Advertisment

ரெம்டெசிவைர் மருந்து: உற்பத்திக்கான உரிமம் கிடைப்பதில் தாமதம்

வெளிப்படைத் தன்மை இல்லாவிட்டால், மிகப் பெரிய கள்ள சந்தைக்கு வழிவகுக்கும்  என்று கவலை தெரிவிக்கின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரெம்டெசிவைர் மருந்து: உற்பத்திக்கான உரிமம் கிடைப்பதில் தாமதம்

மத்திய சுகாதாரம் அமைச்சகம் நேற்று வெளியிட்ட கோவிட்-9 தொடர்பான மருத்துவ மேலாண்மை விதிமுறைககளில் ரெம்டெசிவைர் மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு வழங்க ஒப்புதல் அளித்தது. இருப்பினும், இம்மருந்து நோயாளிகளுக்கு எவ்வாறு கிடைக்கும் என்பதில் பெருத்த குழப்பம் நிலவி வருகிறது.

Advertisment

இந்திய மருந்து ஒழுங்குமுறை ஏஜென்சியான சிடிஎஸ்சிஓ அமைப்புக்கு ரெம்டெசிவைர் மருந்தை இறக்குமதி செய்து விற்பதற்காக மெஸ்ஸர்ஸ் கிளீட் நிறுவனம் 29 மே 2020இல் விண்ணப்பித்து இருந்தது.  பரிசீலனைக்குப் பிறகு அவசரக்காலப் பயன்பாட்டு அனுமதி என்பதன் கீழ் 1 ஜுன் 2020இல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  நோயாளியின் பாதுகாப்பு மற்றும் கூடுதல் தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தியாவிற்குள்  ஒரு தொகுப்பு ரெம்டெசிவைர் மருந்து  கூட இன்னும் இறக்குமதி செய்யப்படவில்லை  என்று சுகாதார ஆர்வலர்கள், தொழில்துறை வட்டாரங்கள் குற்றம் சாட்டுகின்றன.

அமெரிக்க பயோஃபார்மா கிலியட் சயின்சஸ் நிறுவனத்திடம் இருந்து generic voluntary licence பெற்ற  எத்தனை உள்நாட்டு  நிறுவனங்கள் ரெம்டெசிவைர் மருந்தை தயாரித்து விநியோகிக்க சிடிஎஸ்சிஓ அமைப்பிடம் இருந்து முன் ஒப்புதல் பெற்றன என்பது தெளிவாக தெரியவில்லை.

சமீபத்திய தகவல் அடிப்படையில்,  இந்த மருந்தை தயாரித்து விற்பனை செய்வதற்காக சிடிஎஸ்சிஓ அமைப்புக்கு மெஸ்ஸர்ஸ் ஹெட்டிரோ, மெஸ்ஸர்ஸ் சிப்ளா, மெஸ்ஸர்ஸ் டிபிஆர், மெஸ்ஸர்ஸ் ஜுபிலியண்ட், மெஸ்ஸர்ஸ் மைலான் மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் ஆகிய 6 இந்திய கம்பெனிகள் விண்ணப்பித்துள்ளன.  இதில் 5 கம்பெனிகள் மெஸ்ஸர்ஸ் கிளீட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதற்கிடையே, நோயாளிகள் சிலர் தாங்களாகவே மருந்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பதினைந்து நாட்களில் மட்டும், டாக்டர் எல்.எச். ஹிரானந்தனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்  மூன்று கொரோனா நோயாளிகள் தங்கள் சொந்த மூலங்களைப் பயன்படுத்தி ரெம்டெசிவைர்  மருந்தை வாங்கியதாக  தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சுஜித் சாட்டர்ஜி தெரிவித்தார். இந்தியாவில், தற்போது அங்கீகரிக்கப்பட்ட மருந்து விநியோகம் இல்லாததால் இந்த சூழல் உருவாகுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சாட்டர்ஜி  மேலும் கூறுகையில் "மருந்தை கொண்டு வருவதற்கான பொறுப்பு நோயாளியிடம் உள்ளது.ஒவ்வொரு நோயாளியிடம் இருந்தும் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் பெற்றபின்பு,  மனிதாபிமான அடிப்படையில் மருந்தை நாங்கள் நிர்வகிக்கிறோம். இது போன்ற சூழல் மருத்துவர்களுக்கு மன நிறைவை தராது…  பொதுவாக,நிர்வகிக்கும் மருந்தில் எம்ஆர்பி விலை அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அது இல்லாவிட்டால், கள்ள சந்தையில் இருந்து பெறப்பட்டதாக கருதப்படும்”என்று  கூறினார்.

ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் மூன்று உற்பத்தி தளங்களில் இருந்து ரெம்டெசிவைர்  மருந்தை இறக்குமதி செய்ய மும்பையைச் சேர்ந்த கிளைனெரா குளோபல் சர்வீசஸ் நிறுவனத்துக்கு சிடிஎஸ்சிஓ  தலைமையக அதிகாரி டாக்டர் வி.ஜி சோமானி அனுமதி அளித்தார்.

ரெம்டெசிவைர் மருந்தின் செயல்திறன் இன்னும் சோதனை முயற்சி அளவில் இருப்பதால், கொரோனா சிகிச்சையின் ஒரு பகுதியாக மட்டும் இருக்க மத்திய அரசு அனுமதித்தது. இந்த மருந்தை இதுவரை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகம் அனுமதிக்கவில்லை  (சந்தை விற்பனைக்கான அனுமதி). ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் இது தொடர்ந்து அவசரக்கால பயன்பாட்டுக்கான அனுமதியின் பேரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நேற்று, வெளியான கோவிட்- 19 மருத்துவ மேலாண்மை விதிமுறைகள், ரெமெடிவிர் மருந்தை ஐந்து நாட்களுக்கு மட்டும் மருந்தை நிர்வகிக்க வேண்டும் என்று சி.டி.எஸ்.கோ முடிவை பின்பற்றுகிறது. முதல் நாளில் 200 மி.கி அளவும், மீதமுள்ள நாட்களுக்கு 100 மி.கி அளவு நிர்வகிக்க வேண்டும் என்று விதிமுறைகளில்  தெரிவிக்கப்பட்டது. கர்ப்பிணி நோயாளிகள், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கடுமையான சிறுநீரகக் கோளாறு உள்ள நோயாளிகளுக்கு  மருந்தை நிர்வகிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

சிடிஎஸ்சிஓ ஒப்புதல் செயல்முறையிலும், மருந்தைக் கிடைக்கச் செய்வதிலும் அதிக வெளிப்படைத்தன்மை தேவைப்படுவதாக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் கருதுகின்றனர். வெளிப்படைத் தன்மை இல்லாவிட்டால், மிகப் பெரிய கள்ள சந்தைக்கு வழிவகுக்கும்  என்று கவலை தெரிவிக்கின்றனர்.

அரசின் செய்லபாடுகளை கணிக்க முடியாத நிலையில், பயத்தின் விளிம்பிற்கு மக்கள் தள்ளப்படும்போது, சமூகத்தில் அசாதாரண காரியங்கள் நடைபெற ஆரம்பிக்கும். இந்த நிச்சயமற்றத் தன்மையை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம், ரெம்டெசிவைர் மதுபானத்தை போல் விற்கப்படும் சூழலை  நாம் விரைவில் காணலாம், ”என்று சிப்லா மற்றும் க்ளென்மார்க் பார்மா நிறுவனத்தில் பணிபுரிந்த முரளி நீலகாந்தன் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை வரை, ரெம்டெசிவைர்  மருந்து தொடர்பான மின்னஞ்சல் கேள்விகளுக்கும், தொலைபேசி அழைப்புகளுக்கும் சி.டி.எஸ்.கோ தலைமையக அதிகாரி டாக்டர் வி.ஜி சோமானி பதிலளிக்கவில்லை.

இந்நிலையில், ரெம்டெசிவிர் மருந்தின் தற்போதைய நிலைமை குறித்து வெளியிட்ட சுகாதார அமைச்சகம், "விண்ணப்பங்களை சிடிஎஸ்சிஓ அமைப்பானது முன்னுரிமை அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி பரிசீலித்து வருகிறது. உற்பத்திக்கான வசதிகள், தகவல் தரவுகளை சரி பார்த்தல், நிலைத்தன்மைக்கான பரிசோதனை, நடைமுறைத் தொகுப்புக்கு ஏற்றவாறு அவசரக்கால ஆய்வுக்கூட பரிசோதனை உள்ளதா என்ற ஆய்வு போன்ற இடைக்காலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் கட்டத்தில் இந்தக் கம்பெனிகள் தற்போது உள்ளன" என்று தெரிவித்தது.

மேலும்,  இந்த மருந்து ஊசி மூலம் செலுத்தப்படுவது என்பதால் எடை பண்பு, அடையாளம், மாசுப்பொருள்கள், பாக்டீரியாக்களுக்கான அகநச்சு பரிசோதனை மற்றும் வீரியத்தன்மை ஆகியவற்றைக் கவனத்தில் கொள்வது நோயாளியின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது ஆகும். எனவே இவை குறித்த தகவல் தரவை நிறுவனங்கள் வழங்க வேண்டும். இந்த தகவல் தரவிற்காக சிடிஎஸ்சிஓ காத்திருக்கிறது. இந்த கம்பெனிகளுக்கு இந்த அமைப்பு முழுமையான ஆதரவை அளித்து வருவதோடு அவசரகால விதிமுறைகளின் கீழ் உள்ளூர் மருத்துவமனை முன்கட்ட பரிசோதனை என்ற தேவையில் இருந்தும் ஏற்கனவே விலக்கு அளித்துள்ளது. மேலும் ஒழுங்குமுறை நடைமுறைகளை செயல்படுத்துவதற்கு சிடிஎஸ்சிஓ உதவவும் விரைந்து முடிக்க உந்துதலும் அளித்து வருகிறது" என்று தெரிவித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment