புத்தகங்களைக் கொண்டு சோதனை செய்தேன். அவர் அங்கே இல்லை என்று தெரிந்தது.” என்று ஜுன்ஜுன்வாலா விளக்குகிறார்.

மதிப்புமிக்க உடைமைகள்

காந்தியின் வாழ்நாளில் ஆங்கிலம், இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் எழுதிய நன்கு பாதுகாக்கப்பட்ட 60 கடிதங்கள் அவரது மிகவும் மதிப்புமிக்க சேகரிப்புகளில் உள்ளன. அவை டர்பன், ஜோகன்னஸ்பர்க், சபர்மதி, கல்கத்தா, புது தில்லி போன்ற நகரங்களிலிருந்து அனுப்பப்பட்டவை. அவற்றில் சில கையெழுத்து மற்றும் தட்டச்சு செய்யப்பட்ட கடிதங்கள். பல உறைகளில் வெறுமனே 'மகாத்மா காந்தி, இந்தியா' அல்லது 'மகாத்மா காந்தி, டெல்லி, என எழுதப்பட்டிருந்தன. அவர்கள் அதில் எந்த முகவரியும் குறிப்பிடவில்லை. ஆனால் அவைகள் எப்படியாவது காந்தியை அடையும். ஏனென்றால், அவர் யார் என்று எல்லோருக்கும் தெரியும் என்று கூறும் ஜுன்ஜுன்வாலா அவரது சேகரிப்பில் உள்ள சில குறிப்பிட்ட உறைகளைப் பற்றி விவரிக்கிறார்.

அடுத்தது காந்தியின் பனை ஓலை அச்சு மை கடிதம் அவரது கையொப்பத்துடன் உள்ளது. கையால் எழுதப்பட்ட மேற்கோளில் ஆகஸ்ட் 12, 1946 தேதியிட்டு கல்கத்தா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், நீங்கள் என்ன செய்வது என்பது முக்கியமல்ல. ஆனால், முக்கியமானது என்ன அதை எப்படி செய்கிறீர்கள் என்பதுதான்.

இது ஜுன்ஜுன்வாலாவின் தலைவரின் விருப்பமான மேற்கோள்களில் ஒன்றாகும். மேலும், ஜுன்ஜுன்வாலாவின் வசம் உள்ள பெரும்பாலான சேகரிப்புகளைப் போலவே, கொல்கத்தாவில் உள்ள ஒரு நண்பர் அவருக்கு காந்தியின் கைரேகைப் பதிவை பரிசாக வழங்கியுள்ளார்.

“நான் முதலில் ஆரம்பித்தபோது, சேகரிப்புகளை வாங்கினேன். ஆனால், எனது ஆர்வம் பற்றி மக்கள் தெரிந்துகொள்ளத் தொடங்கியதும், அவர்கள் எனக்கு அந்த பொருட்களை பரிசளிக்கத் தொடங்கினர்” என்கிறார் ஜுன்ஜுன்வாலா. 2016 ஆம் ஆண்டில், மும்பையில் வசிக்கும் 60 வயதான ராஜீவ் பண்டரிநாத் கடேகர் ஜுன்ஜுன்வாலாவின் சேகரிப்பு பற்றி அறிந்து கொண்டார். 1948 ஆம் ஆண்டு முதல், கடேகரின் குடும்பத்தினர் காந்தியின் அஸ்தியைக் கொண்ட ஒரு சிறிய மரத் தாழியைக் வைத்திருந்தனர். அது காந்தியின் மகன்களில் ஒருவரான ராம்தாஸ் காந்தியால் அவர்களுடைய தந்தை பண்டாரிநாத் வாசுதேவ் கடேகருக்கு வழங்கப்பட்டது. ஏற்றுமதி விற்பனைத் துறையில் பணிபுரியும் கடேகர் கூறியபடி, அவரது தந்தை ராம்தாஸ் காந்தியுடன் 1948 இல் நாக்பூரில் உள்ள டாடா ஆயில் மில்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இரு குடும்பங்களுக்கிடையில் ஒரு நட்பை வளர்த்துக் கொண்டனர். தொடர்ந்து நட்பில் இருந்தனர். குழந்தையாக காந்தியின் குடும்பத்தை பார்த்து வந்ததை நினைவில் வைத்துள்ளார். காந்தியின் மரணத்திற்குப் பிறகு, அவரது மகன் ராம்தாஸ், காந்தியின் அஸ்தியை கடேகரின் தந்தைக்கு கொடுத்தார் என்று கடேகர் கூறுகிறார்.

“அவர் அதை எவ்வாறு பெற்றார் என்று நாங்கள் ஒருபோதும் கேள்வி எழுப்பவில்லை... சமீபத்தில் இதை என்ன செய்வது என்று நாங்கள் யோசித்தோம்” என்று கடேகர் இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் இடம் கூறினார். “இது ஒரு அமைதியான விவகாரம் அதனால் வீட்டில் ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை. அந்த நேரத்தில் நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்ததால் என் தந்தை அதை எவ்வாறு பெற்றார் என்பது பற்றி அதிகம் தெரியவில்லை.”

கடேகரின் குடும்பத்தினர் காந்தியின் அஸ்தியை ஒரு சிறிய அளவு வைத்திருந்தார்கள் என்பது பலருக்கும் தெரியாது. மேலும். அவர் அதை மக்கள் பார்க்கக் கூடிய இடத்தில் வைக்கவில்லை. “நான் மூடநம்பிக்கை கொண்டவன் இல்லை. ஆனால், அது எவ்வளவு பொருத்தமானது என்று எனக்குத் தெரியவில்லை” என்று காந்தியின் அஸ்தி அவர்களின் வீட்டில் இருப்பதைப் பற்றி கடேகர் கூறுகிறார்.

அவர் யாருக்கு அஸ்தியை கொடுப்பது என்று தேடும்போது, கடேகர் தனது மனைவியின் உறவினர் மூலம் ஜுன்ஜுன்வாலாவைக் கண்டுபிடித்தார். அந்த மரத் தாழியில் கடேகர் தந்தையின் கையால் எழுதப்பட்ட ஒரு சிறிய குறிப்பு உள்ளது. அதில் அந்த தாழியில் என்ன உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “ஜுன்ஜுன்வாலா” ஒரு உண்மையான சேகரிப்பாளராக இருப்பதால் அதைக் கொடுப்பது பொருத்தமானது என்று நான் நினைத்தேன். எந்தவொரு பிற நபரும் அதில் இருந்து பணம் சம்பாதிக்க முயற்சிப்பார்.”

காந்தியின் அஸ்தி அந்த தாழியில் இருப்பதாக சொன்ன அவரது தந்தையின் கதையை கடேகர் ஒருபோதும் சந்தேகிக்கவில்லை. “என் தந்தை 1918இல் பிறந்தார். ஒரு தீவிர தேசியவாதி மற்றும் நேர்மையான மனிதர்” என்று அவர் கூறுகிறார். “அதன் நம்பகத்தன்மையைக் கண்டுபிடிக்க, நீங்கள் டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும். இதைப் பற்றி மேலும் அறிய நான் ஒருபோதும் ஆர்வம் காட்டவில்லை.”

முதலீடு அல்ல

காந்தியின் நினைவுப் பொருட்கள் சேகரிப்பைத் தொடங்குவதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னர், ஜுன்ஜுன்வாலா காந்தியின் ஒரு மேற்கோளைக் கண்டுபிடித்ததை நினைவு கூர்ந்தார். அதில் அவர் “இது 15 வயது மாணவராக அவருடைய பள்ளி பாடப் புத்தகத்தில் “பாவத்தை வெறுக்கிறேன், பாவியை அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார். நான் 1959 ஆம் ஆண்டில் அந்த மேற்கோளைக் கண்டுபிடித்தேன். நான் அதை மிகவும் விரும்பினேன். காந்தியின் மேலும் பல மேற்கோள்களைத் தேட ஆரம்பித்தேன்.” என்று ஜுன்ஜுன்வாலா கூறுகிறார். இந்த பயணத்தில் அவர் என்ன தொடங்கினாரோ அது அவர் வாழ்நாள் முழுவதும் பரவியுள்ளது.

சேகரிப்புகள் என்பது அன்றாட பொருட்களான பொத்தான்கள், புத்தகக் குறிப்புகள், பாத்திரங்கள், அலங்கார பொருள்கள் போல சேகரிப்பு பொருட்கள். வெவ்வேறு பொருட்கள் காந்தியிடம் இடம்பெற்றுள்ளன. காந்தியின் செல்வாக்கு மற்றும் புகழ் இந்தியாவில் 1915 மற்றும் 1947 ஆண்டுகளுகு இடையில் இதுபோன்ற பல நினைவுப் பொருட்கள் சேகரிப்புகளை உருவாக்க வழிவகுத்தது என்று ஜுன்ஜுன்வாலா விளக்குகிறார்.

ஜுன்ஜுன்வாலா பல தசாப்தங்களாக வைத்திருக்கும் இந்த சேகரிப்புகளை உருவாக்குவது சிறிய சாதனையல்ல. இந்த செயல்முறை அவரது வாழ்க்கையின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை ஆதிக்கம் செலுத்தியுள்ளது. குடும்ப வியாபாரத்தை நடத்துவதற்கான தனது பொறுப்புகளுக்கும் காந்தி சேகரிப்புகளை சேகரிப்பதற்கான அவரது ஆர்வத்திற்கும் இடையில் ஒரு சமநிலையைக் கண்டறியும் திறனுக்காக அவர் “ஜுகாத்” என்று பாராட்டுகிறார். ஜுன்ஜுன்வாலா தனது சேகரிப்பைக் கட்டியெழுப்ப தனிப்பட்ட பணத்தை செலவிட்டார். மேலும் அவரது முதலீட்டைக் குறிப்பிடும்போது “முதலீடு” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை விரும்பவில்லை. “இது ஒரு முதலீடு அல்ல, ஏனென்றால் உலகம் எனது ஆர்வத்தை வணிகமயமாக்குகிறது; இதில் நான் ஏதோ ஒன்றை நேசிக்கிறேன்.” என்று கூறுகிறார்.

ஜுன்ஜுன்வாலா தனது குடும்பத்தில் காந்தியைப் பற்றி ஆர்வமுள்ளவர்கள் யாரும் இல்லை என்பதால் அவர் தனது சேகரிப்பை ஒரு அருங்காட்சியகத்தில் சேமிக்க விரும்புகிறார். இது பெரிய அளவில் நிதி தேவைப்படும் திட்டம் என்றும் அந்தளவுக்கு தன்னிடம் நிதி இல்லை என்றும் கூறுகிறார். “யாராவது எனக்கு நிதி கொடுத்தால், நான் அதை செய்வேன். நான் இதை 50 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரித்தேன். மக்கள் அதைப் பார்க்கக்கூடிய இடத்தில் சேமித்து வைக்க விரும்புகிறேன்.”ஆனால், அவர் தனக்குத் தேவையான நிதியை வாங்க முடியாவிட்டால், அவருக்கு வேறொரு திட்டம் உள்ளது. “இதை நான் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அருங்காட்சியகங்களுக்கு விற்க விரும்புகிறேன். வெளிநாட்டில் அவர்கள் அதை அதிகமாக மதிப்பிடுவார்கள் என நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறுகிறார்.

ஜுன்ஜுன்வாலா தனது தனித்துவமான சேகரிப்பில் இந்திய அரசாங்கத்தின் ஆர்வமின்மையைக் குறை கூறுகிறார். பல ஆண்டுகளாக, கலாச்சார அமைச்சகத்திற்கு அவர் அனுப்பிய கடிதங்களுக்கு பதிலளிக்கப்படவில்லை. இந்த ஆண்டு, தேசிய நவீன கலைக்கூடத்தின் கண்காட்சியில் காட்சிப்படுத்துவற்கு முதல் முறையாக அரசாங்கம் தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. “எனது சேகரிப்பின் மதிப்பு என்பது பலர் நினைப்பதுபோல பணத்தின் விதிமுறைகளால் ஆனது அல்ல. நான் நாள் முழுவதும் காந்தியைப் பற்றி நினைக்கிறேன். காந்தி என்னைச் சுற்றிலும் இருக்கிறார்.” என்கிறார் ஜுன்ஜுன்வாலா. அதனால்தான், மகாத்மாவின் 150 வது பிறந்தநாளில், ஜுன்ஜுன்வாலாவின் காந்தி நினைவுப் பொருட்களின் தனிப்பட்ட சேகரிப்பு மட்டும் வளர்ந்து வருகிறது.

Mahatma Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment