Advertisment

வேலை வாய்ப்பு & பொருளாதாரத்தை மேம்படுத்த மோடி தலைமையில் 2 குழுக்கள்

வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் உள்ளிட்டோர் கொண்ட 10 பேர் குழு இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live

Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live

2 cabinet panels for growth and employment : இந்தியாவில் தொடர்ந்து பொருளாதாரம் வீக்கம் அடைந்து வருவதோடு வேலைவாய்ப்பின்மை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பல்வேறு தரவுகள், ஆராய்ச்சி முடிவுகள் அடிக்கடி வெளியாகி இந்த தகவல்களை உறுதி செய்தன.

Advertisment

இந்நிலையில் செவ்வாய் இதற்கான முடிவுகளை எடுக்க மோடி தலைமையிலான கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கூட்டத்தின் முடிவில் இரண்டு மத்திய அமைச்சரவை குழுக்கள் இதற்காக உருவாக்கப்பட்டன. ஒன்று பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டிற்காகவும் மற்றொன்று வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகும்.

2 cabinet panels for growth and employment : பொருளாதாரத்தில் வீக்கம்

நடப்பு ஆண்டில் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரும் அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 7% ஆக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.8%மாக குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில் 5.8%மாக குறைந்துள்ளது. கடந்த 20 காலாண்டுகளில் ஜி.டி.பி. குறைந்திருப்பது இதுவே முதல் முறை.

குழு உறுப்பினர்கள்

பொருளாதார மேம்பாடு மற்றும் தனியார் துறைகளில் முதலீடு குறித்து உருவாக்கப்பட்ட குழு மோடி தலைமையில் இயங்கும். கடந்த சில ஆண்டுகளாக வங்கிகளில் வாங்கப்பட்ட கடன்கள் திருப்பி அளிக்கப்படாத நிலையில் தனியார் நிறுவனங்களில் முதலீடு என்பது மிகவும் அழுத்தம் தரும் இலக்காக அமைந்துள்ளது என்று குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மேம்பாடு மற்றும் முதலீடு குழுவில் ஐந்து உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். அமித் ஷா (உள்துறை அமைச்சர்), நிதின் கட்கரி (சாலை, நெடுஞ்சாலை போக்குவரத்து மற்றும் சிறுகுறு தொழில் பிரிவு), நிர்மலா சீதாராமன் (நிதி அமைச்சர்), பியூஷ் கோயல் (ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள்) ஆகியோர் அடங்கிய இந்த குழு வெளிநாட்டு நேரடி முதலீடு, உள்கட்டமைப்பிற்கான தனியார் நிறுவனங்களில் முதலீடு, மற்றும் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துதல் போன்ற முக்கிய அம்சங்களை மேற்பார்வையிடுவார்கள்.

வேலை வாய்ப்பு

பொருளாதார வளர்ச்சியின் வீக்கம் என்பது வேலையில்லா நிலையை உருவாக்குவது வழக்கமான ஒன்றாகும். 2017 - 18 காலகட்டத்தில் வேலையில்லா திண்டாட்டம் 6.1%மாக இருந்தது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த சதவீதம் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் நலனுக்கான குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை (Labour and Employment) அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் நலன் அமைச்சர் ( Skill and Entrepreneurship) மகேந்திர நாத் பாண்டே, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் (நிதி), சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் உள்ளிட்டோர் கொண்ட 10 பேர் குழு இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மக்களவை மற்றும் மாநிலங்களவை எப்போது கூடுகிறது?

Narendra Modi Nda
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment