Advertisment

வயநாடு நிலச்சரிவு: கேரளாவில் கனமழை, நிலச்சரிவு ஏற்படும் என மத்திய அரசு கேரள அரசை முன்பே எச்சரித்தது: அமித்ஷா

மீட்பு பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
wayanad 2

கனமழையால் கேரளா மாநிலம் வயநாட்டில் நேற்று (ஜூலை 30) அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது. இன்று (ஜூலை 31) 2-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கி 200 பேர் காயம் அடைந்துள்ளனர். 

Advertisment

சாலியாறு ஆற்றில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் மீட்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட உடல்கள் நிலம்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி அருகே உள்ள மலைப்பகுதிகளில் நேற்று அதிகாலை (செவ்வாய்க்கிழமை) பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (KSDMA) தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. மலப்புரம், நீலம்பூர் வழியில் செல்லும் சாலியாறு ஆற்றில் பலர் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனிடையே, முண்டக்காய் பகுதியில் பல வீடுகள், கடைகள், வாகனங்கள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளன. 

மேலும், பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்கு செல்லும் பாலம் இடிந்து அடித்து செல்லப்பட்டுள்ளதால் மீட்பு பணிகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது. 

ஆங்கிலத்தில் படிக்க:   Wayanad Landslide Live Updates: Over 180 missing as rescue ops continue, death toll at 156

மத்திய அரசு நிவாரணம் 

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். நிலைமையை சமாளிக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் உறுதியளித்தார். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரும், வயநாடு முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தியும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 

தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  கண்ணூரில் இருந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கு தேடுதல் மற்றும் மீட்பு பணியை மேற்கொள்வதற்காக ராணுவ வீரர்கள் குழு ஒன்று புறப்பட்டு சென்றது. 

மக்களவையில் ராகுல் பேச்சு 

மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.  

“வயநாடு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நிலச்சரிவுகள் அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட கூடிய பகுதிகளை கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

ராகுல் வயநாடு பயணம் ஒத்திவைப்பு 

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை காங்கிரஸ் தலைவர்கள் இன்று (ஜூலை 31) பார்வையிட இருந்தனர். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கேரள எம்.பிக்கள் கேசி வேணுகோபால்,  இடி முகமது பஷீர், எம்.கே ராகவன் ஆகியோர் இன்று காலை வயநாடு செல்விருந்தனர்.

இன்று வயநாடு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக அங்கு செல்ல முடியாது என அதிகாரிகள் கூறியதை அடுத்து, அவர்கள் வயநாடு பயணத்தை ஒத்திவைத்தனர்.

வயநாடு நிலச்சரிவில்.நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. சூரல்மலா கிராமத்தில் உள்ள 200 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகவும் தகவல். முண்டக்கை டவுன் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

சாலி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அட்டமலை கிராமத்தில், சாலியாற்றில் சடலங்கள் மிதந்து வருவதாக கிராம மக்கள் தகவல். கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து சென்ற இரண்டு ஹெலிகாப்டர்கள் வயநாடு பகுதியில் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டு கோழிக்கோட்டில் தரையறுக்கப்பட்டுள்ளது. சாலை மார்க்கமாக மீட்பு பணியினர் குழுவினர் வயநாட்டிற்கு பயணம் செய்து வருகின்றனர். 

தமிழ்நாடு, கர்நாடகா மாநில முதல்வர்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு உதவி புரிவதாக அறிவித்துள்ளனர். 

2 தமிழர்கள் உயிரிழப்பு

கேரளாவில் கட்டட வேலைக்கு சென்ற தமிழகத்தின் கூடலூர், புளியம்பாறையை சேர்ந்த காளிதாஸ் என்பவரும், அதே ஊரைச் சேர்ந்த கல்யாணகுமார் என்பவரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 

பினராயி விஜயன் பேட்டி

"வயநாடு நிலச்சரிவு சம்பவம் நம் நாடு இதுவரை சந்தித்திராத பெரும் துயரமான நிகழ்வு. நேற்று மிகக் கடுமையான மழை பெய்தது. நேற்று நள்ளிரவு 2 மணிக்கும், 4.10 மணிக்கும்  என 2 முறை நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை 93 பேரின் உடல்களை மீட்டுள்ளோம் இதன் எண்ணிக்கை மாறலாம். 

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு 128 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றிரவு தூங்கச் சென்ற பலர் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். 

இன்னும் பலரின் உடல்கள் நிலச்சரிவு இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது. வயநாட்டில் 45 முகாம்களிலும், மாநிலம் முழுவதும் 118 முகாம்களிலும் 5,531 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு படை, என்.டி.ஆர்.எப்., போலீசார் உள்ளிட்டோர் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ராணுவம் மற்றும் கடற்படையின் பல்வேறு பிரிவுகள் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றன. வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது. பாதிக்கப்பட்ட மக்களுடன் நின்று, நாம் நமது ஆதரவை நல்க வேண்டிய நேரம்." கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். 

மேலும் ஒரு தமிழர் பலி 

கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் ஒரு தமிழரின் உடல் பாறை இடுக்கிலிருந்து கண்டெடுப்பு.  நீலகிரி மாவட்டம் பந்ததூரைச் சேர்ந்த ஷிஹாப் சூரல் மலைப் பகுதியில் உள்ள பள்ளி வாசலில் மத ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.  வெள்ளம், நிலச்சரிவில் பள்ளிவாசல் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டதில் ஷிஹாப் பலியான சோகம்.

ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 3வது நபரின் உடல் மீட்பு

வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்  

இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை மலப்புரம்கோழிக்கோடுவயநாடுகண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சுஎச்சரிக்கையை வெளியிடுகிறது. பத்தனம்திட்டாஆலப்புழாகோட்டயம்எர்ணாகுளம்இடுக்கிதிருச்சூர்பாலக்காடு ஆகிய பகுதிகளுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை. திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்திற்கு மழை எச்சரிக்கை இல்லை.

கேரளாவில் கனமழை, நிலச்சரிவு ஏற்படும் என மத்திய அரசு கேரள அரசை முன்பே எச்சரித்தது: அமித்ஷா

ஜூலை 23 அன்று, மத்திய அரசு மழை மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாய எச்சரிக்கையை கேரள அரசுக்கு வழங்கியது. ஒரே நாளில் ஒன்பது என்.டி.ஆர்.எப் குழுக்கள் அனுப்பப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தெரிவித்தார்.

70 உடல்களை மீட்ட ராணுவம்: 1,000 பேர் மீட்பு  

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில், நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ள நிலையில், இதுவரை 70 உடல்களை மீட்டுள்ளதாகவும், இதுவரை 1,000 பேரை மீட்டுள்ளதாகவும் ராணுவ வீரர்கள் கூறினர். செவ்வாய்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் வயநாட்டின் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது, குறைந்தது 156 பேர் இறந்தனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment