Advertisment

ரேஷன் கார்டு தரநிலை மாற்றம்: அரசு உதவிகளுக்கு ஆபத்து?

இந்த மாதத்தில் புதிய தரநிலைகள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மக்களுக்கு அரசு வழங்கும் உதவிகளுக்கு ஆபத்து ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
govt decision to change standards of ration card, india, Department of Food and Public Distribution, ரேஷன் கார்டு தரநிலை மாற்றம், அரசு உதவிகளுக்கு ஆபத்து, இந்தியா, தமிழ்நாடு, ரேஷன் கார்டு, ரேஷன் அட்டை, அரசு உதவிகளுக்கு ஆபத்து, change the standards ration card, government ration shops, pds, ration cards

மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, அரசு ரேஷன் கடைகளில் ரேஷன் வாங்குகிறவர்களின் தரநிலையை மாற்றம் செய்வதற்கான ஒரு பெரிய முடிவெடுத்துள்ளது. இந்த மாதத்தில் புதிய தரநிலைகள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் எதிர்காலத்தில் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் வாங்குபவர்களுக்கான தகுதி தீர்மானிக்கப்படும். இதனால், மக்களுக்கு அரசு வழங்கும் உதவிகளுக்கு ஆபத்து ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளன.

Advertisment

இது தொடர்பாக, மாநிலங்களுடன் பல சுற்று ஆலோசனைக் கூட்டங்கள் நடந்துள்ளன. ரேஷன் அட்டைகளின் தரத்தை மாற்றுவதற்கான வடிவம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது.

உணவு மற்றும் பொது விநியோகத் துறை குறிப்பிட்டுள்ளபடி, தற்போது நாடு முழுவதும் 80 கோடி மக்கள் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் (என்.எஃப்.எஸ்.ஏ) பயனடைந்து வருகின்றனர். இருப்பினும், அவர்களில் பலர் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் வளமாக இருப்பவர்கள். இதை மனதில் கொண்டு, பொது விநியோக அமைச்சகம் ரேஷன் அட்டைகளின் தரநிலைகளை (பிரிவு) மாற்றம் செய்ய உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக, உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே கூறுகையில், கடந்த 6 மாதங்களாக, ரேஷன் கார்டுகளின் தரநிலைகளில் மாற்றம் செய்வது குறித்து மாநிலங்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதில், மாநிலங்கள் அளித்த பரிந்துரைகளை இணைத்து, பயனாளிகளுக்கு புதிய தரநிலைகள் தயாரிக்கப்படுகின்றன. அந்த தரநிலைகள் எல்லாம் இந்த மாதத்தில் இறுதி செய்யப்படும். புதிய தரநிலைகளை அமல்படுத்திய பின்னர், தகுதியான நபர்களுக்கு மட்டுமே அரசின் உதவிகள் கிடைக்கும்.

உணவு மற்றும் பொது விநியோகத் துறை குறிப்பிட்டுள்ளபடி, டிசம்பர் 2020 முதல் தற்போது வரைக்கும் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 69 கோடி பயனாளிகள், அதாவது 86 சதவீத மக்கள் என்.எஃப்.எஸ்.ஏ. கீழ் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்கின்றனர். ஒவ்வொரு மாதமும் சுமார் 1.5 கோடி மக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதன் மூலம் பலன்களைப் பெறுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை ரேஷன் கார்டுகளின் தரநிலைகளை மாற்றம் செய்வதன் மூலம் அரசு வழங்கு உதவிகளை பாதிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அரசு இந்த விஷயத்தில், பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருப்பவர்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பலன் பெறுவதை தடுப்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளது. தகுதியான நபர்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ரேஷன் அட்டைகளில் 5 வகையான தர நிலை குறியீடுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உபயோகத்தில் இருக்கும் ரேஷன் அட்டை ஸ்மார்ட் காடுகளில் ரேஷன் அட்டைதாரரின் புகைப்படத்துக்கு கீழே PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என 5 வகையான குறியீடுகள் உள்ளன.

ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்படும் பொருட்களின் அடிப்படையில் இந்த குறியீடுகள் குறிக்கப்பட்டுள்ளன. இதில் PHH என்ற குறியீடு இருந்தால் ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். PHH- AAY என இருந்தால் 35 கிலோ அரிசி உள்பட அனைத்துப் பொருட்களையும் வாங்கிக்கொள்ளலாம். NPHH என குறிப்பிடப்பட்டிருந்தால் அரிசி உள்பட அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். NPHH-S என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அரிசியை தவிர்த்து சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். NPHH-NC என இருந்தால் ரேஷன் கடைகளில் எந்தப் பொருட்களும் தரப்படமாட்டாது. ரேஷன் அட்டையை ஒரு அடையாள அட்டையாகவும் முகவரிச் சான்றிதழாகவும் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Ration Card Finance
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment