மீண்டும் பணிக்கு திரும்பினார் அபிநந்தன்… விமானப்படை தளபதியுடன் விமானப் பயிற்சி

நான் தந்தை – மகன் என இருவருடனும் பணியாற்றியுள்ளது எனக்கு பெருமை அளிக்கிறது – இந்திய விமானப்படை தளபதி

IAF chief Air Chief Marshal B S Dhanoa takes last sortie with Abhinandan
IAF chief Air Chief Marshal B S Dhanoa takes last sortie with Abhinandan

IAF chief Air Chief Marshal B S Dhanoa takes last sortie with Abhinandan : இந்தியாவின் விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் பி.எஸ். தனோவா இன்றுடன் பணி நிறைவு பெறுகிறார். இதனைத் தொடர்ந்து இறுதியாக மிக் 21 விமானத்தில், விங் கமாண்டர் அபிந்தன் வர்த்தமானுடன் பயணித்தார். பதான்கோட் ராணுவ விமான தளத்தில் இந்த இறுதி பயிற்சியை மேற்கொண்டார் ஏர் மார்ஷல் பி.எஸ். தனோவா.

IAF chief Air Chief Marshal B S Dhanoa takes last sortie with Abhinandan
IAF chief Air Chief Marshal B S Dhanoa takes last sortie with Abhinandan

IAF chief Air Chief Marshal B S Dhanoa takes last sortie with Abhinandan

இந்திய விமானப்படை தளபதி கார்கில் போரின் போது, பாகிஸ்தானுடன் போரிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 30 நிமிட பயிற்சியை முடித்துக் கொண்ட தனோவா செய்தியாளர்களிடம் பேசுகையில், மீண்டும் விங் கமாண்டராக இந்திய விமானப்படையில் பணிக்கு திரும்பிய அபிநந்தன் வர்த்தமானுக்கு வாழ்த்துகளை பதிவு செய்தார். நானும் 1988ம் ஆண்டு இடைக்கால ஓய்வில் அனுப்பப்பட்டேன். மீண்டும் நான் விமானத்தை ஓட்ட 9 மாதங்கள் ஆனது. ஆனால் அபிநந்தனை நினைத்து பெருமையடைகின்றேன். அவர் வெறும் 6 மாதத்திலேயே திரும்பி வந்துவிட்டார்.

எங்கள் இருவருக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருக்கின்றது என்று தெரிவித்த தனோவா, நான் கார்கிலில் பாகிஸ்தானுக்கு எதிராக போர் புரிந்தேன். அபிநந்தனோ பாலகோட் தாக்குதலில் போர் புரிந்தார். நான் அவருடைய தந்தையுடன் விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றேன். என்னுடைய இறுதி விமானப் பயிற்சி அவர் மகனுடன் என்பது எனக்கு மிகவும் பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று அவர் கூறினார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

IAF chief Air Chief Marshal B S Dhanoa takes last sortie with Abhinandan
IAF chief Air Chief Marshal B S Dhanoa takes last sortie with Abhinandan

அபிநந்தன் இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் விமானத்தை துரத்திக் கொண்டு சென்று, அதனை சுட்டு வீழ்த்தியவர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கீழே விழுந்த மிக்-21 பைஸன் விமானத்தில் இருந்து அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர், சர்வதேச போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆகஸ்ட் 15ம் தேதி, இந்தியாவின் வீரதீர செயல்கள் புரிவோருக்கு வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான வீர் சக்ரா விருது அபிநந்தனுக்கு வழங்கப்பட்டது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Iaf chief air chief marshal b s dhanoa takes last sortie with abhinandan varthaman on mig

Next Story
73 வயது மருத்துவரை தாக்கிய தோட்ட தொழிலாளிகள்… அசாமில் நாளை மருத்துவர்கள் போராட்டம்Assam doctors strike Dr Deban Dutta died
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com