நீட் தேர்வினால் பறிப்போன அடுத்த உயிர்... 10 வது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை

மருத்துவ கனவை எட்ட முடியாமல் தோல்வி கண்ட மாணவர்கள் விரக்தியில் தற்கொலை செய்துக் கொள்வது பெற்றோர்களுக்கு பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

நீட் நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த ஐதராபாத் மாணவி ஒருவர் 10 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வினால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்ட நிகழ்வே, பலரின் இதயத்தையும் இன்று வரை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கும், நிலையில் இந்தாண்டும் நீட் தேர்வில் தோல்விக் கொண்ட மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் மற்றொரு நீங்க துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன் தினம், ( 4.6.18) மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வின் முடிவுகள் வெளியாகின. இதில் மருத்துவ கனவை எட்ட முடியாமல் தோல்வி கண்ட மாணவர்கள் விரக்தியில் தற்கொலை செய்துக் கொள்வது பெற்றோர்களுக்கு பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியான மறுநாளே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி எலி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். பிரதீபாவின் மரணத்திற்கு மத்திய அரசே காரணம் என்றும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த மாணவி ஜஸ்லீன் கவுர் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மருத்து கனவு பறிபோனதால் தேர்வு முடிவு வெளியான நாள் முதல் ஜஸ்லீன் சோகமாக இருந்துள்ளார். இந்நிலையில் தான் நேற்று

இவர் டாக்டராக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்ச்சி பெறாததால் ஜஸ்லீன் கவுர் மன வருத்தத்தில் இருந்து வந்தார். இதனால் அவரது பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி வந்தனர். ஆனால் ஜஸ்லீன் கவுர் இதை ஏற்காமல் மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை ஐதராபாத்தில் உள்ள மயூரி பகுதியில் உள்ள 10 மாடி வணிக வளாகத்தின் உச்சிக்குச் சென்று அங்கிருந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

மாடியில் இருந்து குதித்ததில் ஜஸ்லீன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலியே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஐதராபாத் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு முடிவுக்கும் தற்கொலை தீர்வல்ல என்று பலமுறை மாணவ – மாணவிகளுக்கு அறிவுரை வழங்கியும் இதுப்போன்ற தற்கொலைகள் தொடர்வது தொடர் கதையாக மாறி வருவது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close