Advertisment

குஜராத்திகளுக்கு எதிரானவர்.. மேதா பட்கர், யாத்திரையில் இணைந்ததால் ராகுலைத் தாக்கும் பாஜக

பாஜகவைப் பொறுத்தவரை, மோடி அரசாங்கத்தின் முதன்மையான சர்தார் சரோவர் திட்டத்தின் தாமதமாக மேதா பட்கர் தான் காரணம்.

author-image
WebDesk
New Update
rahul gandhi

பாரத் ஜோடா யாத்திரையில் ராகுல் காந்தி உடன் மேதா பட்கர்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் தனது பாரத் ஜோடோ யாத்திரை மகாராஷ்டிராவைக் கடக்கும்போது, ​​மேதா பட்கரின் தோள்களில் கையை போட்டுக் கொண்டு நடந்து செல்லும் காட்சிகள் குஜராத்தில் அரசியல் புயலைக் கிளப்பியது.

Advertisment

குஜராத்தில் டிசம்பர் 1-ம் தேதி தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் பாஜக தனது மெகா பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில், அக்கட்சி மேதா பட்கருடன் தொடர்பு கொண்டதற்காக ராகுலை தாக்குவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டது. மேதாவே போலவே ராகுலும் குஜராத் மற்றும் குஜராத்திகளுக்கு எதிரானவர் என்று  பாஜக கூறியது.

குஜராத்தின் சர்தார் சரோவர் திட்டத்திற்கு எதிரான இயக்கத்தை தனது நர்மதா பச்சாவ் அந்தோலன் (NBA) மூலம் பட்கர் வழிநடத்தினார். இந்தத் திட்டத்தை குஜராத் வளர்ச்சியின் மையப் பொருளாக மாற்றிய நரேந்திர மோடி, சர்தார் சரோவர் திட்டத்தின் தாமதமாக மேதா பட்கர் தான் காரணம் என்று குற்றம் சுமத்தினார்.

இந்நிலையில், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், பட்கருடன் ராகுல் இருக்கும் படங்களின் ட்வீட்களை டேக் செய்து: காங்கிரஸும், ராகுல் காந்தியும் குஜராத் மற்றும் குஜராத்திகள் மீது தங்கள் விரோதத்தை மீண்டும் மீண்டும் காட்டியுள்ளனர். மேதா பட்கருக்கு தனது யாத்திரையில் முக்கிய இடம் அளித்ததன் மூலம், பல தசாப்தங்களாக குஜராத்திகளுக்கு தண்ணீர் மறுத்தவர்களுடன், தான் நிற்பதை ராகுல் காந்தி காட்டுகிறார். இதை குஜராத் பொறுத்துக் கொள்ளாது என்று கூறினார்.

பாஜக தலைவர்கள் மேதா பட்கரை விமர்சிப்பது இது முதல் முறையல்ல. ஆகஸ்டில், தேர்தல் பிரச்சாரத்தின் போது மேதா பட்கர் பெயரை எழுப்பிய முதல் பிஜேபி தலைவர் பூபேந்திர பட்டேல் ஆவார். அவர் பட்கரை "நகர்ப்புற நக்சல்" என்று குறிப்பிட்டார்.

மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீலும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “நகர்ப்புற நக்சல் மேதா பட்கர் நர்மதா திட்டத்தை எதிர்ப்பதன் மூலம் கட்ச் மற்றும் ஒட்டுமொத்த குஜராத்தின் வளர்ச்சியைத் தடுத்தார். குஜராத்தின் வளர்ச்சிக்கு எதிரான நகர்ப்புற நக்சலைக் கொண்டு, இன்று காங்கிரஸ் பாரத் ஜோடோ யாத்திரை நடத்துகிறது. நகர்ப்புற நக்சல்களை தங்கள் பக்கம் கொண்டு வந்தவர்களை குஜராத் ஒருபோதும் ஆதரிக்காது” என்று பாட்டீல் ட்வீட் செய்துள்ளார்.

தெற்கு குஜராத்தின் அதே பழங்குடியினர் தொகுதியில் ராகுல் திங்கள்கிழமை பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நர்மதா நதிக்கரையில் உள்ள பரூச் மாவட்டத்தில் பழங்குடியினர் தொகுதியான ஜகாடியாவில் நடைபெற்ற பேரணியில் பேசிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “காங்கிரஸை காம்பாட் வளைகுடாவில் தூக்கி எறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார்.

பிரதமர் மோடி செய்தது போல் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததோ, ராமர் கோவில் கட்டவோ, காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தை புதுப்பிக்கவோ காங்கிரஸ் ஒருபோதும் செய்திருக்காது என்று ஆதித்யநாத் கூறினார். காங்கிரஸால் நாட்டைக் காக்க முடியாவிட்டால், அல்லது அதை செழுமை நோக்கி கொண்டு செல்ல முடியாவிட்டால் அல்லது உங்கள் நம்பிக்கையை மதிக்காவிட்டால், ஒரு நலத்திட்டத்தை நேர்மையுடன் செயல்படுத்த முடியாவிட்டால், நாங்கள் ஏன் இந்த காங்கிரஸைத் தேர்ந்தெடுக்கிறோம்? என்றார்.

பல பிஜேபி தலைவர்கள் தங்கள் உரைகளில் நர்மதா நதி பற்றி சுட்டிக்காட்டினர்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மாண்ட்வியில் ஒரு பேரணியில் உரையாற்றிய போது, நர்மதா நதியை கட்ச் மற்றும் பூஜ் வரை கொண்டு சென்ற நீங்கள் கட்டிய கால்வாய், மத்தியப் பிரதேசத்தின் பக்கத்திலிருந்து நர்மதை நதியில் எந்தப் பற்றாக்குறையையும் சந்திக்காது என்று நான் நரேந்திரபாய்க்கு உறுதியளிக்கிறேன்.

காங்கிரஸ் மற்றும் மேதா பட்கர் போன்றோர், ஒவ்வொரு நாளும் நர்மதாவைக் காப்பாற்றுங்கள், நர்மதாவைக் காப்பாற்றுங்கள் என்று எதிர்த்தனர், கிளர்ச்சி செய்தனர்... நர்மதை இப்போது நாட்டைக் காப்பாற்றும் என்றார்.

மேலும் அப்தாசா சட்டமன்றத் தொகுதியில் நடந்த பேரணியில், சௌஹான், நர்மதா தண்ணீரை கால்வாய் மூலம் இப்பகுதிக்கு கொண்டு செல்வது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த மோடி, குழாய் அமைக்க முடிவு செய்ததாக கூறினார். தண்ணீர் உங்கள் விவசாய நிலங்களை சென்றடையும், அது இந்த இடத்தின் விவசாயிகளின் தலைவிதியையும் மாற்றிவிடும் என்றார்.

மோர்பியில், சௌஹான் கூறுகையில்: “மேதா பட்கரும் காங்கிரஸ் தலைவர்களும் நர்மதை தண்ணீரைக் குடிப்பார்கள், ஆனால் என் மீது அவதூறுகளை வீசுகிறார்கள். எனவே மத்திய பிரதேசம் எங்களுடையது, குஜராத்தும் எங்களுடையது என்று நான் அறிவித்தேன்.

சர்தார் சரோவர் திட்டத்தில் இருந்து மத்தியப் பிரதேசத்திற்கு நீர்மின்சாரத்தால் ஏற்படும் நன்மைகளையும் அவர் குறிப்பிட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment