Advertisment

ஆதிக்கத்தை நிரூபித்த பாஜக : குஜராத் மாநகராட்சி தேர்தலில் மீண்டும் வெற்றி

Gujarat Municipal Election : குஜராத் மாநராட்சி தேர்தலில் பாஜக மீண்டும் தனது ஆளுமையை நிரூபித்து வெற்றி பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
ஆதிக்கத்தை நிரூபித்த பாஜக : குஜராத் மாநகராட்சி தேர்தலில் மீண்டும் வெற்றி

Gujarat Municipal Election 2021 : இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  இதில் பல மாநிலங்களில் நகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல்களிலும் பாஜக கனிசமான வெற்றியை பெற்று வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் பாவ் நகர் ஆகிய 6 மாநகராட்சிகளில் கடந்த மாதம் 21-ந் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. 6 மாநகராட்சிகளில் நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தம் 2276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஜூனாகத் மாநகராட்சியில் 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

Advertisment

இந்த ஆறு மாகராட்சிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதனால் இந்த முறையும் குஜராத் மாகராட்சி தேர்தலில் பாஜக ஆதிகம் செலுத்தும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதனைத் தொடர்ந்து இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. இதில தொடக்கம் முதலே பாஜக பெரும்பாலான வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. மொத்தம் 576 வார்டுகளில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 236 வார்டுகளில் முன்னிலையில் இருந்தது. இதில் எதிர்கட்சியான காங்கிரஸ் 49 வார்டுகளில் மட்டுமே முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கையில் முடிவில் மொத்தம் 64 வார்டுகளை கொண்ட ஜம்நகர் மாநராட்சியில் பாஜக 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் எதிர்கட்சியாக காங்கிரஸ் 11 வார்டுகளிலும், இதர கட்சிகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதே மாநகராட்சியில் கடந்த 2015-ம் ஆண்டு பாஜக 38 இடங்களிலும், காங்கிரஸ் 24 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து 72 வார்டுகளை கொண்ட ராஜ்கோட் மாநகராட்சியில், பாஜக 52 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநராட்சியில் கடந்த தேர்தலில் பாஜக 38 இடஙகளிலும் காங்கிரஸ் 34 இடங்கலிலும் வெற்றி பெற்றிருந்தது.

மொத்த 6 மாநகராட்சியில் 576 இடங்களில் நடைபெற்ற தேர்தலில், 474 இடங்களில் முன்னிலை பெற்றிருந்த பாஜக, தற்போது 409 இடங்களில் வெற்ற பெற்றுள்ளது. இந்நிலையில், குஜராத் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, பாஜகவின் அகமதாபாத் அலுவலகத்தில் வெற்றி கொண்டாட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த விழாவில், முதலமைச்சர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் படேல், குஜராத் பாஜக கட்சித் தலைவர் சி ஆர் பாட்டீல் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றி குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், "மாநிலம் முழுவதும் உள்ள நகராட்சித் தேர்தல்களின் முடிவுகள், வளர்ச்சி மற்றும் நல்லாட்சி அரசியல் மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை தெளிவாகக் காட்டுகிறது. பாஜகவை மீண்டும் நம்பியதற்காக மாநில மக்களுக்கு நன்றி" என்று என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment