Advertisment

அரசின் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி; போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சடங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து 6வது நாளாக போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
farmer protest, punjab farmer protest, delhi chalo protest, farmers protest in delhi, வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் போராட்டம், delhi farmers protest, டெல்லி விவசாயிகள் போராட்டம், பஞ்சாப் விவசாயிகள் போராட்டம், punjab farmer protest live news, farmers protest in delhi, farmers protest in punjab, farmer protest in haryana, பேச்சுவார்த்தை தோல்வி, விவசாயிகள் போராட்டம் தொடரும், farmer protest today, farmer protest latest news, farmers protest, farmers protest today, farm bill

வேளாண் சடங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து 6வது நாளாக போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

Advertisment

வேளாண் சடங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து 6வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவாரத்தை நடத்தி வருகிறது. இரு தரப்பினரும் பொதுவான புரிதலுக்கு வரத் தவறியதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தலைவர்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முடிவில்லாமல் தொடர்ந்தது.

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்த சந்திப்பு நல்லபடியாக நடந்தது என்றும், போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் கூறினார். மேலும், அடுத்த சுற்று பேச்சுவார்த்தை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் என்று கூறினார்.

பஞ்சாப்பில் இருந்து 32 விவசாயிகள் சங்கங்களும், ஹரியானாவைச் சேர்ந்த 2 விவசாயிகள் பிரதிநிதிகளும் ஏ.ஐ.கே.எஸ்.சி.சி தலைவர் யோகேந்திர யாதவ் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு விவசாயிகள் தலைவர் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை பேச்சுவார்த்தைக்குட்பட்டது என்று விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தின. புது டெல்லியில் உள்ள புராரி மைதானத்திற்கு செல்ல அரசாங்கம் வலியுறுத்தியதை அடுத்து விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை போராட்ட மைதானத்தின் சலுகையை நிராகரித்தனர்.

டிசம்பர் 3 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் - உள்துறை அமைச்சர் அமித் ஷா, வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் இன்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் ஒரு கூட்டத்தை நடத்தினர். “குளிர் மற்றும் கோவிட் காரணமாக விவசாயிகளுடனான சந்திப்பு முன்னதாகவே முன்மொழியப்பட்டுள்ளது” என்று மத்திய அமைச்சர் தோமர் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment