Husband arrested for getting wife killed by snake in Kerala
Husband arrested for getting wife killed by snake in Kerala : கேரளத்தின் கொல்லம் பகுதி அனச்சலை சேர்ந்தவர் சூரஜ். அவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு உத்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. பத்தினம்திட்டா மாவட்டத்தின் அதூரில் இருக்கும் தனியார் வங்கி ஒன்றில் பணி புரிந்து வருகிறார்.
Advertisment
உத்ராவை திருமணம் செய்யும் போது அவருக்கு 98 பவுன் நகையும், சீர் வரிசையும் சீதனமாக தரப்பட்டது. சூரஜிற்கு அந்த நகை மற்றும் பணத்தை எல்லாம் சொந்தமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. இதனால் அவருடைய மனைவி உத்ராவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
யாருக்கும் சந்தேகம் வரக்கூடாத வகையில் கொலை செய்வது எப்படி என்று யோசித்து அவர், அது தொடர்பாக யுடியூப்களில் பல்வேறு ஐடியாக்களை பார்த்துள்ளார். கடந்த 3 மாதங்களாக பாம்புகளை ஏவி மனிதர்களை எப்படி கொல்வது என்பதை கற்றுக் கொண்ட அவர் மார்ச் 2-ம் தேதி ரூ. 5000-க்கு பாம்பு ஒன்றை வாங்கி அவரை கடிக்க வைத்துள்ளார். ஆனால் உத்ராவை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியுள்ளனர்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்ற உத்ரா ஏப்ரல் 22-ம் தேதி மீண்டும் தன்னுடைய கணவர் வீட்டிற்கு வந்தார். ஆனால் மே 7ம் தேதி, கருநாகம் ஒன்றை உத்ரா மீது ஏவி கடிக்கவிட்டுள்ளார். இரண்டு முறை கடித்ததை உறுதி செய்த சூரஜ் அங்கிருந்து வெளியே சென்றார். ஆனால் சிறிது நேரத்தில் உத்ராவின் அம்மா, உத்ராவை எழுப்ப அவரது அறைக்கு சென்ற போது உத்ரா அங்கே மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் அங்கே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
இந்த மரணத்தில் சந்தேகம் அடைந்த உத்ராவின் பெற்றோர்கள், ஏற்கனவே மார்ச் மாதம் இப்படி ஒரு சம்பவம் நடந்து, மகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள், என்று கூறியிருந்தனர். மேலும் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். காவல்துறை விசாரணையில் இந்த திடுக்கிடும் சம்பவம் குறித்த உண்மைகள் வெளியாகியுள்ளது.