Advertisment

கண்டிப்பா 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளுங்கள்.. ஹாட் டாபிக்கான சந்திரபாபு நாயுடு பேச்சு!

நாம் இருவர் நமக்கு இருவரை விடுங்கப்பா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சந்திரபாபு நாயுடு சர்ச்சை

சந்திரபாபு நாயுடு சர்ச்சை

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு விழாவில் பேசிய சர்ர்சைக்குரிய கருத்து தற்போது டாக் ஆஃப் டவுனாக மாறியுள்ளது.

Advertisment

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அம்மாநில மக்களுக்கு மிகவும் பிடித்தமான அரசியல் தலைவராக பார்க்கப்படுகிறார். நாட்டு மக்களின் நலுனுக்கான தினம் தினம் யோசித்து புது புது திட்டங்களை அறிமுகப்படுத்துவது, மாநில வளர்ச்சி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஆகியவற்றில் அதிகம் கவனம் செலுத்துவது என பல காரணங்களை ஆந்திரா மக்கள் கூறுகின்றனர்.

இன்னும் சில மாதங்களில் ஆந்திராவின் கனவு திட்டமான போலவரம் நீர்பாசனத்திட்டம் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில், சந்திரபாபு நாயுடு நிகழ்ச்சி ஒன்றில் மக்களுக்கு கொடுத்த அட்வைஸ் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாயுடு, இந்த கருத்தை முன்னிலைப்படுத்துவது முதன்முறை அல்ல. இருந்த போதும் இந்த முறையும் சேம் ரியாக்‌ஷன்கள் மற்றும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அப்படி என்ன சொன்னார்? என்று கேட்கிறீர்களா?

இதோ அமராவதியில் நடைப்பெற்ற விழாவில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது,

"10 ஆண்டுகளாக ஆந்திராவின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி மாநில மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். ஆனால் குறைந்து வரும் மக்கள் தொகையால் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உழைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை குறையும்

இந்தியாவில் மிகச் சிறப்பான ஒன்று இங்கு இருக்கும் குடும்ப முறை. மனிதவளம் என்பது மிக முக்கியமானது. அதனால், நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன். ஒரேயொரு குழந்தையாவது நீங்கள் பெற்றுக் கொண்டு மனித வளத்தை வளர்க்க வேண்டும்.

தற்போது இளையஞர்கள் யாரும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை. அப்படியே திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாலும், அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவதில்லை. இது மிகவும் ஆபத்தான முறை. இந்தியா கவுரவமே குடும்ப முறையான வாழ்க்கை தான். நாம் அதனை பாதுகாக்க வேண்டியது அவசியம். இதனால், தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள வேண்டும். மக்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும் என்பதற்கு தான் இதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.

இறப்பு விகிதத்தை விட பிறப்பு விகிதம் குறைந்தால் அது எதிர்காலத்தில் பெரிய பிரச்னையாக மாறும். அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள தம்பதிகளை ஊக்கப்படுத்த வேண்டிய நேரம் இது. 4 குழந்தைகள் என்பதே சரியானது” என்று கூறியுள்ளார்.

ஆந்திராவில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டவர்கள் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடையையும் கடந்த வருடம் முதல்வர் சந்திரபாபு நாயுடு நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ... கண்டிப்பா 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளுங்கள் என்ற சந்திரபாபு நாயுடுவின் பேச்சு ஆந்திராவின் சோஷியல் மீடியாவில் இன்றைய ஹைலைட்.

Chandrababu Naidu Andhra Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment