பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் சிஇஓ ரீட் ஹேஸ்டிங்ஸ், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை டெல்லியில் சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பு குறித்து அனுராக் தனது ட்விட்டர் பக்கத்தில், " இன்று நுகர்வோர் கதைகள் மூலம் உலகம் முழுவதும் பயணிக்கிறார்கள். இந்தியா பல்வேறு வாய்ப்புகளையும் யோசனைகளையும் பல மொழிகளில் வழங்குகிறது" என பதிவிட்டுள்ளார்.
இச்சந்திப்பின் போது, இந்தியாவில் புதிதாக அமல்படுத்தியுள்ள ஐடி விதிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என மூத்த அலுவலர்கள் கூறுகின்றனர்.
புதிய ஐடி விதிகள் படி, சமூக வலைதளங்கள், ஆன்லைன் செய்தி நிறுவனங்கள், ஓடிடி தளங்கள் ஆகியவை வெளியிடப்படும் பதிவுகள், கருத்துகள், செய்திகள் குறித்த புகார்களை விசாரிக்க மூன்றடுக்கு குறைதீர்க்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதற்காக விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களது தகவல்கள் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். புகார்கள் குறித்து விசாரணை அதிகாரிகள் விசாரித்து, நீக்கப்பட வேண்டிய பதிவுகளை 36 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடு விதிகளை அரசு கொண்டுள்ளது.
நண்பர்களின் திடீர் கலந்துரையாடல்
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், பிரதமர் நரேந்திர மோடியின் ட்வீட்க்கு Namasthae Hello dear friend, dear friend என ஹிந்தியில் ரிட்வீட் செய்துள்ளார்.
மேலும், "நமது மூலோபாய கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியதற்கு நன்றி. இந்தோ-பசிபிக் பகுதியை ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட மதிப்புகள் கொண்ட பகுதியாக மாற்றுவதில் இந்தியாவும் பிரான்சும் உறுதியாக உள்ளன. நாம் இதை தொடர்ந்து செய்வோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடி, எனது நண்பர் இமானுவேலுடன் ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து விவாதித்தேன். மேலும், இந்தோ-பசிபிக் பகுதியில் இந்தியா, பிரான்ஸ் இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு பற்றியும் விவாதித்தோம்" என தெரிவித்திருந்தார்.
இந்தப் பேச்சுவார்த்தையானது, குவாட் உச்சி மாநாட்டிற்கு முன்பு வந்த சுவாரஸ்யமான பரிமாற்றமாகும், மேலும், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து-அமெரிக்க ஒப்பந்தத்தால் கவலையில் பிரான்ஸ் இருக்கும் போது வந்துள்ளது கவனிக்கத்தக்கது.
ஏன் பாகுபாடு
மத்திய ஆயுத காவல் படைகளின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான விடுப்பு முறையை அரசாங்கம் அமல்படுத்தியுள்ள நிலையில், சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்களது சாதாரண விடுமுறையை எண்ணிக்கையை 15 நாட்களிலிருந்து 28 நாட்களாக அதிகரிக்க உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
பாதுகாப்புப் படைக்கு 28 நாள்கள் விடுமுறை வழங்கும் நிலையில், நாங்களும் அத்தகைய சூழ்நிலையில் தான் பணியாற்றுகிறோம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால், இந்த கோரிக்கையை உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. ஆயுத காவல் படையுடன் உங்களை ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். ஏனென்றால், ஆயுத காவல் படை முழுமையாக எல்லை பணியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆனால், சிஆர்பிஎப் தேர்தல், கலவரம் போன்ற நிகழ்வுகளின் போது ஈடுபடுத்தப்படுவது காரணமாகச் சொல்லப்படுகிறது.