Advertisment

ஆதித்யநாத் அரசின் புகழைக் கெடுக்க சர்வதேச சதி - ஹத்ராஸ் போலீஸ் குற்றச்சாட்டு

ஆதித்யநாத் தனது அரசுக்கு எதிரான சதித்திட்டங்கள் பற்றி பாஜக தொண்டர்களுகு எச்சரிக்கை விடுத்ததோடு, நாட்டிலும் மாநிலத்திலும் சாதி மற்றும் வகுப்புவாத கலவரங்களைத் தூண்ட விரும்புவோரை அம்பலப்படுத்த கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிவந்துள்ளது.

author-image
WebDesk
New Update
hathras gang rape, hathras rape, hathras dalits, yogi adityanath, ஹத்ராஸ் பாலியல் கொலை, உத்தரப் பிரதேசம், யோகி ஆதித்யநாத், uttar pradesh, hathras thakurs, hathras case, india news

ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் கூட்டு பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் மூலம், யோகி ஆதித்யநாத் அரசின் புகழைக் கெடுக்கவும் சாதிய அடிப்படையி கலவரங்களை தூண்டவும் சர்வதேச அளவில் சதி நடைபெறுவதாக உத்தரப் பிரதேச காவல்துறை கூறியுள்ளது. ஹத்ராஸில் உள்ள சந்த்பா காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக தேசத்துரோகம் உட்பட ஐபிசியின் பல கடுமையான பிரிவுகளின் கீழ் ஞாயிற்றுக்கிழ்மை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisment

இது குறித்து வட்டாரங்கள் கூறுகையில், “ஜஸ்டிஸ் ஃபார் ஹத்ராஸ் விக்டிம் கேர்ட் (justiceforhathrasvictim.carrd.co) என்ற வலைதளத்தில் எப்படி பாதுகாப்பாக போராடுவது எப்படி போலீஸாரை தவிர்ப்பது என்ற தகவலல் உள்ளது. இது சதி திட்டத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது. இந்த வலைதளம் இணையத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதால் தற்போது பார்க்க கிடைக்கவில்லை. இந்த வலைதளம் கலவரத்தின்போது போலீஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசும் சூழ்நிலைகளில் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை பட்டியலிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள பிளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆன்லைனில் பகிரப்பட்ட வாசகங்களில் இருந்து பெரும்பாலான கருத்துகள் அகற்றப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தனர்.

ஐபிசி பிரிவு 109 (ஏதாவதொரு குற்றத்தைத் தூண்டிவிடும் எவரேனும், அந்த தூண்டிவிடுதலின் விளைவால் தூண்டப்பட்ட செயல் புரியப்பட்டால், மற்றும் அத்தகைய தூண்டுதலின் தண்டனைக்காக, இச்சட்டத்தால் வெளிப்படையான ஷரத்து செய்யப்பட்டிருக்காதபோது, அக்குற்றத்திற்காக வகை செய்யப்பட்டுள்ள தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்), பிரிவு 120பி (குற்றச் சதி) 124 ஏ (தேசத்துரோகம்), 153 ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், நல்லிணக்கத்தை குலைக்க தவறான செயல்களைச் செய்தல்), மேலும், ஐபிசியின் 4 துணை பிரிவுகள் 153 பி, (குற்றச்சாட்டுகள், தேசிய-ஒருங்கிணைப்புக்கு எதிரானவை) 420 (மோசடி மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்துக்களை வழங்கத் தூண்டுதல்) ஆகிய ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆயுள் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தண்டனைக்குரிய தண்டனையை அளிப்பதற்கான நோக்கத்துடன் தவறான ஆதாரங்களைத் தயாரிப்பது, எந்தவொரு நபருக்கும் தவறான ஆதாரங்களை வழங்குவதாக அச்சுறுத்தல், மோசடி செய்தல், நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்திற்காக மோசடி செய்தல் மற்றும் அவதூறாக அறியப்பட்ட விஷயங்களை அச்சிடுதல் அல்லது அத்தகைய வேலைகளைச் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) சட்டத்தின் பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது அரசுக்கு எதிரான சதித்திட்டங்கள் பற்றி பாஜக தொண்டர்களுகு எச்சரிக்கை விடுத்ததோடு, நாட்டிலும் மாநிலத்திலும் சாதி மற்றும் வகுப்புவாத கலவரங்களைத் தூண்ட விரும்புவோரை அம்பலப்படுத்த கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிவந்துள்ளது.

“வளர்ச்சியை விரும்பாதவர்கள், நாட்டிலும் மாநிலத்திலும் சாதி மற்றும் வகுப்புவாத கலவரங்களைத் தூண்ட விரும்புகிறார்கள். வளர்ச்சியை நிறுத்த விரும்புகிறார்கள்” என்று ஆதித்யநாத் உத்தரப் பிரதேசத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரவிருக்கும் இடைத்தேர்தல்களுக்கான மறுஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் கூறினார்.

மேலும், “இவர்கள் கலவரத்தின் பின்னணியில் அரசியல் லாபத்தைப் பெற விரும்புகிறார்கள். அதனால்தான் அவர்கள் ஒவ்வொரு நாளும் புதிய சதித்திட்டங்களை நடத்துகிறார்கள்” என்று அவர் கூறினார்.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஞாயிற்றுகிழமை கட்சித் தொண்டர்களுடன் உரையாடியபோது, குறிப்பாக தொற்றுநோய்க் காலத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன. இது அவர்களுடைய அரசியல் எதிரிகளால் ஜீரணிக்க முடியவில்லை என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Uttar Pradesh Yogi Adityanath
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment