ராஜஸ்தான் அமைச்சர் ஹரிஷ் சவுத்ரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர்களில் ஒருவரான இவரின் மேற்பார்வையில்தான், பஞ்சாப் தலைமையில் மாற்றம் நிகழ்த்தப்பட்டது. தற்போது, இவர் சண்டிகரில் கட்சித் தலைவர்களை சந்தித்துவருதாகக் கூறப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தின் ஏஐசிசி-யின் பொறுப்பாளராக ஹரிஷ் ராவத்துக்குப் பிறகு அவர் பதவியேற்கலாம் என்ற தகவல் பரவிவருகிறது. ராவத் தனது சொந்த மாநிலமான உத்தரகாண்டில் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், பஞ்சாப்பைப் போலவே ஒரே நேரத்தில் அங்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.
முன்னதாக, ராஜஸ்தான் அமைச்சர் ரகு சர்மா, குஜராத்தின் ஏஐசிசி-யின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட போது விவாதங்கள் ஏற்பட்டன. அதே போல, ராஜஸ்தானின் முக்கிய தலைவரான ஜிதேந்திர சிங், அசாமின் ஏஐசிசி பொறுப்பாளராக உள்ளார். முதல்வர் அசோக் கெலாட்டுக்கு நெருக்கமான சர்மா, மாநிலத்திலிருந்து பொறுப்பேற்ற இரண்டாவது மாநில தலைவர் ஆவார். தற்போது, நம் முன் இருக்கும் ஒரே கேள்வி என்னவென்றால், ராஜஸ்தானிலிருந்து மீண்டும் ஒருவர் AICC யின் தலைவராக நியமிக்கப்படுவாரா என்பது தான். சவுத்ரி கெஹ்லாட் நெருக்கமான வட்டாரத்தைச் சேர்ந்தவர் கிடையாது.
தேடுதல் வேட்டை
இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகத்திற்கு (ஐசிஎஸ்எஸ்ஆர்) புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. அதன் தலைவராக இருந்த பிராஜ் பிஹாரி குமார் இறந்தது முதலே, அந்தப் பதவி காலியாக உள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளாக காலியாக இருக்கும் அந்த பதவிக்கான நபரைத் தேர்ந்தெடுக்க, யுஜிசி தலைவர் பேராசிரியர் ரஜினிஷ் சுக்லா, பாஜக மாநிலங்களவை எம்பி ராகேஷ் சின்ஹா மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் வசந்த் ஷிண்டே ஆகியோர் அடங்கிய குழுவினர் பெயர் பட்டியலைத் தயாரித்து வருகின்றனர். தற்போது, பேராசிரியர் கனக் சபாபதி கவுன்சிலின் செயல் தலைவராக பணியாற்றி வருகிறார்.
மீண்டும் வரும் OPD
சுகாதாரத் துறை அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில், மத்திய அரசு நடத்தும் சப்தர்ஜங், ராம் மனோகர் லோஹியா, லேடி ஹார்டிங் ஆகிய மூன்று மருத்துவமனைகளில் சோதனை முயற்சியாக ஞாயிற்றுக்கிழமை OPD சேவைகள் தொடங்கவுள்ளது. இந்த மருத்துவமனை பட்டியலில், எப்போதும் பிஸியான OPD சேவையை நடத்திடும் டெல்லி எய்மஸ் மருத்துவமனையும் இணைந்துள்ளது. அங்கு கார்டியோடோராசிக் மையம், Anti-Coagulation Clinic-ஐ வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்தவுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil