Advertisment

13 பயணிகளுடன் மாயமான AN-32 ரக இந்திய விமானப்படை விமானம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IAF AN-32 Aircraft crash : No survivors among 13 on board aircraft

IAF AN-32 Aircraft crash : No survivors among 13 on board aircraft

அசாம் மாநிலம், ஜோர்கட் நகரின் புறநகரில் உள்ள ரோவாரியா விமானத் தளத்தில் இருந்து இன்று பிற்பகல் 12.25 மணிக்கு அருணாச்சலப் பிரதேசம், மெச்சுகா விமானத் தளத்துக்கு, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் 13 பேருடன் புறப்பட்டது. அதில் 8 ஊழியர்கள் மற்றும் 5 பயணிகள் இருந்தனர்.

Advertisment

விமானம் 12.25 மணிக்கு புறப்பட்டும் இதுவரை மெச்சுகா விமானத் தளத்துக்குச் வந்து சேரவில்லை. 13.00 மணிக்கு அது இலக்கை சென்றடைந்திருக்க வேண்டும். இந்த மெச்சுகா விமானப்படைத் தளம் இந்திய - சீன எல்லையான மெக்மோகன் லைன் அருகே அமைந்துள்ளது. விமானம் குறித்த எந்தத் தகவலும் இல்லை என்பதால் விமானத்தைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்திய விமானப்படையின் Sukhoi-30MKI, C-130 ரக விமானங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.

ஆண்டோனோவ் An-32 ரக விமானம், 1984 முதல் இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நம்பிக்கையான விமானமாக An-32 ரக விமானம் இதுவரை பயன்பட்டு வந்திருக்கிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment