மசூதிக்கு நிலம் வழங்குவதற்கான உ.பி. அரசாங்கத்தின் முடிவை முஸ்லிம் அமைப்புகள் புதன்கிழமை கண்டித்துள்ளனர். அயோத்தியிலிருந்து வெகுதொலைவில் , மசூதி கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சுன்னி வக்ஃப் வாரியத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.
நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை…
அகில இந்திய முஸ்லீம் மஜ்லிஸ் இ முஷ்வரத் அமைப்பின் முன்னாள் தலைவர் ஜாபர் இஸ்லாம் கான் கூறுகையில்: “அந்த நிலத்தை யாரும் வாங்கி கொள்ள மாட்டார்கள். சன்னி வக்ஃப் வாரியம் ஒரு அரசு நிறுவனம். அவர்கள் எப்படி ‘அதை வேண்டாம்’ என்று சொல்வார்கள்?
(முஸ்லீம்) சமூகத்தை நீங்கள் கேட்டால், அந்த நிலத்தை யாரும் விரும்பவில்லை. அங்கு ஒரு மசூதி கட்டப்படும் என்று நான் நினைக்கவில்லை; அது இருந்தாலும், நமாஸ் வழங்க யாரும் அங்கு செல்ல மாட்டார்கள். இது டெல்லி சட்டமன்றத் தேர்தலை ஒட்டி நடத்தப்படும் நடவடிக்கை என்று நினைப்பதாகவும் கூறினார். டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவராகவும் ஜாபர் இஸ்லாம் கான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து கேட்க, சன்னி மத்திய வக்ஃப் வாரியத் தலைவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினரும், பாபர் மஸ்ஜித் நடவடிக்கைக் குழுவின் அழைப்பாளருமான ஜபரியப் ஜிலானி இது குறித்து கூறுகையில்,”அயோத்தியின் மாவட்ட தலைமையகத்திலிருந்து கிட்டத்தட்ட 18 கி.மீ தூரத்தை தாண்டி இந்த நிலத்தை வழங்க உத்திர பிரேதேச அரசு அறிவித்துள்ளது. இஸ்மாயில் பாரூக்கி வழக்கில் அளிக்கப்பட உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இந்த செயல் எதிரானது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில் “இந்த ஐந்து ஏக்கர் நிலம் சுன்னி வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்பட்டாலும், முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியமும், பாபர் மசூதி நடவடிக்கைக் குழுவும் பாபர் மசூதிக்கு பதிலாக வழங்கப்படும் எந்த நிலத்தையும் வாங்க தயாராக இல்லை. அறிவிக்கப்பட்ட நிலம் பிரதான இடத்தில் இல்லை, ஏன் வழக்கு தொடர்புடைய அயோத்தியிலும் இல்லை” என்று தெரிவித்தார்
பாபரி மஸ்ஜித்-ராம்ஜன்மபூமி வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி கூறுகையில், ” உச்சநீதிமன்ற தீர்ப்பில் அயோத்தி என்பது 5 கி.மீ சுற்றளவில் பரவியிருக்கும் அயோத்தி நகரைக் குறிக்கிறது. ஆனால் அரசாங்கம் பைசாபாத் மாவட்டத்தின் பெயரை அயோத்தி என்று மாற்றி, அங்கு அமைந்திருக்கும் ரவுனாஹி பகுதியில் நிலம் வழங்கியுள்ளது என்றார்.
மக்களவை நாடாளுமன்ற உறுப்பினரும், ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவருமான அசாதுதீன் ஒவைசி, இது குறித்து கூறுகையில்: “இந்த நிலத்தை ஏற்றுக்கொள்வது சுன்னி வக்ஃப் வாரியத்தின் ஒரு தவறான முடிவு என்று தெரிவித்தார்.
ஜமியத்-உலமா-இ-ஹிந்த் தலைவர் மவுலான அர்ஷத் மதானி, ராம்ஜன்மபூமி தளம் எப்போதும் ஒரு மசூதியாகவே இருக்கும் என்ற அமைப்பின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.