Advertisment

Gandhi Jayanti 2019 Updates: 2022-க்குள் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான இலக்கை அடைய வேண்டும்: பிரதமர் மோடி

Mahatma Gandhi Jayanti 2019 Live: மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.அனைத்து நிகழ்வையும் இங்கே காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியாவில் கொரொனா பாதிப்பு 110-ஐ எட்டியது: சார்க் நாடுகள் இணைந்து எதிர்கொள்ள மோடி அழைப்பு

Gandhi Jayanti News 2 October 2019: இது மகாத்மாவின் 150 வது பிறந்த நாள் நாடு முழுவது உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி தேசத் தந்தையின் 150 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பாதயாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் இன்று முழுவதும் சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவினைக் கொண்டாடி வருகின்றனர் .

Live Blog

Mahtama Gandhi's 150th birth anniversary: மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி குஜராத்துக்கு வருகைத் தரவிருக்கிறார். மேலும், லைவ் செய்திகளுக்கு பின்தொடரவும்.



























Highlights

    21:53 (IST)02 Oct 2019

    ஊரக அளவில் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு தேசிய விருது

    ஊரக அளவில் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. தமிழகத்திற்கான தேசிய விருதை அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் வேலுமணியிடம் பிரதமர் மோடி வழங்கினார்.

    21:07 (IST)02 Oct 2019

    2022 க்குள் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான இலக்கை நாம் அடைய வேண்டும்: பிரதமர் மோடி

    பிரதமர் மோடி: துப்புரவு, சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு, இந்த விஷயங்கள் அனைத்தும் காந்திக்கு மிகவும் பிடித்தவை. அனைவருக்கும் பிளாஸ்டிக் ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, 2022 ஆம் ஆண்டிற்குள் நாட்டிலிருந்து ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் இலக்கை நாம் அடைய வேண்டும் என்று கூறினார்.

    21:03 (IST)02 Oct 2019

    முழு உலகமும் வியப்படைகிறது: தூய்மை இந்தியா திட்டம் பற்றி பிரதமர் மோடி பேச்சு

    பிரதமர் நரேந்திர மோடி: இன்று உலகம் முழுவதும் நம்மை பாராட்டுகிறது. விருது அளிக்கிறது. 60 மாதங்களில் 60 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கழிப்பறைகளை வழங்குதல். 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டியதை உலகம் முழுவதும் கண்டு வியப்படைகிறது என்று கூறினார்.

    20:46 (IST)02 Oct 2019

    திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடு இந்தியா என அறிவித்தார் பிரதமர் மோடி

    அகமதாபாத்தில் உள்ள சபர்மதியில் நடைபெறும் மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்தநாள் விழாவில், பிரதமர் மோடி திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடு இந்தியா என அறிவித்தார்

    20:42 (IST)02 Oct 2019

    தூய்மை இந்தியா காந்தியின் கனவை இந்தியா நிறைவேற்றியதில் திருப்தி: பிரதமர் மோடி

    சபர்மதி ஆசிரமத்தில் பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி குறிப்பிடுகையில், “காந்தியின் 150 ஆண்டு பிறந்தநாள் விழாவில் தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) என்ற அவரது கனவை நிறைவேறியதை காண்கிறோம் என்பதில் நான் திருப்தி அடைகிறேன். இந்த சந்தர்ப்பத்தில் இந்தியா திறந்தவெளி கழிப்பிடத்தை நிறுத்தியதில் நான் அதிர்ஷ்டசாலி என்று உணர்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

    20:14 (IST)02 Oct 2019

    மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளில் ரூ.150 நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர்

    பிதமர் மோடி, அகமதாபாத்தில் மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்த நாள் விழாவில், ரூ.150வது நினைவு நாணயத்தை வெளியிட்டார்.

    20:01 (IST)02 Oct 2019

    அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றங்கரையில் தூய்மை இந்தியா தினம் நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வருகை

    அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில் தூய்மை இந்தியா தினம் (ஸ்வச் பாரத் திவாஸ்) நிகழ்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி வந்தார். இதில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும் கலந்து கொண்டார்.

    19:43 (IST)02 Oct 2019

    பிரதமர் மோடி சபர்மதி ஆற்றங்கரையை பார்வையிட்டார்

    மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்த பின்னர், அங்கே உள்ள சபர்மதி ஆற்றங்கரையை பார்வையிட்டார்.

    19:27 (IST)02 Oct 2019

    மகாத்மாவின் போதனைகள் உலகின் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண்கின்றன: பிரதமர் மோடி

    மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று  மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், அவர்  "உலகம் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினையையும் எடுத்துக் கொள்ளுங்கள், மகாத்மா காந்தியின் போதனைகள் அந்த சவால்களுக்கு தீர்வுகளை வழங்குகின்றன." என்று கூறினார்.

    19:03 (IST)02 Oct 2019

    பிரதமர் மோடி சபர்மதி ஆசிரத்தில் மகாத்மா காந்திக்கு மரியாதை

    மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை அடைந்து மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.

    13:58 (IST)02 Oct 2019

    ஐ. நா பொதுச் செயலாளர் ட்வீட்

    மகாத்மா காந்தி வன்முறையற்ற அகிம்சை போராட்டத்தால் வரலாற்றை மாற்றியதில்  முன்னோடியாக இருந்தார்.  காந்தியின் தத்துவத்தை மையாமாக வைத்துதான் ஐக்கிய நாடுகளின் செயல்பாடு உள்ளது என்று ஐ. நா பொதுச் செயலாளர் ட்வீட் விடுத்துள்ளார் . 

    13:50 (IST)02 Oct 2019

    காந்தியும் பீகாரும்:

    ஏப்ரல், 1917 இல் சம்பரன் சத்தியாக்கிரக இயக்கதில் இருந்தே,  அவர் தனது வாழ்க்கையில் பல முறை பீகார் சென்றார். காந்திக்கும் பீகாருக்கும் ஒரு இணைப் பிரியாத இணைப்பு  கடைசி வரை இருந்து. 

    சில பிரத்தியோகப் படங்களை இங்கே காணலாம்: 

    publive-image    

    publive-image

    publive-image

    publive-image

    13:08 (IST)02 Oct 2019

    மோகன் பகவத் கருத்து:

    சுயம்சேவாக் போன்ற அமைப்புகள் போல் பாரதத்தை மறுசீரமைக்க நினைத்தவர்  காந்தி.  சமூக சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்திற்காக உறுதியாக நின்றதோடு மட்டுமல்லாமல், தனது பார்வையை செயல்பாட்டாவும்  மொழிபெயர்த்தவர்.  அவரின் வார்த்தைகளை நம் வாழ்க்கையில் உணர வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும், வெளிப்படுத்த வேண்டும் என்று ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். 

    " id="lbcontentbody">

    12:50 (IST)02 Oct 2019

    காங்கிரஸின் பாதயாத்திரை

    மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு ராகுல் காந்தி காங்கிரஸின் 'பத்யாத்ரா'வுக்கு தலைமை தாங்கி துவக்கி வைத்தார். டெல்லி காங்கிரஸ் அலுவலகம் ராஜீவ் பவனில் தொடங்கி சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜ்காட் நோக்கி இந்த பாதயாத்திரை நடக்க விருக்கிறது. காந்தியின் எண்ணங்களையும், கோட்பாடுகளையும் மக்களிடம் எடுத்து செல்வதற்காக இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.   

    publive-image

    12:08 (IST)02 Oct 2019

    காந்திஜியும், கன்னியாகுமரியும்

    காந்தியடிகளின் அஸ்தி 12.02.1948 அன்று குமரிக்கடலில் கரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு 1956ம் ஆண்டு குமரிக்கடற்கரையில் அவர் நினைவாக ஒரு மண்டபம் எழுப்பப்பட்டது. அந்த மண்டபத்தில் ஒரு விஷேசம் என்னவென்றால் அவர் பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று மண்டபத்தின் மேற்கூரையில் உள்ள ஒரு துவாரம் வழியாக காந்தியடிகளின் அஸ்தி வைத்த இடத்தில் சூரிய ஒளி விழும். இந்நிகழ்ச்சியை வருடந்தோறும் அக்டோபர் 2 அன்று தமிழ் நாடு அரசு சிறப்பாக நடத்துகின்றது. 

    மேலும், படிக்க காந்திஜியும், கன்னியாகுமரி ஆலயப் பிரவேசமும்!

    11:45 (IST)02 Oct 2019

    பாராளுமன்றத்தில் மகாத்மா காந்திக்கு மரியாதை

    பிரதமர் மோடி, ஓ.எம் பிர்லா, சோனியா காந்தி, ராகுல், கெஜ்ரிவால் ஆகியோர் மகாத்மா காந்திக்கு பாராளுமன்றத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். 

    publive-image

    publive-image

    publive-image

    publive-image

    11:30 (IST)02 Oct 2019

    ஸ்டாலின் மரியாதை:

    சக இந்தியர்களோடு இணைந்து தேசத்தின் தந்தைக்கான மரியாதையை  நானும் செலுத்துகிறேன். அகிம்சை, இரக்கம், கருத்து வேறுபாடு மற்றும் துன்பங்களை எதிர்கொள்ளும்போது தைரியமாக இருக்க வேண்டும் என்று அவர் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார் . முன்னெப்போதையும் விட, இந்தியாவைப் பற்றிய காந்தியின் யோசனைகளை இன்று நாம் நினைவில் கொள்ள வேண்டும். உண்மை எப்போதும் வெற்றிபெறட்டும் என்று ஸ்டாலின் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

    11:07 (IST)02 Oct 2019

    புகைப்படங்களைக் காணுங்கள்

    | காந்தி ஜெயந்தியை இந்தியா கொண்டாடுகிறது.  பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மகாத்மாவுக்கு அஞ்சலி வருகின்றனர். 

    புதுடெல்லியின் ராஜ்காட்டில் பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துகின்றனர்                                                                                                                             புதுடெல்லியின் ராஜ்காட்டில் பிரதமர் மோடி 

    publive-image முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 

     

    publive-image

    லூதியானாவில் அமைதி ஊர்வலம் 

    publive-image

    அகமதாபாத்தில் உள்ள காந்தி ஆசிரமம்

    publive-image 

    காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி

    publive-image

    ஆகா கான் அரண்மனை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

    10:59 (IST)02 Oct 2019

    மணல் சிறப்க் கலைஞர்

    ஒடிசா பிரபல மணல் சிறப்க் கலைஞர்  சுதர்சன் பட்நாயக் , எழுச்சியூட்டும் செய்தியுடன் மகாத்மா காந்திக்கு  தனது பாணியில் மரியாதை செலுத்தியுள்ளார் .

    Gandhi 150 birth anniversary

    gandhi 150 birth anniversary

    Gandhi Tribute

    publive-image

    10:48 (IST)02 Oct 2019

    காந்தியின் குரல்

    இந்தியா கிராமங்களால் கட்டியமைக்கப்பட்ட நாடு.  கிராமங்களின் வளர்ச்சி இல்லாமல் நாடு அபிவிருத்தி செய்ய முடியாது என்றார் காந்தி. வளர்ச்சியின் நன்மைகள் ஏழைகளுக்கு சென்றைடைய வேண்டும்  என்று  1947 நவம்பர் 29 ஆம் தேதி பிரார்த்தனா சபைக்குப் பிறகு மகாத்மகாந்தி பேசுவதை இங்கே  கேளுங்கள். 

    10:43 (IST)02 Oct 2019

    அரசியலை வெகுஜனத்திடம் கொண்டு சென்றது காந்தி தான்:

    இந்திய வரலாற்றில் காந்தியின் வருகை பல மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது. இந்தியாவில் மகாத்மா காந்தியின் வருகைக்குப் பிறகுதான் இந்தியா முழுவதும் வெகுஜன மக்கள் திரள் போராட்டம் என்ற ஒன்று வருகிறது. அதற்கு முன்பு அது ஏதேனும் ஒரு சமூக குழுவின் மக்கள்திரள் போராட்டமாக மட்டுமே இருந்தது. காந்தி ஒவ்வொரு போராட்டத்தையும் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்ப்பதற்காக மட்டுமில்லாமல் மக்களை ஒருங்கிணைக்கும் வடிவமாகவும் அதை மாற்றினார்.

    மேலும், படிக்க மகாத்மா காந்தி இந்தியாவின் கை விளக்கு

    10:36 (IST)02 Oct 2019

    ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்:

    தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு எனது அஞ்சலியை செலுத்திகிறேன். அடக்குமுறை, மதவெறி & வெறுப்பு அரசியலை எதிர்கொள்ள  அன்று காந்தி காட்டிய அன்பும், அகிம்சையுமே இன்று நமக்குத் துணையாய் உள்ளது.    

    10:25 (IST)02 Oct 2019

    ப.சிதம்பரம் காந்தி ஜெயந்தி வாழ்த்து:

    இன்று மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள். அந்த பெரிய ஆத்மாவுக்கு எனது வணக்கங்களையும், மரியாதைகளையும் இங்கே உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று ப.சிதம்பரத்தின் சார்பாக அவரின் குடும்ப நபர்கள் ட்வீட் செய்துள்ளனர்.  

    10:19 (IST)02 Oct 2019

    தூய்மை உறுதிமொழி

    காந்தி ஜெயந்தி அன்று டெல்லி கன்டோன்மென்ட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களுக்கு தூய்மை உறுதிமொழியை வாசித்தார்.

    publive-image

    Tamil Nadu news today updates:  தண்டி கடற்கரையில் நவ்சாரி மாவட்ட நிர்வாகத்தால் ஒரு மெகா தூய்மை இயக்கம் காந்தியின் 150வது பிறந்த நாள் முன்னிட்டு நடத்தப்பட்டு வருகிறது. 'உப்பு சத்தியாக்கிரகம்' என்று அழைக்கப்படும் ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக காந்தி தண்டியில் உப்பு தயாரித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.தண்டி கடற்கரையில் நவ்சாரி மாவட்ட நிர்வாகத்தால் ஒரு மெகா தூய்மை இயக்கம் காந்தியின் 150வது பிறந்த நாள் முன்னிட்டு நடத்தப்பட்டு வருகிறது. 'உப்பு சத்தியாக்கிரகம்' என்று அழைக்கப்படும் ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக காந்தி தண்டியில் உப்பு தயாரித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.மேலும், தண்டி கடற்கரையை சுத்தம் செய்வதற்கான தூய்மை இயக்கத்தில் சுமார் 1500 பேர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக நவ்சரி கலெக்டர் அட்ரா அகர்வால் தெரிவித்தார்.

    காந்தியின் அகிம்சை போதனைகள் குறித்து சுமார் 900 மாணவர்கள் இன்று காந்தி சபர்மதி ஆசிரமத்தில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

    Mahatma Gandhi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment