கூர்கான் தாக்குதல் : பாதுகாப்பு தரும் இடத்தை நோக்கிச் செல்கின்றோம் - பாதிக்கப்பட்ட குடும்பம்

இந்த சம்பவம் நடந்த பின்பு எங்களின் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல பயப்படுகின்றார்கள். வேலைக்கு செல்லவும் பயப்படுகின்றார்கள்.

Gurgaon Muslim Family attack issue : வட இந்தியா முழுவதும் மிக கோலகலமாக ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த போது, டெல்லி கூர்கான் அருகில் இருக்கும் துமாஷ்பூர் பகுதியில் ஒரு கலவரமே நடந்துவிட்டது.

தங்களின் உறவினர்களை சந்திக்க வெளியூரில் இருந்து வந்த தில்ஷாத் என்ற இளைஞனை பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அடித்து துன்புறுத்திய வீடியோ பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் உண்டாக்கியது.

Gurgaon Muslim Family attack issue

இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அந்த குடும்பம் இனி ஒரு போதும் இந்த பகுதியில் எங்களால் வாழ இயலாது. எங்களுக்கு பாதுகாப்பில்லை. வாழ்வதற்கு மிகவும் பயமான சூழல் உருவாகியுள்ளது என்று கூறினார்கள்.

முகமது சாஜித் என்ற அந்த நபர் தன்னுடைய வீட்டை காலி செய்வதாக கூறியதோடு, ”நாங்கள் எங்கள் வீட்டை விற்றுவிட்டு,எங்களுக்கு மிகவும் பாதுகாப்பை தருகின்ற இடத்திற்கு செல்ல விரும்புகின்றோம். அது இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த சம்பவம் நடந்த பின்பு எங்களின் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல பயப்படுகின்றார்கள். வேலைக்கு செல்லவும் பயப்படுகின்றார்கள்.

எங்களின் அக்கம் பக்கத்திலும் வசிக்கும் நபர்களும் பயந்துள்ளனர். யாரும் நேரில் வந்து எங்களுக்கு ஆறுதல் கூட கூறவில்லை. எங்களுக்கு அருகில் வீடு கட்ட டைல்ஸ் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்த ஒரு இந்து நபர், தற்போது வீடு கட்டலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார் என்றும் கூறினார் சாஜித்.

மேலும் படிக்க : கூர்கான் தாக்குதல் : இங்கிருந்து வெளியேறுகிறோம்… எங்களுக்கு இங்கு பாதுகாப்பில்லை – கண்ணீர் விடும் குடும்பம்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close