Advertisment

காந்தி ஜெயந்தி: நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை

காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gandhi Jayanti, Venkaiah Naidu, Mahatma Gandhi, Rajghat, Lal Bahadur Shastri,

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 149-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் அமைந்திருக்கும் காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலரர் தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisment

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவைர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர். இதைத்தொடர்ந்து, அங்கு அமர்ந்து சிறிது நேரம் அவர்கள் பிராத்தனை செய்தனர்.

காந்திஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: தலைவணங்குகிறேன்.மகாத்மா காந்தியின் சிந்தனைகள் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு உந்து சக்தியாக விளங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, டெல்லி ராஜ்காட்டில் நினைவிடத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில், புதியதாக நிறுவப்பட்ட காந்தி உருவ்சச்சிலையை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

இதேபோல, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளும் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது நினைவிடத்திலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

Mahatma Gandhi President Ram Nath Kovind Vice President Venkaiah Naidu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment