தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது மத்திய அரசு

தீபாவளியை முன்னிட்டு, பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும் டீசல் மீதான வரியை 10 ரூபாயும் குறைத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தில் இருக்கும் நேரத்தில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

govt reduces excise duty on petrol by Rs 5, govt reduces excise duty on diesel by Rs 10, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது மத்திய அரசு, பெட்ரோல் விலை குறைப்பு, டீசல் விலை குறைப்பு, petrol price, diesel price, chennai petrol price, chennai diesel price

தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும் குறையும், டீசல் மீதான கலால் வரி 10 ரூபாய் குறைத்து அறிவித்துள்ளது. புதிய விலை இன்று இரவு வியாழக்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தில் இருக்கும் நேரத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.

புதன்கிழமை, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.04 ஆகவும், டீசல் விலை ரூ.98.42 ஆகவும் இருந்தது. மும்பையில் பெட்ரோல் விலை 115.85 ரூபாயாகவும், டீசல் விலை 106.62 ரூபாயாகவும் இருந்தது.

இது குறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “டீசல் மீதான கலால் வரி குறைப்பு பெட்ரோலை விட இருமடங்காக இருக்கும். இந்திய விவசாயிகள், தங்கள் கடின உழைப்பின் மூலம், லாக்டவுன் கட்டத்தின் போதும் பொருளாதார வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துள்ளனர். மேலும், டீசல் மீதான கலால் வரி குறைப்பு வரவிருக்கும் ரபி பருவத்தில் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும்.

மேலும், “நாட்டில் எரிசக்தி பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கவும், பெட்ரோல், டீசல் போன்ற பொருட்கள் நமது தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் மக்கள்தொகையின் திறனால் உந்தப்பட்டு, கோவிட்-19 தூண்டப்பட்ட மந்தநிலைக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் ஒரு குறிப்பிடத்தக்க திருப்பத்தைக் கண்டுள்ளது. பொருளாதாரத்தின் அனைத்து துறைகளும் – உற்பத்தி, சேவை அல்லது விவசாயம் – குறிப்பிடத்தக்க மேல்நோக்கிய பொருளாதார நடவடிக்கைகளை அனுபவித்து வருகின்றன. பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், டீசல் மற்றும் பெட்ரோல் மீதான கலால் வரியை கணிசமாக குறைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கை நுகர்வை அதிகரிக்கும் மற்றும் பணவீக்கத்தை குறைக்கும். இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

உள்ளூர் வரிவிதிப்பு (VAT) மற்றும் சரக்கு கட்டணம் ஆகியவற்றைப் பொறுத்து நாட்டில் வாகன எரிபொருள் விலைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. இது தவிர வாகன எரிபொருட்களுக்கு மத்திய அரசு கலால் வரி விதிக்கிறது.

உலக சந்தையில், உலகின் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோர் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் மற்றும் காய்ச்சி வடிகட்டும் பங்குகளில் தொழில்துறை டேட்டாக்கள் பெரிய அளவில் கட்டியெழுப்பப்படுவதையும், விநியோகத்தையும் அதிகரிக்க OPEC மீது அழுத்தம் அதிகரித்ததையும் சுட்டிக்காட்டியதால் புதன்கிழமை எண்ணெய் விலை குறைந்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Govt reduces excise duty on petrol by rs 5 diesel by rs 10

Next Story
இந்தியர்கள் இனவெறியர்களா? உண்மை என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express