அந்த 3 பேர் இல்லாமல் வலுவாக முடியுமா எதிர்க்கட்சி கூட்டணி ?

மூன்று மாநில முதலமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்காத எதிர்க்கட்சித் தலைவர்களால் உருவாகுமா மூன்றாவது கூட்டணி ?

General Election 2019 : Opposition alliance : பாஜகவை மூன்று மாநிலங்களில் தோல்வியடையச் செய்து, காங்கிரஸ் மீண்டும் வாகை சூடியது. நேற்று மட்டும் மூன்று மாநிலங்களிலும் தொடர்ச்சியாக முதல்வர் பதவியேற்பு விழாக்கள் நடைபெற்றன. ராஜஸ்தானில் அசோக் கெலாட்டும், மத்தியப் பிரதேசத்தில் கமல் நாத்தும், சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பகெலும் முதல்வராக பதவியேற்றார்கள்.

மேலும் படிக்க : சீக்கியர்கள் ஏன் கமல் நாத்தை வெறுக்கிறார்கள் 

மூன்று மாநில முதல்வர்கள் பதவியேற்பு நிகழ்வுகளிலும் பிரதான எதிர்க்கட்சிகள் மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சியினர் ஒன்றாக பயணித்து விழாக்களை செழுமையாக வழிநடத்தினர்.

General Election 2019 : Opposition alliance : நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மூவர்

மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ஒரே பேருந்தில் எதிர்கட்சியினர் அனைவரும் ஒன்றாக பயணித்தது. பிரதான எதிர்கட்சியினர் அனைவரும் ஒன்றாக பயணித்து தங்களின் ஒற்றுமையை நிலை நிறுத்தினாலும், அங்கே இல்லாமல் போனவர்கள் பற்றிய கேள்வியும் மனதில் எழாமல் இல்லை.

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நின்ற பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி அங்கு இல்லை. தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில், தொகுதிப் பங்கீட்டில் நிலவிய அதிருப்தி காரணமாக காங்கிரஸுடன் இணைய மறுத்துவிட்டார் மாயாவதி. சத்தீஸ்கர் மாநிலத்தில் அஜித் ஜோகியுடன் கூட்டணியில் இருந்தார் மாயாவதி என்பது குறிப்பிடத்தக்கது.

சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை விரும்பிய மம்தா பானர்ஜீயும் கூட விழாவில் பங்கேற்கவில்லை. மாறாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இருந்து தினேஷ் திவாரி விழாவில் பங்கேற்றார்.

ஆனால் இந்த மூன்று தலைவர்களும், எச்.டி. குமாராசாமி, கர்நாடகாவின் முதல்வர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிரதான எதிர்க்கட்சிகளின் கூட்டணியை சற்று அதிக பலத்துடன் கூறிய இடம் கூட அது தான்.

ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் இருந்து சஞ்சய் சிங், அசோக் கெலாட்டின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்று இரு கட்சிகளுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பதை தெளிவுப்படுத்தினார்.  நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை விட, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதவர்களால் தான் மூன்றாம் கூட்டணி உருவாகுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close