Advertisment

உலகிலேயே ராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகளில் இந்தியாவுக்கு 3வது இடம்

எஸ்.ஐ.பி.ஆர்.ஐ வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்கா, சீனா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் ரஷ்யா ஆகிய முதல் ஐந்து நாடுகள் ராணுவத்துக்காக செலவு செய்யும் தொகை உலக அளவில் ராணுவ செலவினத்தில் 62 சதவீதமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Dr Soumya Swaminathan, WHO Dr Soumya Swaminathan, Soumya Swaminathan, டாக்டர் சௌமியா சுவாமிநாதன், உலக சுகாதார நிறுவனம், மலேரியா ஒழிப்பு தினம், உலக மலேரியா ஒழிப்பு தினம் 2022, இந்தியா, world malaria day, Soumya swaminathan interview, Malaria, WHO, Malaria day 2022, Tamil Indian Express news

எஸ்.ஐ.பி.ஆர்.ஐ வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்கா, சீனா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் ரஷ்யா ஆகிய முதல் ஐந்து நாடுகள் ராணுவத்துக்காக செலவு செய்யும் தொகை உலக அளவில் ராணுவ செலவினத்தில் 62 சதவீதமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

Advertisment

2021 ஆம் ஆண்டில் உலக அளவில் பாதுகாப்புச் செலவினம் 2.1 டிரில்லியன் டாலர்களை எட்டியதால், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து உலகில் மூன்றாவதாக ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடாக இந்தியா உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் இருந்தபோதிலும் இந்த சாதனை அளவை எட்டியுள்ளது என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (எஸ்.ஐ.பி.ஆர்.ஐ) திங்கள்கிழமை கூறியுள்ளது.

எஸ்.ஐ.பி.ஆர்.ஐ வெளியிட்ட தகவல்களின்படி, அமெரிக்கா, சீனா, இந்தியா, யுனைடெட் கிங்டம் மற்றும் ரஷ்யா ஆகிய முதல் ஐந்து நாடுகளின் ராணுவ செலவினங்கள் உலக அளவிலான ராணுவ செலவினத்தில் 62 சதவீதத்தைக் கொண்டுள்ளன.

2021ல் 76.6 பில்லியன் டாலர்களாக இருந்த இந்தியாவின் ராணுவச் செலவு 2020ல் இருந்து 0.9 சதவீதமாகவும், 2012ல் இருந்து 33 சதவீதமாகவும் ராணுவச் செலவு வளர்ந்துள்ளதாக எஸ்.ஐ.பி.ஆர்.ஐ தெரிவித்துள்ளது. “சீனா மற்றும் பாகிஸ்தானுடனான தற்போதைய பதட்டங்கள் மற்றும் எல்லைப் தகராறுகளுக்கு இடையே அவ்வப்போது ஆயுத மோதல்களில் ஈடுபடுவதால், இந்தியா அதன் ஆயுதப் படைகளை நவீனமயமாக்கல் மற்றும் ஆயுத உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு ​​இந்தியா முன்னுரிமை அளித்துள்ளது.” என்று இந்த அறிக்கை கூறுகிறது.

2021 ஆம் ஆண்டில் 68.4 பில்லியன் டாலர்களை ராணுவத்துகாக செலவு செய்து இங்கிலாந்து இரண்டு இடங்கள் முன்னேறியபோதும், உலக அளவில் ராணுவச் செலவில் அமெரிக்கா 38 சதவீதத்தையும், சீனா சுமார் 14 சதவீதத்தையும் கொண்டுள்ளது. சீனாவின் ராணுவச் செலவு தொடர்ந்து 27வது ஆண்டாக வளர்ந்துள்ளதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது. எஸ்.ஐ.பி.ஆர்.ஐ அளித்துள்ள அறிக்கையில், மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் நான் தியான் கூறுகையில், “தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடல்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீனாவின் வளர்ந்து வரும் வலிமை ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் ராணுவ செலவினங்களில் முக்கிய உந்துதலாக மாறியுள்ளது.” என்று குறிபிட்டுள்ளது

இதேபோல், ரஷ்யாவும் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தனது ராணுவ செலவினங்களை அதிகரித்துள்ளது. கிரிமியாவை ரஷ்யா இணைத்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மேற்கத்ஹ்டிய நாடுகளால் விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக 2016 மற்றும் 2019 க்கு இடையில் ராணுவ செலவினங்களில் சரிவு இருந்தபோதிலும், அதிக எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய் 2021 இல் அதன் செலவினங்களை அதிகரிக்க மாஸ்கோவிற்கு உதவியது என்று இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. உக்ரைனில், ராணுவச் செலவு 2021ல் $5.9 பில்லியன்களாகக் குறைந்தாலும், அது இன்னும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2 சதவீதம் ராணுவச் செலவினமாக உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Russia America United Kingdom Military
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment