'நீங்கள் சாகப் போகிறீர்' என்று என் தந்தையிடம் கூறினேன்! - ராகுல் காந்தி உருக்கம்

அரசியலில், நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்கு துணை நின்றால், நீங்கள் கொல்லப்படுவீர்கள்.

தனது தந்தை ராஜீவ் காந்தி கொலையாளிகளை முழுமையாக மன்னித்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் சென்றிருந்த ராஜீவ் காந்தி, அங்கு ஐஐஎம் முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம், ‘ராஜீவ் காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டீர்களா?’ என மாணவர்களிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ராகுல், “மனிதவெடிகுண்டு மூலம், ராஜீவ் கொல்லப்பட்ட பிறகு, நானும் பிரியங்காவும் கடுமையான துயரத்தில் இருந்தோம். பல ஆண்டுகள் ராஜீவ் கொலையாளிகள் மீது ஆவேசத்தில் இருந்தோம். ஆனால், இப்போது அவர்களை முழுமையாக மன்னித்து விட்டோம்” என்றார்.

மேலும், தங்களுடம் பேட்மிண்டன் விளையாடிவர்களே, பாட்டி இந்திரா காந்தியை கொன்றனர் என்பதை நினைவு கூர்ந்த ராகுல், ராஜீவ் கொலையானதற்கு பின்பு, பாதுகாப்பு சூழல் மாறியதால், இரவு, பகல் பாராமல் 15 பேருடனேயே நடமாடும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் ராகுல் வேதனை தெரிவித்தார்.

அரசியலில், நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்கு துணை நின்றால், நீங்கள் கொல்லப்படுவீர்கள். அதன் அடிப்படையில் தான் எனது பாட்டியும், தந்தையும் கொல்லப்பட்டார்கள்.

“எங்கள் பாட்டியும், எங்கள் தந்தையும் கொல்லப்படுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். எனது பாட்டி என்னிடம், அவர் என்றாவது ஒருநாள் கொல்லப்படுவார் என்றார். நான் என் தந்தையிடம், ‘நீங்கள் ஒருநாள் கொல்லப்படுவீர்கள் என்றேன்” என வேதனையுடன் ராகுல் தெரிவித்தார்.

×Close
×Close