Ghulam Nabi Azad: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் இருந்து மூத்த தலைவரும், மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத்தை நீக்கி, அக்குழுவை வியாழன் அன்று மறுசீரமைத்தார்.
கட்சியின் அமைப்பில் பெரும் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதிய ஜி23 தலைவர்களில் ஆசாத்தும் ஒருவர். முன்னாள் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் முகுத் மிதி ஆகியோரையும் குழுவிலிருந்து சோனியா நீக்கினார்.
ஆசாத்திற்கு நெருக்கமான ஜம்மு காஷ்மீர் காங்கிரஸில் உள்ள 20 தலைவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்த 24 மணி நேரத்தில் குழுவில் இருந்து சோனியா அவரை நீக்கியுள்ளார். யூனியன் பிரதேசத்தில் தலைமை மாற்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக அவர்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள்.
இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜி எம் சரூரி, விகார் ரசூல் மற்றும் டாக்டர் மனோகர் லால் சர்மா ஆகியோரும் அடங்குவார்கள். அதே போன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜுகல் கிஷோர் சர்மா, குலாம் நபி மோங்கா, நரேஷ் குப்தா, முகமது அமீன் பட், சுபாஷ் குப்தா, மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் அன்வர் பட், குல்காம் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் உறுப்பினர் அன்யதுல்லா ராதர் ஆகியோரும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தார்கள்.
மீண்டும் ஏ.கே. ஆண்டனி தலைமையிலான புதிய ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தாரிக் அன்வர் செயலாளராகவும், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் அம்பிகா சோனி, மூத்த டெல்லி காங்கிரஸ் தலைவர் ஜெய் பிரகாஷ் அகர்வால் மற்றும் கர்நாடகாவின் தலைவர் ஜி. பரமேஸ்வராவும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பரில் அதன் உறுப்பினர்களில் ஒருவரான மோதிலால் வோரா இறந்த பிறகு இந்தக் குழு பெரிதாக கூட்டங்கள் ஏதும் நடத்தவில்லை.
ஜி23 உறுப்பினர்களில் முக்கியமானவர் ஆசாத் ஆவார். இந்த குழுவில் மற்றொரு உறுப்பினரான கபில் சிபில், எங்கள் கட்சியில் தற்போது தலைவர் என்று யாரும் இல்லை. எனவே இந்த முடிவுகளை யார் எடுக்கின்றார்கள் என்று தெரியவில்லை. தெரிந்தது போன்றும் தெரியாதது போன்றும் இது இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். இது காங்கிரஸ் மத்தியில் பெரும் சர்ச்சையை பேற்படுத்தியது. கடந்த மாதம் CWC கூட்டத்தில் உரையாற்றிய சோனியா, தான் முழுநேர காங்கிரஸ் கட்சித் தலைவர் என்று கூறினார். மேலும், வெளிப்படைத் தன்மைக்காக பெரிதும் அறியப்படும் என்னை மீடியா மூலம் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil