Advertisment

பா.ஜ.க ஆட்சியின் 8 ஆண்டுகளில் அமலாக்கத் துறை வழக்குகள் மூன்று மடங்கு அதிகரிப்பு

பா.ஜ.க தலைமையிலான அரசாங்கத்தின் முதல் ஆட்சியின் முதல் 3 ஆண்டு காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, இரண்டாம் ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் அமலாக்கத்துறை வழக்குகள் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரிப்பு

author-image
WebDesk
New Update
பா.ஜ.க ஆட்சியின் 8 ஆண்டுகளில் அமலாக்கத் துறை வழக்குகள் மூன்று மடங்கு அதிகரிப்பு

Harikishan Sharma 

Advertisment

Govt data: FEMA, PMLA cases triple in first 3 yrs of NDA-II versus NDA-I: அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 (FEMA - ஃபெமா) மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (PMLA) ஆகியவற்றின் கீழ் அமலாக்க இயக்குநரகம் (ED) பதிவு செய்த மொத்த வழக்குகளின் எண்ணிக்கை, பா.ஜ.க தலைமையிலான அரசாங்கத்தின் முதல் ஆட்சியின் முதல் மூன்று (2014-15 முதல் 2016-17 வரை) ஆண்டு காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, அதன் இரண்டாம் ஆட்சியின் முதல் மூன்று (2019-20 முதல் 2021-22 வரை) ஆண்டுகளில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

திங்களன்று மக்களவைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி பகிர்ந்துள்ள தரவுகளின்படி, 2014-15 மற்றும் 2016-17 ஆம் ஆண்டுக்கு இடையில் 4,913 வழக்குகளுடன் ஒப்பிடும்போது, ​​2019-20 மற்றும் 2021-22 க்கு இடையில் 14,143 வழக்குகளை அமலாக்கத்துறை FEMA மற்றும் PMLA இன் கீழ் பதிவு செய்துள்ளது. இது 187 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பு.

இதையும் படியுங்கள்: மே.வங்க அமைச்சர் வீட்டில் ஹால் டிக்கெட், தேர்வர்களின் பட்டியல் மீட்பு; அமலாக்கத்துறை தகவல்

பா.ஜ.க ஆட்சியின் இரண்டாவது காலகட்டத்தின் முதல் மூன்று ஆண்டுகளில் 11,420 FEMA வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன, முதல் காலத்தின் முதல் மூன்று ஆண்டுகளில் 4,424 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இது 158 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பு.

PMLA இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் இந்த காலகட்டத்தில் ஐந்து மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. 2014-15 முதல் 2016-17 வரை 489 வழக்குகள் என்ற நிலையில், 2019-20 முதல் 2021-22 வரை 2,723 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இது 456 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது.

publive-image

ஆண்டு வாரியான தரவுகளின்படி, மோடி அரசாங்கத்தின் கடந்த எட்டு ஆண்டுகளில் 2021-22 ஆண்டில் அதிக பணமோசடி மற்றும் அந்நியச் செலாவணி மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2020-21 இல், அமலாக்கத்துறை FEMA இன் கீழ் 5,313 வழக்குகளைப் பதிவு செய்தது (முந்தைய அதிகபட்சம் 2017-18 இல் 3,627 வழக்குகள்); மற்றும் PMLA இன் கீழ் 1,180 வழக்குகளை பதிவு செய்தது (இது 2020-21 இல் 981 இல் இருந்து அதிகரித்தது).

JD(U)-ன் ராஜீவ் ரஞ்சன் என்கிற லாலன் சிங் கேட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில், “கடந்த 10 ஆண்டுகளில், அமலாக்க இயக்குனரகம் FEMA விதிகளின் கீழ் சுமார் 24,893 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது. PMLA இன் கீழ் சுமார் 3,985 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.”

ஆனால் தரவுகளின் பகுப்பாய்வு கடந்த எட்டு ஆண்டுகளில் 22,130 FEMA வழக்குகள் அல்லது மொத்த வழக்குகளில் 89 சதவீதம் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. இதேபோல், 3,555 PMLA வழக்குகள், அதாவது 3,985 வழக்குகளில் 89 சதவீதம், கடந்த எட்டு ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அமைச்சர் பங்கஜ் சௌத்ரி பகிர்ந்துள்ள தகவலின்படி, மார்ச் 31, 2022 வரை, சட்டம் இயற்றப்பட்டதில் இருந்து அமலாக்கத்துறை மொத்தம் 5,422 வழக்குகளை PMLA இன் கீழ் பதிவு செய்துள்ளது, அதில் 65.66 சதவீதம் கடந்த எட்டு ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

“31.03.2022 வரை, அமலாக்க இயக்குனரகம் PMLA இன் கீழ் சுமார் 5,422 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. PMLA இன் கீழ் ஒரு வழக்கைப் பதிவுசெய்த பிறகு, PMLA இன் விதிகளின்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது, இதன் விளைவாக குற்றத்தின் வருமானம் ரூ.1,04,702 கோடி (தோராயமாக) இணைக்கப்பட்டது, வழக்குத் தொடரப் புகார் பதிவு செய்யப்பட்ட 992 வழக்குகளில் ரூ. 869.31 கோடி பறிமுதல் செய்யப்பட்டு, PMLA இன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட 23 நபர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது என்பதை இங்கே கூறுவது பொருத்தமானது,” என்று அமைச்சர் பங்கஜ் சௌத்ரி கூறினார்.

இதேபோல், மார்ச் 31, 2022 வரை மொத்தம் 30,716 வழக்குகள் FEMAவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 72 சதவீதம் கடந்த எட்டு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“31.03.2022 வரை, அமலாக்க இயக்குனரகம் FEMAவின் கீழ் சுமார் 30,716 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது. FEMA வின் கீழ் ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பிறகு, ஃபெமாவின் விதிகளின்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது, இதன் விளைவாக 8,109 ஷோ காஸ் நோட்டீஸ் வெளியிடப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. மேலும், 6,472 ஷோ காஸ் நோட்டீஸ்களுக்கு FEMA வின் கீழ் தீர்ப்பளிக்கப்பட்டன, இதன் மூலம் சுமார் ரூ.8,130 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், FEMA வின் கீழ் ரூ.7,080 கோடி (தோராயமாக) சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று அமைச்சர் பங்கஜ் சௌத்ரி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment