Advertisment

மின் மானியத்திற்கு ஒப்புதல்; எம்.எஸ்.பி குறித்து நீடிக்கும் பேச்சுவார்த்தை!

ஜனவரி 4ம் தேதி நடைபெற இருந்த சம்யுக்தி கிஷான் மோர்ச்சாவை ஒத்தி வைக்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.

author-image
WebDesk
New Update
மின் மானியத்திற்கு ஒப்புதல்; எம்.எஸ்.பி குறித்து நீடிக்கும் பேச்சுவார்த்தை!

Harikishan Sharma , Raakhi Jagga

Advertisment

Govt agrees on power subsidy, stubble curbs; talks on MSP, repeal to continue : புதிதாக உருவாக்கப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது, பேச்சுவார்த்தையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை அன்று மத்திய அரசின் நான்கு கோரிக்கைகளில் 2க்கு ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ஜனவரி 4ம் தேதி அன்று மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகின்றனர்.

மேலும் அறுவடைக்கு பிறகு எஞ்சியிருக்கும் பொருட்களை எரிப்ப்பதை குற்றமற்றதாக கூறி விவசாயிகளை ‘Commission for the Air Quality Management in National Capital Region and Adjoining Areas Ordinance 2020’ சட்டத்தில் இருந்து நீக்கியுள்ளது. மேலும் மின்சாரச் சட்ட திருத்த மசோதா வரைவையும் நிறுத்தியது.

சந்திப்பில் இருந்து வெளியே வந்த மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்,” இன்றைய கூட்டத்தில் முன்மொழியப்பட்ட நான்கு விசயங்களில் அரசிற்கும் வேளாண் சங்கத்தினருக்கும் இடையே 2 விசயங்களுக்கு ஒருமித்த கருத்து இருந்ததாக கூறினார்.

காற்றின் தர நிர்ணய அவசர சட்டத்தில் இருந்து விவசாயிகளை காக்க வேண்டும் என்று சங்க தலைவர்கள் கூறினார்கள். அரசு அவர்களிடம், இரு தரப்பினரின் கருத்துகள் குறித்தும் பரிசீலிக்கின்றோம் என்றும், அதற்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் கூறியுள்ளனர். விவசாயிகளுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். விரைவில் அது மாற்றப்படும்.

மின்சார சட்ட திருத்த மசோதாவின் வரைவு குறித்து பேசிய போது, தற்போது நடைமுறையில் இருக்கும் மாநில அரசின் மானிய திட்டம் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த கோரிக்கையிலும் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.

நான்கு முக்கியமான விசயங்கள் அங்கே குறிப்பிடப்பட்டது. அதில் 2 விசயங்களுக்கு ஒரு மித்த கருத்து ஏற்பட்டுள்ளது. மிகவும் அமைதியான முறையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது என்று அவர் தெரிவித்தார்.

விவசாய சங்க தலைவர்கள் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள மூன்று விவசாய சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால் அரசு தரப்பு, விவசாயிகளுக்கு சட்டத்தில் எது சரியில்லை என்று நினைக்கின்றார்களோ அது குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறது என்று கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

publive-image publive-image

குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து பேசிய போது, தற்போது நடைமுறையில் இருக்கும் எம்.எஸ்.பி. தொடரும் என்றும் அதற்கு எழுத்துப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது. நாங்கள் அதில் உறுதியாக இருக்கின்றோம். ஆனால் அவர்கள் எம்.எஸ்.பி.க்கு சட்டப்பூர்வ கேரண்டி தேவை என்று கூறுகிறனர். அதனால் இது தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 4ம் தேதி இந்த விவகாரங்கள் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தோமர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

தோமர் தலைமையில் உருவாக்கப்பட்ட அமைச்சர்கள் மட்ட கமிட்டியில் உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வணிகம் மற்றும் தொழிற்துறை துணை அமைச்சர் சோம் ப்ரகாஷ் ஆகியோர் இடம்பெற்றனர். இந்த முறை விவசாய சங்கத்தில் இருந்து 41 பிரதிநிதிகள் பங்கேற்றனர். பாரதிய கிஷான் சங்கத்தின் பொதுச்செயலாளார் யதுவீர் சிங் மாலிக் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் மதியம் 2.30 மணிக்கு துவங்கி இரவு 7 மணிக்கு நிறைவுற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தின் போது அரசு பிரதிநிதிகள், விவசாயிகளுக்கு விவசாய சட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க குழு ஒன்று அமைக்கம் முன்மொழிவை வைத்தனர். ஆனால் அதற்கு விவசாயிகள் ஒப்புக் கொள்ளவில்லை.

ஆலோசனை கூட்டத்தின் முடிவுகள் குறித்து சம்யுக்த் கிஷான் மோர்ச்சா தலைவர் தர்ஷன் பால் கூறிய போது, ஆலோசனை கூட்டம் 50% வெற்றிபெறவில்லை. ஆனால் 25% மட்டும் தான். ஏன் என்றால் மிக சிறிய அளவிலான பிரச்சனைகளுக்கு மட்டுமே ஒருமித்த கருத்துகள் உருவாகியுள்ளது. ஆனால் பெரிய இரண்டு பிரச்சனைகளும் அதே நிலையில் தான் உள்ளது.

பி.கி.யூ (உக்ரஹான்) தலைவர் ஜோகிந்தர் சிங் பேசுகையில், “நாங்கள் பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் நம்பிக்கையற்றே இருந்தோம். ஆனால் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எங்களின் நான்கு கோரிக்கைகளில் இரண்டுக்கு அவர்கள் ஒப்புதல் அளித்தார்கள். ஆனாலும், வேளாண் சட்டங்கள் ரத்து மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விலைபொருட்களை பெறுதல் போன்றவை இன்னும் கிடப்பில் தான் உள்ளது. இது தொடர்பாக ஜனவரி 4ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இறுதியாக இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் நேர்மறையான முடிவுகள் வெளியாகியுள்ளன.

தக்கௌந்தாவின் பி.கே.யூ பொது செயலாளர் ஜக்மோகன் சிங் பாட்டியாலா, மத்திய அரசு பொதுமக்களின் கோபத்திற்கு தலை தாழ்ந்துள்ளது. அதனால் தான் மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெற்றுள்ளனர். மேலும் சுற்றுச்சூழல் அவசரசட்டத்தில் குற்றவாளிகள் பிரிவில் விவசாயிகள் சேர்க்கப்படவில்லை. ஜனவரி 4ம் தேதி அன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாகவும் எம்.எஸ்.பி. விலையில் விளைப் பொருட்கள் வாங்குவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றோம். அரசு தரப்பில் இருந்து நல்ல முடிவுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். எனவே ஜனவரி 4ம் தேதி நடைபெற இருந்த சம்யுக்தி கிஷான் மோர்ச்சாவை ஒத்தி வைக்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Farmer Farmer Protest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment