Advertisment

குலாம் நபி ஆசாத்தின் இடத்தை நிரப்பப் போவது யார்? காங்கிரஸிடம் இருக்கும் தேர்வுகள் என்ன?

மகாராஷ்ட்ராவில் இருந்து ஆசாத் 1990ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார்.

author-image
WebDesk
New Update
Ghulam Nabi Azad replacement: Many names of heavyweights in Cong’s balancing game

Manoj

Advertisment

Ghulam Nabi Azad replacement: Many names of heavyweights in Cong’s balancing game :  குலாம் நபி ஆசாத்திற்கு பிறகு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக சோனியா ஒருவரை தேர்வு செய்ய இருக்கின்ற நிலையில், காங்கிரஸில் உள்கட்சி பூசல் சூழலில் இருந்து வெளியேறுமா? 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கட்சி மிகவும் மோசமான தோல்வியை பெற்ற இந்தி மாநிலங்களில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவாரா? தொடர்ச்சி மற்றும் அனுபவத்தினை கருத்தில் கொள்வார்களா? அல்லது சமூகநீதி அரசியலுக்கு முக்கியத்துவம் தரப்படுமா? என்பது போன்ற தெரிவுகள் பரீசிலிக்கப்படுகிறது.

பிப்ரவரி 15ஆம் தேதி மாநிலங்களவையில் பொறுப்பிலிருந்த ஓய்வு பெறுகிறார் ஆசாத். இந்நிலையில் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 2014 முதல் 2019 ஆம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவராக செயல்பட்டவர். ஆனந்த் சர்மா மாநிலங்களவை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் திக்விஜய சிங் ஆகியோர் ஒருவிதத்தில் இந்த பதவிக்கு தகுதியானவர்களாக காணப்படுகின்றனர்.

Ghulam Nabi Azad replacement: Many names of heavyweights in Cong’s balancing game

 

ஆசாத்திற்கு அடுத்து அந்த பதவிக்கு யார் வருவார் என்பதை சோனியா காந்தி பிப்ரவரி 15க்கு பிறகே அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் பரவலாக மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்களில் ஆசாத்தும் ஒருவர். அதில் ஷர்மாவும் கையெழுத்திட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், கடிதத்தால் ஏற்பட்ட சச்சரவுகள் இன்னும் ஓயாத நிலையில், அவர்களில் பலரை முக்கியமான கட்சி குழுவில் சோனியா நியமித்தார். அவர்களுக்கு எதிராக எந்தவிதமான பாகுபாட்டையும் காட்டவில்லை என்றே அது சுட்டுகிறது.

பிராந்தியத்தில் சமநிலையைக் கொண்டு வருவதும் முக்கியமான பரிசீலனைகளில் ஒன்றாக உள்ளது. காங்கிரஸ் மக்களவை தலைவர் எம். பி. அதிர் ரஞ்சன் சௌத்ரி மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். துணைத்தலைவர் கௌரவ் கோகாயும் இந்தி பேசும் மாநிலங்களை சேராதவர். காங்கிரஸ் கட்சியினர் இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து வெறும் 5 மக்களவை உறுப்பினர்களையே கொண்டுள்ளனர். இந்த இடைவெளியை குறைக்க வேண்டும் என்றால் திக்விஜயசிங் மற்றும் ஷர்மா சிறந்த தேர்வாக இருப்பார்கள்.

மேலும் படிக்க : குலாம் நபி ஆசாத்துக்கு பிரியாவிடை: மாநிலங்களவையில் கண் கலங்கிய மோடி

முன்னாள் மத்திய அமைச்சரான ஷர்மா தன்னுடைய பணியை தொடர்வதற்கு சமிஞ்சை வெளியிட்டுள்ளார். ஆறு ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் மாநிலங்ளவை துணைத் தலைவராக அவர் பணியாற்றியுள்ளார். இரண்டு முறை முதல்வராக பணியாற்றியுள்ள திக்விஜய சிங்கிற்கும் பலமான அரசியல் செல்வாக்கு உள்ளது. ஷர்மாவைப் போன்றே இவரும் 1984ம் ஆண்டு எம்.பியாக பொறுப்பேற்றார்.

மூத்த தலைவர் மற்றும் சிறந்த பேச்சாற்றால் கொண்டவர் என்ற ரீதியில் சிதம்பரம் பார்க்கப்படுகிறார். அவருக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளாது. பிராந்தியத்தை தாண்டிய வாய்ப்புகள் பார்க்கப்படுமானால் சிதம்பரத்திற்கு அடுத்து மல்லிகார்ஜூன கார்கே கருத்தில் கொள்ளப்படுவார். ஆசாத்தின் ஓய்வை கருத்தில் கொண்டு தான் கார்கே மாநிலங்களவைக்கு கொண்டு வரப்பட்டார் என்று பலரும் நம்புகின்றனர். மேலும் காங்கிரஸ் மக்களவை தலைவராக இருந்து பல்வேறு பிரச்சனைகளில் கேள்வி எழுப்பிய தலித் தலைவர் மிக சிறப்பாக இந்தி பேசுவார்.

பல மூத்த தலைவர்களும், மீண்டும் ஆசாத்தே அந்த பதவிக்கு அழைத்து வரப்படுவார் என்றே நம்புகின்றனர். கடிதம் எழுதிய ஜி23 தலைவர்கள் மத்தியில் இதில் கசப்பு நிலவுகிறது. கேரளாவைச் சேர்ந்த கே.சி. வேணுகோபால், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கடந்த ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். ராபர்ட் வத்ராவின் வழக்கறிஞராக பணியாற்றிய கே.டி.எஸ். துளசி சத்தீஸ்கரில் இருந்து நியமிக்கப்பட்டார். ஆசாத் பற்றி கட்சி ஏன் சிந்திக்கவில்லை என்று எனக்கு இன்னும் புரியவில்லை, ”என்று ஒரு தலைவர் கூறினார்.

மகாராஷ்ட்ராவில் இருந்து ஆசாத் 1990ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார். 1996ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெற்றது. 1996 முதல் 2006 வரை ஜம்மு காஷ்மீரை பிரதிநிதித்துவப்படுத்தினார். சில காலம் அவர் ஜம்மு காஷ்மீரின் முதல்வராக இருந்த அவர் 2009ம் ஆண்டு மீண்டும் மாநிலங்களை உறுப்பினரார். 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

All India Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment