Advertisment

கொரோனாவின் RAT வீட்டு சோதனைக்கு எதிராக ஐ.சி.எம்.ஆர் அறிவுறுத்தல்

ICMR advises against indiscriminate covid home testing using RAT RTPCR சோதனை முடிவுக்காகக் காத்திருக்கும்போது வீட்டு தனிமைப்படுத்தும் நெறிமுறையைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுவதாகவும் ஆலோசனையில் வலியுறுத்தப்பட்டது.

author-image
WebDesk
New Update
ICMR advises against indiscriminate covid home testing using RAT Tamil News

ICMR advises against indiscriminate covid home testing using RAT Tamil News

ICMR advises against indiscriminate Covid home testing using RAT Tamil News : கோவிட் 19 பரிசோதனை வீட்டிலேயே செய்யும் விரைவான ஆன்டிஜென் சோதனைகளை (Rapid Antigen Tests (RAT)), அறிகுறி நபர்களிடமும், ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட பாசிட்டிவ் நிகழ்வுகளின் உடனடி தொடர்புகளிலும் மட்டுமே செய்யவேண்டும் எனக் கடந்த புதன்கிழமை ஐ.சி.எம்.ஆர் ஒரு ஆலோசனையை வெளியிட்டது.

Advertisment

"கண்மூடித்தனமான சோதனை அறிவுறுத்தப்படவில்லை. பயனர் கையேட்டில், உற்பத்தியாளர் விவரித்த நடைமுறையின் படி வீட்டு சோதனை நடத்தப்பட வேண்டும்” என்று ஐ.சி.எம்.ஆர் பரிந்துரைத்துள்ளது.

தற்போது, ​​புனேவைச் சேர்ந்த மைலேப் தயாரித்த கோவிசெல்ஃப் (CoviSelf (PathoCatch)) கோவிட் -19 OTC Antigen LF சாதனம் என்கிற இந்த ஒரே ஒரு ராட் கோவிட் -19 வீட்டு சோதனை கிட் மட்டுமே வீட்டு உபயோகத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

RAT மூலம் நெகட்டிவ் முடிவுகளை சோதிக்கும் அனைத்து அறிகுறி உள்ள நபர்களும் உடனடியாக RTPCR-ஆல் சோதிக்கப்பட வேண்டும் என்று ஐசிஎம்ஆர் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. "இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் குறைந்த வைரஸ் சுமை கொண்ட சில பாசிட்டிவ் நிகழ்வுகளை RAT-கள் இழக்கக்கூடும்" என்று இந்த ஆலோசனை கூறுகிறது. வீட்டு சோதனை மொபைல் பயன்பாட்டை அனைத்து பயனர்களும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும், பயன்பாட்டில் உள்ள தரவு ஐசிஎம்ஆர் கோவிட் -19 சோதனை போர்ட்டலுடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பான சேவையகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்றும் ஐசிஎம்ஆர் கூறியது.

"மொபைல் பயன்பாடு மற்றும் பயனர் பதிவைப் பதிவிறக்குவதற்குப் பயன்படுத்தப்படும் அதே மொபைல் தொலைபேசியுடன் சோதனை முறையை முடித்த பின்னர் அனைத்து பயனர்களும் சோதனை ஸ்ட்ரிபின் படத்தைக் கிளிக் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

அனைத்து RAT- நெகட்டிவ் அறிகுறி நபர்களும் சந்தேகத்திற்குரிய கோவிட் -19 நபர்களாகக் கருதப்படலாம் என்றும், RTPCR சோதனை முடிவுக்காகக் காத்திருக்கும்போது வீட்டு தனிமைப்படுத்தும் நெறிமுறையைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுவதாகவும் ஆலோசனையில் வலியுறுத்தப்பட்டது.

"பாசிட்டிவ் முடிவை சோதிக்கும் அனைத்து நபர்களும் உண்மையான பாசிட்டிவ் நபர்களாகக் கருதப்படலாம். மேலும், மீண்டும் சோதனை தேவையில்லை. அனைத்து சோதனை பாசிட்டிவ் நபர்களும் ஐ.சி.எம்.ஆர் மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoH & FW) நெறிமுறையின்படி வீட்டுத் தனிமை மற்றும் கவனிப்பைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அது கூறுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Virus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment