Advertisment

ஹைதராபாத் வன்புனர்வு கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுட்டுக் கொலை; எப்படி நடந்தது இந்த என்கவுண்ட்டர்?

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மறுத்துவர் பாலியல் வன்புனர்வு கொலை வழக்கில் குற்றவாளிகளை தெலங்கானா போலீசார் வெள்ளிக்கிழமை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
hyderabad case, hyderabad rape case, hyderabad case news, hyderabad rape case encounter, hyderabad encounter, hyderabad, hyderabad rape case news, ஹைதராபாத் குற்றவாளிகள் என்கவுண்ட்டர், hyderabad rape murder case, hyderabad gang rape case, hyderabad rape case accused encounter, ஹைதராபாத் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புனர்வு கொலை வழக்கு, hyderabad gang rape case news, hyderabad today news, hyderabad news today, hyderabad latest news

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புனர்வு செய்யப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக பெண்கள் அமைப்புகள் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பாலியல் வன்புனர்வு கொலை வழக்கில் நவம்பர் 29 ஆம் தேதி 4 பேர் கைது கைது செய்த தெலங்கானா போலிசார் அவர்களை நிதிமன்றக் காவலில் உயர் பாதுகாப்பு கொண்ட செரப்பள்ளி மத்திய சிறையில் அடைத்தனர். போலிசார் அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 கொலை, பிரிவு 375 வன்புணர்வு, பிரிவு 362 கடத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த விவகாரத்தில் தேசிய அளவில் கொந்தளிப்பு ஏற்பட்டதையடுத்து, தெலங்கானா இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை அமைத்தது. இந்த வழக்கை மஹபூப்நகர் முதல் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அமர்வு விசாரணைக்கு ஒதுக்கியது.

தெலங்கானா போலீசார் வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பின், வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சட்டப்பள்ளிக்கு நான்கு குற்றவாளிகளையும் அழைத்துச் சென்றனர். அங்கேதான் நவம்பர் 27 ஆம் தேதி பெண் கால்நடை மருத்துவரின் உடல் தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டது.

குற்றம் நடந்த இரவு என்ன நடந்தது என்பதை நிகழ்வுகளை வரிசைப்படுத்த உதவும் என்று அவர்களை அழைத்து சென்றோம் என்று போலிச்சார் கூறுயுள்ளனர்.

கொலையான பெண்ணின் உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய இடத்திற்கும், அவரது இரு சக்கர வாகனம் அப்புறப்படுத்தப்பட்ட இடத்திற்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்துச் செல்ல போலீசார் விரும்பினர். பொதுமக்களுடன் மோதலைத் தவிர்ப்பதற்காக நள்ளிரவில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்துச் செல்லப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.

பின்னர் போலீசார் அவர்களை அழைத்துக்கொண்டு சட்டப்பள்ளியை அடைந்ததும், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் போலீசாரைத் தாக்கி தப்பிச் செல்ல ஒருவருக்கொருவர் சைகை காட்டியதாக காவல்துறை தெரிவித்தனர். அவர்கள் காவல்துறையினரைத் தாக்கிய பின்னர், நால்வரும் வெட்ட வெளியை நோக்கி ஓடியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார் தற்காப்புக்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி சி சஜ்ஜனார் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களைத் தாக்கினால் காவல்துறையினர் பார்த்துக்கொண்டிருப்பார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

Telangana Hyderabad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment